குளிர்காலத்தில் உடலை நன்றாக பராமரிக்க உடற்பயிற்சி செய்வது அவசியம். குளிர்காலத்தில் எழுந்திருப்பது மிகவும் கடினமாக இருக்கும்.
அதிலும் படுக்கையில் இருந்து எழவே மனமில்லாமல் போகும் குளிர் நாட்களில் உடற்பயிற்சி செய்வது சிரமமாக இருக்கும். பொதுவாக கோடையில் உடற்பயிற்சி செய்வதை விட குளிர்காலத்தில் உடற்பயிற்சி செய்வதால் அதிக கலோரிகளை எரிக்க முடியும்.
குளிர்காலத்தில் உடற்பயிற்சி செய்யும்போது வியர்வை குறைவாக வரும், எளிதில் சோர்வு ஏற்படாது. குளிரில் உடற்பயிற்சியை விறுவிறுப்பான நடையுடன் தொடங்கினால் நன்றாக இருக்கும்.
சற்று நேரம் ஜாகிங் செய்யலாம் இவை உங்கள் இதயத் துடிப்பை அதிகரிக்கும் மற்றும் உங்கள் வரவிருக்கும் ஒர்க்அவுட் அமர்வுக்கு மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் உங்களை தயார்படுத்தும்.
மேலும், சூரிய நமஸ்காரம் முழுமையான உடல் பயிற்சிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. எனவே அதை தவறாமல் செய்யவும். சுவாசப் பயிற்சியான பிராணயாமம், மனம் மற்றும் உடல் ஆகிய இரண்டிற்கும் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொடுக்கிறது.
குளிர்காலத்தில் பிராணாயாமம் செய்வது, ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்சனைகளை குறைக்கும். மேலும், தியானம் செய்வது என்பது, குளிர்காலத்தில் நேர்மறையான ஆற்றலை உருவாக்கி, உடலை சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும்.