28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
ice cream health3
மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…கர்ப்பிணி பெண்கள் ஐஸ் க்ரீம் சாப்பிட வேண்டும் ஏன் தெரியுமா?

நெஞ்செரிச்சல் மற்றும் புளிப்பு ஏப்பம் ஆகிய இரண்டுமே கர்ப்பிணி பெண்களை அச்சுறுத்தும் ஒரு விஷயமாகும். இந்த புளிப்பு ஏப்பத்திற்கு அதிகமாக மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்வதும் சிரமமாக இருக்கும். உங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயத்தை வைத்து இந்த புளித்த ஏப்பத்தை எப்படி விரட்டுவது என்பது பற்றி காணலாம்.

உணவு கட்டுப்பாடு

சாப்பாட்டு விஷயத்தில் பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுதல், அதிக கொழுப்பு உள்ள உணவுகளையும், செரிமானமாக கடினமாக உள்ள உணவுகளையும் சாப்பிடுவதை குறைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.

மருந்துகள்?

என்ன தான் இருந்தாலும், கர்ப்பமாக உள்ள சமயத்தில் டயட்டை கடைப்பிடிப்பது பலருக்கு கடிமானதாக தான் இருக்கும். கர்ப்பத்தின் இரண்டாவது பருவகாலத்தில் எதை சாப்பிட்டாலும் புளித்த ஏப்பம் வரும். இதற்கு மருத்துவரும் மருந்துகளை பரிந்துரைப்பார்.

மீண்டும் வந்துவிடும் :

சாப்பிட்ட பிறகு இந்த புளித்த ஏப்பம் வராமல் இருக்க, மாத்திரைகளை சாப்பிட்டாலும் கூட அது அந்த சமயத்தில் மட்டும் சரியாகும். அதன் பின்னர் மீண்டும் ஆரம்பித்துவிடும்.

வெண்ணிலா

புளித்த ஏப்ப பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக, மருத்துவரிடம் ஆலோசித்த பிறகு நான் வெண்ணிலா ஐஸ் க்ரீம் சாப்பிட்டேன். எனக்கு முற்றிலுமாக இந்த புளித்த ஏப்ப பிரச்சனை தீர்ந்து போனாது.

குளிர்ச்சியடைகிறது

ஒரு டம்ளர் குளிர்ந்த பாலை குடித்தால், புளித்த ஏப்பம் தீர்ந்து போகும் அல்லவா? அதே போல தான் ஐஸ் க்ரீம் சாப்பிடுவதாலும் புளித்த ஏப்ப பிரச்சனை தீர்ந்துவிடுகிறது. இது உங்களது செரிமான மண்டலத்தை குளிர்ச்சியடைய செய்கிறது. வெண்ணிலா ஐஸ் க்ரீம் மற்ற ஐஸ் க்ரீம்களுடன் ஒப்பிடும் போது மிக குறைந்த கலோரிகளை கொண்டது. இது கொழுப்பு நீக்கப்பட்டதும் கூட..

அடிக்கடி வேண்டாம்

ஆனால் இந்த ஐஸ் க்ரீமை தினமும் சாப்பிடுவது சிறந்ததல்ல. எப்போதாவது சாப்பிடலாம். அடிக்கடி சாப்பிட வேண்டும் என்றால் சாப்பிட்ட பிறகு யோகார்ட் சாப்பிடலாம்.

குறிப்பு :

இந்த முறையை கடைப்பிடிப்பதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டியது அவசியம். இது கர்ப்பகாலம் என்பதால், மருத்துவரின் ஆலோசனையின்றி எதையும் செய்ய கூடாது.

Related posts

பற்களில் உள்ள அசிங்கமான மஞ்சள் கறையை எளிதில் நீக்க வேண்டுமா? அப்ப இத முயன்று பாருங்கள்

nathan

இந்த உணவுகளை சாப்பிட்டா சிறுநீரகத்தில் கல் உருவாகும்…

nathan

சினைப்பை கட்டிகள் எப்படி உருவாகிறது? தடுக்கும் வழிமுறைகள்

nathan

ஸ்மார்ட்போன் அதிகம் சூடாவதைத் தடுக்கும் 7 வழிகள்!

nathan

இரவில் தாய்ப்பால் கொடுப்பதால் பல் சொத்தை ஏற்படுமா? உண்மை என்ன

nathan

அடிபட்ட புண் ஆறாமல் இருக்கா? இதோ எளிய நிவாரணம்! இந்த மூலிகைகளில் ஒன்றை பயன்படுத்தி பாருங்க

nathan

கர்ப்பகாலத்தில் அதிகமாக இனிப்பு சாப்பிட்டால் குழந்தைக்கு ஆஸ்துமா வருமா?

nathan

சப்பாத்திக் கள்ளியின் மருத்துவ குணங்கள் – தெரிந்துகொள்வோமா?

nathan

காதலால் பாழாகும் பள்ளி-கல்லூரி மாணவிகளின் வாழ்க்கை

nathan