திருமணம் என்பது பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களினது வாழ்க்கையிலும் திருப்பு முனையை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வாகும்.
அந்த திருப்பு முனை சிறப்பாகவும் இருக்கலாம் இல்லை அதற்கு மாறாகவும் இருக்கலாம். அது அவர்களின் வாழ்க்கை துணையை பொருத்து அமைகின்றது.
சில தோஷம் உள்ளவர்கள் துணையானாலும் வாழ்க்கையில் பல திருப்பு முணைகள் ஏற்படும். குறிப்பாக மாங்கல்ய தோஷம்.
பெண்ணின் ஜாதகத்தில் உள்ள சில கிரகங்களின் சேர்க்கை கோச்சாரநிலை, தசா புத்திகள் போன்ற காரணங்களால் திருமணம் நடைபெறுவது தாமதமாகும்.
அல்லது அந்த பெண்ணுக்கு உரிய வயதில் திருமணம் நடக்காமல் தடையாக இருக்கும் கிரக அமைப்புகளைத்தான் மாங்கல்ய தோஷம் என்கிறார்கள்.
ஜோதிட ரீதியாக ஒரு பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்திற்கு எட்டாமிடம் என்பது மாங்கல்ய ஸ்தானமாகும்.
இதுவே ஆயுள் ஸ்தானம் மற்றும் தாம்பத்திய உறவு பற்றியும் கூறும் இடமாகும்.
2-ம் இடத்தில் நிற்கும் கிரகம் 8-ம் இடத்தைப் பார்க்கும். 8-ம் இடத்தில் நிற்கும் கிரகம் 2-ம் இடத்தைப் பார்க்கும். 2-ம் இடத்திற்கும் 8-ம் இடத்திற்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு.
பெண்ணின் ஜனன கால ஜாதகத்தில் 2, 8-க்கு தொடர்புடைய பாவ கிரகங்கள் மாங்கல்ய தோஷத்தை ஏற்படுத்துகிறது.
இந்த தோஷத்தால் தம்பதிகளுக்குள் வாக்குவாதம் அதிகமாக இருக்கும்.
வாழ்க்கைத் துணையால் பயனற்ற நிலை உண்டாகும். சுயமாக சிந்தித்து செயல்படத் தெரியாத ஆண், குடும்பத்தை முறையாக வழிநடத்தத் தெரியாத, சம்பாதிக்காத, சோம்பேறியாக, ஊதாரியாக வாழும் கணவர் அமைவார்.
இல்லையேல் சில குடும்பத் தலைவர்கள் மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காமல் தன் விருப்பப்படியே மனைவி வாழ வேண்டும் என்று விரும்புவார்.
கைப்பாவையாக நடத்துவது, அடிமை போல் வேலை வாங்குவதும் 8-ம் மிடக் குறைபாட்டில் அடங்கும். வாழ்க்கைத் துணைக்கு தீராத, தீர்க்க முடியாத அதிகப்படியான கடன் அல்லது நோய் இருக்கும்.
தம்பதிகள் தொழில், உத்தியோக நிமித்தமாக கருத்து வேறுபாடு இல்லாமல் பிரிந்து வாழ்வது அல்லது கருத்து வேறுபாடு காரணமாக நிரந்தரமாக பிரிந்து வாழ்வது. அல்லது தம்பதிகளில் ஒருவர் மட்டும் இறந்து விடவும் வாய்ப்பு உள்ளது.