25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
2 152
ஆரோக்கிய உணவு

ரத்த நாளங்களில் கொழுப்பு படியாமல் இருக்க எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்

நம் உடலுக்கு மிகவும் முக்கியமான உறுப்புகளில் ரத்த நாளங்களும் ஒன்று, அவை தான் ஆக்ஸிஜன் நிரம்பிரய ரத்தத்தை இதயத்திற்கும் உடலின் பிற பாகங்களுக்கும் கொண்டு செல்ல உதவிடுகிறது. ஒவ்வொரு ரத்த நாளங்களும் ட்யூப் வடிவத்தில் இருக்கும். அவற்றில் மூன்று லேயர்கள் இருக்கின்றன.

இண்டிமா,மிட்,அட்வெண்டியா. இவற்றில் இண்டிமா என்பது உள்ளே இருக்கக்கூடியது, மிட் என்பது நடுவில் இருக்கும். அதோடு இதயத்திலிருந்து வரக்கூடிய கூடுதல் பிரசரை இது தாங்கிடும். அட்வெண்டியா இந்த ரத்த நாளங்களையும் பிற திசுக்களையும் ஒன்றினைக்கும் பாலங்களாக இருக்கும். இவற்றில் மிகப்பெரிய ரத்தநாளமாக சொல்லப்படுவது ஆவுர்டா.

இவற்றுடன் சிறிது சிறிதாக ஆர்டெரிரோல்ஸ் மற்றும் கேப்பிலரீஸ் என்ற இரண்டு வகை நாளங்கள் இணைந்திருக்கும். இந்த ரத்த நாளம் எனப்படுவது உடல் முழுவதிலுமே இருக்கும். இவை ஆரோக்கியமாகவும், நடுவில் எந்த தடங்கல்களும் இல்லாமல் இருந்தால் மட்டுமே உடலின் இயக்கங்கள் சிறந்ததாக இருக்கும்.

ரத்த ஓட்டம் :

எப்போதுமே உடலின் எல்லா பாகங்களுக்கும் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டியது அவசியம் ஒரு வேலை கொழுப்புத் திட்டுக்கள் ரத்த நாளங்களில் படிய ஆரம்பத்தால் ஒரு கட்டத்தில் ரத்தம் சீராக சென்று வர முடியாது அதனால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும்.

ரத்த நாளத்தில் படியும் திட்டு பல்வேறு பொருட்களால் ஆனது. கொழுப்பு,கொலஸ்ட்ரால்,கால்சியம்,ஃபிப்ரின் என ரத்தத்தில் கலந்து சுற்றிக் கொண்டிருப்பவை ஆங்காங்கே படிய ஆரம்பிக்கும்.

கெட்ட கொழுப்பு :

யாருக்கு எல்டிஎல் எனப்படுகிற கெட்ட கொழுப்பு அதிகமிருக்கிறதோ அவர்களுக்கு இப்படியான அடைப்புகள் உருவாகும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. இவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஆகியவையும் ஏற்படக்கூடும்.

அதோடு இப்படி கொழுப்பு படிவதார் ஆர்டரி தொற்று நோய்களும் ஏற்படகூடும், இதன் தீவிரம் அதிகரித்தால் மாரடைப்பு பக்கவாதம் ஆகியவை ஏற்பட்டு உயிர் பிரிவதற்கு கூட வாய்ப்புகள் உண்டு. அதனால் ரத்த நாளங்களை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டியது அவசியம்.

பூண்டு :

ரத்த நாளங்களை சுத்தப் படுத்த பூண்டினை நீங்கள் பயன்படுத்தலாம். நீங்கள் சாப்பிடும் உணவில் அதிகமாக பூண்டு சேர்த்துக் கொள்ளுங்கள். இதயம் தொடர்பான பிரச்சனை இருப்பவர்கள் பூண்டு பயன்படுத்தலாம். இது கெட்ட கொழுப்பினை கரைக்கு பெரிதும் துணை நிற்கிறது.

ஒரு கிளாஸ் தண்ணீரில் நான்கைந்து பூண்டினை சிறிது சிறுதாக நறுக்கி கொதிக்க வைத்திடுங்கள். அந்த நீர் ஆறியதும் எடுத்து பருகலாம். அலர்ஜி ஏதேனும் இருந்தால் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும்.

மாதுளம்பழம் :

ரத்தநாளங்களை சுத்தப்படுத்த பெரிதும் உதவிடுகிறது இந்த பழம். இதில் அதிகப்படியாக விட்டமின் சி மற்றும் பாலிபினால் இருக்கிறது அவை சிறந்த ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்டாக செயல்படுகிறது. அதே நேரத்தில் உடலில் நிட்ரிக் அமிலம் சுரக்கவும் வழிவகுக்கிறது. நிட்ரிக் அமிலம் சுரப்பதினால் ரத்த ஓட்டம் சீராகவும், ரத்த நாளங்களில் எந்த பாதிப்பும் ஏற்படாமலும் பாதுகாத்திட முடியும்.

சால்மன் :

இதயத்திற்கு இந்த சால்மன் வகை மீன்கள் மிகவும் நல்லது என்று சொல்லப்படுகிறது. ரத்த நாளங்களில் படிந்திருக்கும் கொழுப்பு படிமங்களை அகற்ற இது பெரிதும் உதவிடும். இதில் ஆரோக்கியமான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறையவே இருக்கிறது. அதோடு இதிலிருக்கும் docosahexaenoic acid மற்றும் eicosapentaenoic acid ஆகியவை உடலில் நல்ல கொழுப்பினை அதிகரிக்க உதவிடும்.

அதோடு ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதையும் தடுக்க உதவிடும். இதனை தொடர்ந்து சாப்பிட்டு வர ரத்த அழுத்தமும் சீராக இருக்கும்.

மஞ்சள் :

நம் அன்றாட சமையலில் பயன்படுத்துகிற ஒரு விஷயம். இதிலிருக்கும் குர்குமின் என்ற பொருள் ரத்த நாளங்கள் பாதுகாப்பிற்கு பெரிதும் துணை நிற்கிறது. அதோடு அவற்றில் ஏற்படுகிற கசடுகளை நீக்கவும் உதவிடுகிறது. தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் கெட்ட கொழுப்பினை குறைக்க முடியும்.

பாலில் மஞ்சள் பொடி கலந்து குடித்து வர நல்ல பயன் கிடைத்திடும்.

ஆலிவ் ஆயில் :

ஆலிவ் ஆயிலேயே எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் ஆயில் கிடைக்கிறது அவை இதய நலனுக்கு மிகவும் நல்லது. இதில் அதிகப்படியான பாலிபினால்ஸ் இருக்கிறது. இதனை பயன்படுத்துவதால் கெட்டகொழுப்பினை குறைத்து நல்ல கொழுப்பை அதிகப்படுத்த முடியும்.

வெண்ணெய்க்கு பதிலாக ஆலிவ் ஆயிலை பயன்படுத்தலாம். ஏனென்றால் வெண்ணெய் கெட்ட கொழுப்பை அதிகரிக்கச் செய்திடும்.

அவகேடோ :

உடலில் எல் டி எல் எனப்படுகிற கெட்ட கொழுப்பு தான் சீக்கிரமே ரத்த நாளத்தில் படிந்து நமக்கு தொல்லையை ஏற்படுத்தும். அதனால் கெட்ட கொழுப்பு சேரவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

அவகேடோவில் விட்டமின் இ நிறைய இருக்கிறது. இவை கொலஸ்ட்ராலை குறைக்கும். இவை உங்களது ரத்த அழுத்தத்தினையும் சீராக வைத்திருக்க உதவிடும்.

தர்பூசணிப்பழம் :

வெயில் காலங்களில் அதிகம் விற்கப்படக்கூடிய இந்த பழத்தை தாரளமாக சாப்பிடுங்கள்.இதிலிருக்கும் அமினோ அமிலம் மற்றும் எல் சிட்ருலின் ஆகியவை ரத்த அழுத்த்தத்தை சீராக வைத்திருக்க பெரிதும் உதவிடும். அதே போல உடலில் நிட்ரிக் ஆசிட் உற்பத்திக்கும் வழிவகுக்கும்.

அதோடு உடலில் இருக்கும் கொழுப்பை கரைக்க தர்பூசணிப்பழம் பெரும் பங்காற்றுகிறது.

பாதாம் :

இதயத்திற்கு பாதாம் மிகவும் நல்லது. பொதுவாக நட்ஸ்களில் பாலிஅன்சாச்சுரேட்டட் மற்றும் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்பு இருக்கும். இவை கெட்ட கொழுப்பினை குறைக்க வழிவகுக்கும். இதனால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிமம் ஏற்படுவது தவிர்க்கப்படும்.

அதோடு பாதாமில் இருக்கக்கூடிய மக்னீசியம் படிமம் ஏற்படாமல் தவிர்க்க உதவிடுகிறது.

Related posts

உங்களுக்குதான் இந்த விஷயம்..இடுப்புச் சதை குறையனும்னா, கண்ணை மூடிட்டு கண்டிப்பா இந்த 7 உணவு வகைகளுக்கு நோ சொல்லனும்!

nathan

உங்களுக்கு தெரியுமா வெறும் வயிற்றில் செய்யக்கூடாத 10 விஷயங்கள்!

nathan

கொத்தமல்லி கெட்டுப்போகாமல் இருக்கணுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா தேங்காய் பூ சாப்பிடுவதால் திகட்ட திகட்ட கிடைக்கும் நன்மைகள்!!?

nathan

சர்க்கரை நோயாளிகளுக்கான ஓட்ஸ் புட்டு

nathan

உலர் பழங்கள் ஆபத்தை ஏற்படுத்துமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

சாக்லெட் பன்னகோட்டா வீட்டிலேயே செய்வது எப்படி?

nathan

தேன் சாப்பிட்டா கூட இவ்வளவு பிரச்சினை வருமா! தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

கட்டாயம் இதை படியுங்கள் அற்புதபலன்கள் தரும் வறுத்த பூண்டு.!

nathan