21 618032b8
ஆரோக்கிய உணவு

சூப்பரான ஊத்தப்பம் செய்வதற்கு….

நான்கு கப் அரிசியை வைத்து சுவையான ஊத்தப்ப தோசை எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இதற்கான மாவை சுலபமாக 15 நிமிடத்தில் தயார் பண்ணி விடலாம்.

அரிசு ஊறுவதற்கு மட்டும் கொஞ்சம் நேரம் எடுக்கும். எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

 

சூப்பரான ஊத்தப்பம் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

அரைப்பதற்கு புழுங்கல் அரிசி – 4 கப்,
முழு உளுந்து – 1 கப்
துவரம் பருப்பு – கால் கப்
வெந்தயம் – 4 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப.
ஊத்தப்பத்துக்கு

வெங்காயம் – 2
ப.மிளகாய் – 2
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு – 6 பல்
கொத்தமல்லி தழை – சிறிதளவு
துருவிய சீஸ் – 1 கப்
எண்ணெய் – தேவைக்கு
கேரட் – 3
செய்முறை
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கேரட், இஞ்சியை துருவிக் கொள்ளவும். அரிசி, உளுந்து, துவரம் பருப்பு, வெந்தயத்தை 4 மணி நேரம் ஊற வைத்து, தோசை மாவு பதத்துக்கு முதல் நாளே அரைத்து தேவையான உப்புக் கலந்து, புளிக்க விடவும்.

தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு குழிக் கரண்டியால் கனமாக தோசை வார்த்து, மேலே பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, கேரட் தூவவும்.

கடைசியாக துருவிய சீஸை தூவி சுற்றி எண்ணெயை விட்டு, மூடி வைத்து, குறைந்த தணலில் வேக விடவும். வெந்ததும் எடுத்து பரிமாறவும். சூப்பரான சீஸ் ஊத்தப்பம் ரெடி.

Related posts

க்ரில் சிக்கன் சாப்பிட்டால் புற்றுநோய் வருமா?

nathan

உடலில் உள்ள அதிகளவு அமிலத்தை சரிசெய்யும் சில இயற்கை வழிகள்!தெரிஞ்சிக்கங்க…

nathan

பெண்களே தட்டையான வயிற்றைப் பெற வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

உங்களுக்கு தெரியுமா நண்டு யாரெல்லாம் சாப்பிடலாம்? இவ்வளவு நன்மைகளா?

nathan

முட்டையை அதிகம் சாப்பிடுவதால் இப்படி ஒரு பிரச்சனை வருமா..?

nathan

உருளைக் கிழங்கின் மகத்துவம்

nathan

காளானை உணவில் அதிகமாக சேர்த்து கொள்வது நல்லதா? தெரிந்துகொள்வோமா?

nathan

தெரிஞ்சிக்கங்க…இரண்டு கிராம்பை வாயில் போட்டு மென்று சாப்பிடுங்க…

nathan

பூண்டு பால்

nathan