21 61862cf4752c
ஆரோக்கிய உணவு

புற்றுநோயை ஏற்படுத்தும் மீனைப் பற்றி தெரியுமா? கட்டாயம் இதை படியுங்கள்

ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்களை உண்டால் புற்றுநோய், உடல் உபாதைகள் உருவாகும் வாய்ப்பு உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது.

இந்த வகையான மீனை சாப்பிட வேண்டாம் என இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. எதனால் இந்த மீனை சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள்
ஆப்பிரிக்க கெளுத்தி மீனின் விலங்கியல் பெயர் ‘Clarias Gariepinus ஆகும். இந்த வகை மீன்கள் ‘ஏலியன்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.

இவை உள்ளூர் நீர்நிலைகளில் கலந்து நதிகள், குளம் குட்டைகளில் வியாபித்து தற்போது நமது மாநிலத்தில் இருக்கும் உள்ளூர் மீன் வகைகளை கொன்றொழித்து விடுகின்றன.

இந்த வகை ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள், தான் வாழ்வதற்காக பிற மீன்களை கொன்று திண்ணும் தன்மை கொண்டவை.

இவ்வகை மீன்கள் கிடைக்காவிட்டால், பாசி போன்ற நீர்நிலைகளில் இருக்கும் தாவரங்களை உண்டும் பிழைக்கும். எனவே இவை carnivorous மற்றும் omnivorous ஆக மாறும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன.

பல நேரங்களில் தன் இனத்தையே வேட்டையாடி உண்ணும் முறையையும் கடைபிடிக்கின்றன. இவ்வகை கெளுத்தி மீன் ஒரு சீசனுக்கு நான்கு லட்சம் முட்டைகள் போடும்.

ஆனால், நம் நீர்நிலைகளில் உள்ள கெளுத்தி வெறும் 7,000 முதல் 15,000 முட்டைகளை மட்டுமே போடுகின்றன.

இவ்வகை மீன்கள் குறைவான ஆழத்தில் சேற்றில் கூட வளரும் தன்மை கொண்டவை. ஆக்சிஜன் குறைவாக கிடைக்கும் தண்ணீரில் கூட பல நாள்கள் உயிர் வாழும்.

வறண்டு போன நிலத்தில் கூட காற்றைக் குடித்து உயிர் வாழும் தன்மை கொண்டது. சாக்கடையில் கூட வாழும் தன்மை இதற்கு உண்டு.

இந்த மீன்களை உண்டால் என்ன ஆகும்?
இவ்வகை ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களில் ஈயம், அலுமினியம், இரும்பு போன்ற உலோகங்கள் மிக அதிகமான அளவில் அபாயகரமான அளவில் இருக்கின்றன

இவற்றை உண்ணும் நமக்கு உலோகங்கள் ரத்தத்தில் சேர்ந்து அதனால் புற்றுநோய் / உடல் உபாதைகள் உருவாகும் ஆபத்து அதிகமாகிறது.

மேலும், இந்த வகை மீன்களை விற்பதும் வாங்குவதும் நமது ஆரோக்கியத்திற்கு உலை வைக்கும் செயலாக அமையலாம்.

குறிப்பு
சிலர் வசிக்கும் இடங்களில் இந்த வகை மீன்கள் மட்டும்தான் கிடைக்கின்றன என்றால், புரதச்சத்து எடுக்கும் நோக்கில் இவற்றை நன்றாக அவித்து உண்பது இவற்றில் இருக்கும் உலோகங்களை பெரும்பான்மை நீக்கி விடுகின்றது.

Related posts

இரத்தத்தில் இருக்கும் கொழுப்பையே நொடியில் அடித்து விரட்டும் அற்புத சூப்!அற்புதமான எளிய தீர்வு

nathan

இதை படியுங்கள்.. எது நல்லது, எப்போது சாப்பிடலாம்? பசு நெய், எருமை நெய்…

nathan

பாதம் தொடர்பான உபாதைகள் குணமாக ஊதா அரிசி!…

nathan

தேங்காயை அரைக்காமலேயே இலகுவாக‌ கெட்டியான‌ தேங்காய்ப்பால் எடுப்பது எப்படித் தெரியுமா!இத படிங்க!

nathan

உங்கள் கவனத்துக்கு தூங்குறதுக்கு முன்னாடி வாழைப்பழம் சாப்பிடுறீங்களா?

nathan

முடி உதிர்வுக்கு குட்பை… அசத்தல் நெல்லிக்காய்!

nathan

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த ஒரு பொருள் மின்னல் வேகத்தில் எடையைக் குறைக்க உதவும்!

nathan

உங்களுக்கு தெரியுமா அசைவம் சாப்பிடுவோரை விட சைவம் சாப்பிடுவோருக்கு பக்கவாதம் வரும் ஆபத்து..!

nathan