29.2 C
Chennai
Saturday, Jul 5, 2025
53110
ஆரோக்கிய உணவு

பீட்சாவில் சேர்க்கப்படும் பொருள் இவ்வளவு ஆபத்தா? தெரிஞ்சிக்கங்க…

பிரபல உணவு நிறுவனங்களால் தயாரிக்கப்படும் பீட்சா மற்றும் சிக்கனில் பிளாஸ்டிக்கை உருக்க பயன்படுத்தப்படும் ரசாயனமாகிய பித்தலேட்டுகள் உள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

தற்போதைய நவீன காலகட்டத்தில் பெரும்பாலும் வீடுகளில் சமைத்து உண்பவர்களை விட, உணவகங்களில் வாங்கி உண்ணக் கூடிய நபர்கள் அதிகரித்து விட்டனர் என்றே கூறலாம்.

இந்த துரித உணவுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி முடிவை நீங்கள் அறிந்து கொண்டால் இனி அவற்றை வாங்கி உண்ண பலமுறை யோசிப்பீர்கள்.

தற்பொழுது ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகம், பாஸ்டன் பல்கலைக்கழகம் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் துரித உணவுகள் குறித்த அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஒரு ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி பிரபல உணவு தயாரிப்பு நிறுவனம் ஆகிய மெக்டொனால்ட்ஸ் பர்கர், பீட்சா ஹட், டாமினோஸ், டகோ பெல் மற்றும் சிபொட்டில் உள்ளிட்ட பிரபலமான உணவகங்களில் உள்ள சீஸ் பீட்ஸா மற்றும் சிக்கன் போன்ற மாமிச உணவுகளில் அதிக அளவிலான பித்தலேட்டுகள் எனும் ரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ரசாயனம் பெரும்பாலும் அழகு சாதன பொருட்கள், சோப்பு, கையுறைகள், கம்பிக் கவர்கள் ஆகியவை தயாரிப்பில் தான் அதிக அளவில் பயன்படுத்தப்படுமாம்.

இந்த ரசாயனம் பிளாஸ்டிக்கை மிருதுவாக மாற்றுவதற்கும், வளைப்பதற்கும் பயன்படுத்தப்படுவதாம். ஆராய்ச்சியாளர்கள் சிக்கன், பீட்சா போன்ற 64 உணவு மாதிரிகளை ஆராய்ச்சி செய்ததில் 80 சதவீத உணவுகளில் இந்த பித்தலேட்டுகள் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

மேலும் இந்தப் பித்தலேட்டுகள் காரணமாக பெண்கள் கருவுறுதல் 70% பாதிக்கப்படும் என கூறியுள்ளனர். மனித உடலிலுள்ள எண்டோகிரைனை சீர்குலைக்கும் இந்த ரசாயனம் ஆஸ்துமா மற்றும் மூளை குறைபாடு உள்ளிட்ட உடல் நலக் கோளாறுகளையும் ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

இது குறித்து கூறியுள்ள ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர், நாம் உட்கொள்ளக் கூடிய துரித உணவுகளில் இந்த பித்தலேட்டுகள் எனும் ரசாயனம் கண்டறியப்பட்டுள்ளது. பித்தலேட்டுகள் எனும் ரசாயனம் உடலில் இருந்து நீண்ட நாட்கள் மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.

Related posts

உடலில் கொழுப்புகளை கரைக்கும் பாசிப்பயறு!…

nathan

தினமும் ஹோட்டலில் சாப்பிடாதீங்க – ஆபத்து

nathan

அடிவயிற்று கொழுப்பை கரைத்து விரட்டும் ஒரு துளி சாறு….பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

6ம் எண்ணில் பிறத்தவர்களின் பொதுவான குணங்கள் -தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

அதிக அளவு பதப்படுத்தப்பட்ட உணவுகளால் புற்றுநோய் அபாயம்

nathan

கோடைக்காலத்தில் சீக்கிரம் கெட்டுப் போகும் உணவுப் பொருட்கள்!!!தெரிஞ்சிக்கங்க…

nathan

இட்லி சாப்பிடுங்கள்!

nathan

தெரிஞ்சிக்கங்க…நரம்பு தளர்ச்சி பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிட வேண்டியவை!

nathan

விற்றமின் A

nathan