28 C
Chennai
Wednesday, Nov 13, 2024
beetroot
ஆரோக்கிய உணவு

சுவையான பீட்ரூட் பிரியாணி – செய்வது எப்படி?

பீட்ரூடில் பலவகையான டிஷ்களை செய்து சாப்பிட்டு இருப்பீங்க… ஆனால் பீட்ரூட் பிரியாணியை சாப்பிடத்துண்டா? எப்படி சுவையாக செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்

பீட்ரூட் – ஒன்று

அரிசி – ஒரு கப்

கொத்தமல்லி இலை, புதினா இலை (சேர்த்து) – ஒரு கப்

பச்சை மிளகாய் – ஒன்று

இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்

வெங்காயம் – ஒன்று

மல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒரு டீஸ்பூன்

சீரகத்தூள் – 2 டீஸ்பூன்

சோம்பு – ஒரு டீஸ்பூன்

பட்டை – ஒரு இஞ்ச் நீளத் துண்டு

கிராம்பு – 2

ஏலக்காய் – 3

நெய் அல்லது எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை விளக்கம்

முதலில் வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். அடுத்ததாக அரிசியை நன்றாகக் கழுவி வைக்கவும்.

பின்னர் பீட்ரூட்டை நறுக்கி தண்ணீர் விடாமல் அரைத்து எடுத்து வைக்கவும். அரைத்த பீட்ரூட் உடன் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து இரண்டு கப் வருமாறு கலந்து வைக்கவும்.

மேலும், குக்கரில் எண்ணெய் (அ) நெய் ஊற்றி சூடானதும், பட்டை, ஏலக்காய், சோம்பு, கிராம்பு சேர்த்து வதக்கவும்.

அரைத்த பீட்ரூட் உடன் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து இரண்டு கப் வருமாறு கலந்து வைக்கவும்.

குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும், பட்டை, ஏலக்காய், சோம்பு, கிராம்பு சேர்த்து வதக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் புதினா, கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கவும்.

இலைகள் வதங்கியதும், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

அடுத்ததாக அரைத்து கலந்து வைத்திருக்கும் பீட்ரூட் தண்ணீரை ஊற்றி, கொதி வந்ததும் ஊறவைத்த அரிசியைப் போட்டு, குக்கரை மூடி, 10 நிமிடங்கள் குறைந்த தீயில் வேகவிட்டு எடுக்கவும்.

சுவையான பீட்ரூட் பிரியாணியை லஞ்ச் பாக்ஸில் பேக் செய்து கொடுக்கவும்.

 

Related posts

1 பழம்… 14 பலன்கள்… பிரமிக்கவைக்கும் மாதுளை!

nathan

சத்தான சுவையான கார்லிக் பிரட்

nathan

ஆண்களே கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க முருங்கைக்காயில் இவ்வளவு நன்மைகளா?..

nathan

பனங்கிழங்கை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

அள்ள அள்ள ஆரோக்கியம்… அசத்தல் கேழ்வரகு! நலம் நல்லது !!

nathan

சளி, இருமலைப் போக்கும் உணவுகள்!

nathan

உணவில், உப்பின் அவசியம் குறைவானதுதான்1

nathan

வாயுப்பொருள் என்று ஒதுக்கி வைக்காதீர்கள்.. உருளைக்கிழங்கு அதிகமான பயன் தரக்கூடிய அற்புதம்..!

nathan

ஹெல்த் ஸ்பெஷல்! உடல் எடையை குறைக்க உதவும் கொண்டைக்கடலை சாலட்

nathan