மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா பொடுகு தொல்லையில் இருந்து நிரந்தர தீர்வு பெற உதவும் உருளைக்கிழங்கு ஜூஸ்!

உருளைக்கிழங்கானது பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்படக் கூடிய காய்கறிகளில் ஒன்று. எந்த காய்கறி வகைகளுடனும் சேரக்கூடிய ஒன்றென்றால் அது உருளைக்கிழங்கு தான். இத்தகைய உருளைக்கிழங்கு எந்த வகை சமையலுக்கும் ஏற்றது. தன்னுள்ளே இது ஏகப்பட்ட சத்துக்களை மறைத்து வைத்துள்ளது. அதாவது, உருளைக்கிழங்கில் உள்ள ஊட்டச்சத்துக்களாவன: கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீசு, மெக்னீசியம், காப்பர், நார்ச்சத்து, புரதச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின்கள் பி6 மற்றும் சி, மேலும் பல. இந்த சத்துக்கள் அனைத்துமே மிகுந்த நன்மை பயக்கக்கூடியவை.

உருளைக்கிழங்கில் நிறைய சத்துக்கள் உள்ளதால், அவை உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்க வல்லது என்பதை அனைவரும் புரிந்திருப்பீர்கள். உடலுக்கு மட்டுமல்ல, சருமம் மற்றும் கூந்தலுக்கும் கூட உருளைக்கிழங்கு மிகப் பெரிய அளவில் உதவக்கூடியது. எப்படி என்று கேட்கிறீர்களா? உருளைக்கிழங்கின் சாறு, சருமம் மற்றும் கூந்தல் பிரச்சனைகளுக்கு எளிதில் தீர்வு வழங்கக்கூடிய ஒன்று. சரும சுருக்கம், கூந்தல் உடைவு மற்றும் மேலும் பல கூந்தல் பிரச்சனைகளை சரி செய்ய வேண்டுமெனில், தொடர்ந்து உருளைக்கிழங்கு சாற்றை பயன்படுத்தி வந்தாலே போதும்.

 

கெமிக்கல் நிறைந்த பொருட்கள் சருமம் மற்றும் கூந்தலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதை தற்போது மக்கள் அதிகம் உணர்ந்துள்ளனர். அதன் விளைவு, இயற்கை மற்றும் ஆர்கானிக் பொருட்களின் மீது மக்களின் ஆர்வம் திரும்பியுள்ளது என்றே கூறலாம். இவற்றிற்கும் நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும் என்று பலர் எண்ணுகின்றனர்.

 

ஆனால், அப்படி தேவையே இல்லை. சாதாரணமாக கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்தே நம்மை காத்துக் கொள்ளலாம். அதிலும், அழகான, ஆரோக்கியமான, நீளமான கூந்தலை பெற வேண்டுமெனில் நிறைய பணம் செலவு செய்ய வேண்டும் என்பதெல்லாம் தேவையில்லாத ஒன்று. உங்கள் வீட்டு சமையல் அறையில் இருக்கக்கூடிய உருளைக்கிழங்கு மட்டுமே போதுமானது. உருளைக்கிழங்கின் சாறு அத்தனை வியக்கத்தக்க மாற்றத்தை ஏற்படுத்திடும்.

 

கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. ஒரு கப் உருளைக்கிழங்கு சாற்றின் மூலம், உடலில் இழந்த வைட்டமின் சி சத்தை உடனே ஈடு செய்திடலாம். வைட்டமின் சி சத்தானது, உடலில் இரும்பு சத்து உறிஞ்சப்படுவதற்கு உதவுகிறது. கூந்தல் வளர்ச்சிக்கு இரும்புச்சத்து மிகவும் தேவையான ஒன்று. அதனால் தான் கூந்தல் வளர்ச்சிக்கு உருளைக்கிழங்கு பெரிதும் பயனளிக்கிறது.

உருளைக்கிழங்கு சாறு எப்படி செய்வது?

* முதலில் 2 அல்லது 3 உருளைக்கிழங்குகளை நன்கு கழுவி எடுத்துக் கொண்டு தோல் சீவி வைத்துக் கொள்ளவும்.

* தோல் சீவிய உருளைக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸர் ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.

* வேண்டுமென்றால், உருளைக்கிழங்கை அரைக்காமல், துருவியும் கூட பயன்படுத்திக் கொள்ளலாம்.

* இப்போது, அரைத்த உருளைக்கிழங்கு அல்லது துருவிய உருளைக்கிழங்கை ஒரு சுத்தமான துணியில் போட்டு ஒரு மூட்டையாக கட்டிக் கொள்ளவும்.

* இப்போது அந்த துணியில் உள்ள உருளைக்கிழங்கை பிழிந்து சாறு எடுக்கவும்.

* பொடுகு தொல்லையால் அவதிப்படுபவர்கள், உருளைக்கிழங்கு சாற்றுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து பயன்படுத்தவும்.

முடி உதிர்வு பிரச்சனை

அதிகப்படியான முடி உதிர்வு பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா? அப்படியெனில், உருளைக்கிழங்கு சாற்றை தொடர்ந்து பயன்படுத்தி வாருங்கள். நல்ல பலன் கிடைக்கும். இந்த சாற்றை பயன்படுத்துவதன் மூலம், பொடுகு தொல்லையை நீக்கி, உயிரிழந்து காணப்படும் கூந்தலை கூட ஆரோக்கியமாக மாற்றிட முடியும். நல்ல இயற்கை கூந்தல் பராமரிப்பு முறைக்கு உருளைக்கிழங்கு சாறு மிகவும் ஏற்றது. இதனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், வலுவான, பொலிவான மற்றும் ஆரோக்கியமான கூந்தலை சுலபமாக பெற்றிடலாம்.

பொடுகு தொல்லை

கூந்தல் பிரச்சனைகளிலேயே மிகவும் எரிச்சலூட்டக்கூடிய ஒன்றென்றால் அது, பொடுகு தொல்லை தான். பொது இடங்களில் மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்று. இந்த பிரச்சனையை முறையாக கையாண்டு பராமரிக்க தவறும் பட்சத்தில், நீண்ட நாட்களுக்கு இந்த பிரச்சனை தொடரக்கூடும். சில சமயங்களில், பொடுகு நீங்கும் ஷாம்புக்கள் கூட பலனளிக்க தவறிவிடுகின்றன. அதுப்போன்ற தருணங்களில், உருளைக்கிழங்கு சாற்றை ஸ்கால்ப்பில் சில நாட்களுக்கு தொடர்ந்து தடவி வாருங்கள். இப்படி செய்வதன் மூலம், பொடுகு தொல்லை காணாமல் போவதோடு, கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்தும் கிடைக்கப் பெறும்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”இதையும் படிங்க” background=”” border=”” thumbright=”no” number=”3″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

செய்முறை:

* பாதி கப் அளவிற்கு உருளைக்கிழங்கு சாற்றை எடுத்துக் கொள்ளவும்.

* அத்துடன், 1 முதல் 2 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லை மற்றும் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

* தயார் செய்ய கலவையை கூந்தல் மற்றும் ஸ்கால்ப்பில் படும் படி நன்கு தேய்க்கவும்.

* அரை மணிநேரம் அப்படிய ஊற விடவும்.

* பின்னர், மிதமான ஷாம்பு பயன்படுத்தி கூந்தலை அலசிடவும்.

குறிப்பு:

* உருளைக்கிழங்கு சாறு தயாரித்தவுடன் உடனே பயன்படுத்திட வேண்டும்.

* நீண்ட நேரத்திற்கு வைத்திருந்து உருளைக்கிழங்கு சாற்றை பயன்படுத்தவே கூடாது.

* சாறு எடுப்பதற்கான உருளைக்கிழங்கை நன்கு பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும். பச்சை நிற உருளைக்கிழங்கு, அடர் நிற உருளைக்கிழங்கு, முளைக்கட்டிய உருளைக்கிழங்கு ஆகியவற்றை பயன்படுத்தவே கூடாது.

* விருப்பப்படுபவர்கள், உருளைக்கிழங்கு சாற்றை குடிக்கவும் செய்யலாம். இதன்மூலம், உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய பலன்கள் கிடைக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button