25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
Academy Mahisha Dellinger BBI wrbm large
Other News

கருப்பு நிற பெண்களும் கவர்ச்சியான அழகினைப் பெறலாம்..நீங்களும் முயற்சி செய்யுங்கள்

சிவப்பு நிற அழகுக்கு பெண்கள் ஏங்கிய காலம் விடைபெற்றுக்கொண்டிருக்கிறது. சிவப்பை மறந்து, கருப்பு அழகை விரும்பத் தொடங்கியிருக்கிறார்கள். இருண்ட நிறமும், இருட்டான மேக்கப்பும் தங்களுக்கு பிடித்தமானது என்று பெண்களில் பலரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கருப்பாக தோன்ற `டார்க் ஸ்கின் ஷேட்ஸ்’ பயன்படுத்துகிறார்கள். கருப்பை மேக்கப்பில் மட்டுமின்றி, ஆடையிலும் அதிக அளவில் உபயோகிக்கிறார்கள். பொருந்தாது என்று ஒதுக்கப்பட்ட கருப்பு நிற ஆடைகளும் இப்போது புதுப்புது வடிவங்களில் கவர்ச்சியாக வலம் வருகின்றன.

டார்க் ஸ்கின் கொண்டவர்கள் கூடுதல் அழகுடன் திகழ மேற்கொள்ளவேண்டிய மேக்கப் முறை:

கருப்பு நிறம் கொண்டவர்கள் பவுண்ட்டேஷனில் அதிக அக்கறை செலுத்தவேண்டும். பவுண்ட்டேஷனில் ஐவரி, பெய்ஜ், பிரவுன்ஸ் போன்றவை குறிப்பிடத்தக்கவை. டார்க் ஸ்கின் கொண்டவர்களுக்கு பிரவுன்ஸ் ஷேடுகள் பொருத்தமாக இருக்கும். டார்க் ஸ்கின்னாக தோன்ற விரும்புகிறவர்கள் வழக்கமாக பயன் படுத்தும் நிறத்தினோடு, பிரவுன்ஸ் ஷேடு கலந்து பயன்படுத்தவேண்டும்.

பெண்கள் ஒவ்வொருவருக்கும் தங்கள் முகத்தில் அழகான உறுப்பு எதுவென்று தெரியும். கவர்ச்சியான அந்த பகுதிக்கு மேக்கப்பில் அதிக முக்கியத்துவம் கொடுத்து பட்டைத்தீட்டவேண்டும். அதாவது புருவம் அழகானதாக தோன்றினால், அதனை ஹைலைட் செய்யவேண்டும். பவுண்ட்டேஷன் பூசும்போது முகத்தின் அனைத்துப்பகுதியிலும் அது துல்லியமாக ஒரே மாதிரி பதிந்தால்தான் முழுஅழகு கிடைக்கும். பவுண்ட்டேஷன் என்பது சருமத்தை சிவப்பாக்குவதற்கு அல்ல. ஸ்கின் டோனை பாதுகாப்பதே அதன் வேலை. தென்னிந்திய பெண்களுக்கு பொதுவாகவே `வாம் டோன் பவுண்ட்டேஷன் பேஸ்’ தான் சிறந்தது.

கண்களை ஜொலிக்கவைத்தால் முகத்தின் அழகு இரட்டிப்பாகும். கண்களை அழகுபடுத்து வதில் ஒவ்வொருவரும் ஒரு ஸ்டைலை கடைப் பிடிப்பார்கள். அந்த ஸ்டைலில் சிறந்ததை அவர்கள் பின்பற்றினால்போதும். அதனை கல்லூரிக்கு செல்லும்போதும், விருந்து-விழாக்களுக்கு செல்லும்போதும் பயன்படுத்தவேண்டும்.

சிறிய கண்களாக இருந்தால் கீழ்ப்பாகத்தில் கெட்டியாக போடுவதற்கு முயற்சிக்கக்கூடாது. மேல்பகுதியை நன்றாக வரைந்து, சிறிய வால் கொடுத்தால் அதுவே பொருத்தமாக அமைந்துவிடும்.

அகன்ற கண்களை கொண்டவர்கள் மேலும், கீழும் கெட்டியாக வரைந்து வால்கொடுத்தால் நன்றாக இருக்கும். பெரிய கண்கள் அமையப்பெற்றவர்கள், முக்கியத்துவம் கொடுத்து கண் அழகை மேம்படுத்தவேண்டும். இப்போது பல நிறங்களில் கண் மை கிடைக்கிறது. கலர் பென்சில் பயன்படுத்துகிறவர்களுக்கு அடர்ந்த நீலமும், டீல் கிரீனும் பொருந்தும். ஐஷேடோ பயன் படுத்தும்போது சிங்கள் ஷேடுகள் கொடுக்காமல், சில நிறங்களை கலந்து கொடுத்தால் அதிக அழகு கிடைக்கும்.

கூந்தல் அலங்காரமும் குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது. கூந்தல் அலங்காரத்திற்கும், சரும நிறத்திற்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் உடல் அமைப்பிற்கும், முக அமைப்பிற்கும் கூந்தல் அலங்காரத்திற்கும் தொடர்பு இருக்கிறது. குண்டான உடல்வாகினை கொண்ட பெண்கள் கூந்தலை அவிழ்த்துவிட்டுக்கொண்டால் பொருத்தமாக அமையும். குண்டான முக அமைப்பை கொண்டவர்களும் தலைமுடியை தோள் வரை வெட்டி, அலைபாயும் கூந்தலுடன் வலம் வரலாம். நீளமான கூந்தலை கொண்டவர்கள் பிடித்த மாதிரி கூந்தலை வெட்டிக்கொண்டு, ஒரு பக்கமாக வகிடு எடுத்து இருபக்கமாகவும் முன்னால் தூக்கிப் போட்டுக்கொள்ளலாம்.

சிறிய முக அமைப்பை கொண்டிருந்தால் சுருண்ட கூந்தலுக்கும், ஸ்ட்ரைட் கூந்தலுக்கும் `பாய்கட்’ பொருத்தமாக இருக்கும். கூந்தலை இறுக்கிப்பிடித்து கட்டிவைத்தாலும் இவர்களுக்கு அழகு கிடைக்கும். ஓவல் ஷேப் முக அமைப்பு கொண்டவர்களுக்கு `லோ ஷைடு பன் ஹேர் ஸ்டைல்’ பொருந்தும். முடியை முழுவதுமாக வாரி எடுத்து பன் செய்து வட்டமாக கட்டும் முறை சிறந்தது.

புஷ்டியான கன்னங்களை கொண்டவர்கள், பின்புறமாக வாரி சீவி, போனிடைல் போட்டுக்கொள்ளலாம். சதுரமான முக அமைப்பை கொண்டவர்கள் கூந்தலை அலையாக அவிழ்த்துவிடுவது பொருத்தமாக இருக்கும். நீளவாக்கில் சிறிய முகமாக இருந்தால் ஸ்ட்ரெய்ட் செய்து தோள் வரை பாப் செய்துகொள்ளலாம்.

பெண்களுக்கு உதட்டு அலங்காரம் இன்றியமையாதது. லிப்ஸ்டிக்கை பொறுத்தவரையில் அது அவரவர் விருப்பத்திற்கு உரியது. ஆனாலும் அதில் சில பரி சோதனை முயற்சிகளை மேற்கொண்டால் அது உதடு களுக்கு கூடுதல் அழகு சேர்க்கும் என்பது உண்மைதான். கருப்பு நிறம் கொண்ட பெண்களுக்கு அடர் நிறத்திலான லிப்ஸ்டிக் பொருந்தாது என்ற எண்ணம் இப்போது மாறிவிட்டது. கருப்பு நிற பெண்களும் அடர் நிறத்திலான லிப்ஸ்டிக்குகளை பயன்படுத்தலாம்.

டார்க் ஸ்கின் கொண்டவர்களுக்கு, சிவப்பு நன்றாக பொருந்தும். சிவப்பில் பலவிதமான ஷேடுகள் இருந்தாலும் ரூபி ரெட் நன்றாக இருக்கும். டார்க் ஸ்கின் கொண்டவர்களுக்கு நியான் ஆரஞ்சும் இணக்க மானது. டீப் பர்கண்டியும் பொருந்தும். இவைகளில் மேட் பினிஷ்க்கு பதில் கிரீம் பினிஷை தேர்ந்தெடுப்பது சிறந்தது.

மேட் பினிஷ் லிப்ஸ்டிக் தேர்ந்தெடுப்பவர்களுக்கு மெஜந்தா ஷேடு அதிகம் பொருந்தும். சாக்லெட் மேட் பினிஷையும் பயன்படுத்தலாம். டார்க் ஸ்கின் டோன் கொண்டவர்கள் உதடுகளில் லிப் லைனரால் வரைந்து விட்டு லிப்ஸ்டிக் போட்டால் கூடுதல் கவர்ச்சி கிடைக்கும்.

கருப்பு நிறம் கொண்ட பெண்கள் பளிச் நிறங்களின் மீது பாராமுகமாக இருக்கக்கூடாது. மாறாக எல்லா நிறமும் தனக்கும் பொருந்தும் என்று தன்னம்பிக்கைகொள்ள வேண்டும். அனைத்து சரும வகையினருக்கும் ஐவரி பொருத்தமாக இருக்கும். டார்க் ஸ்கின் வகையை சேர்ந்தவர்கள் புடவையானாலும், மாடர்ன் டிரஸ் என்றாலும் கண்களை மூடிக்கொண்டு ஐவரியை தேர்ந்தெடுக்கலாம். அனைத்து வகை சரும பிரிவினருக்கும் கருப்பு நிற உடைகளும் பொருத்தமாகத்தான் இருக்கும்.

டார்க் ஸ்கின் கொண்டவர்கள் மஞ்சள் நிற உடைகளை தவிர்க்கவேண்டும். அதே நேரத்தில் மஞ்சள் நிற ஷேடு கொண்ட உடைகளை கருப்பு நிறமானவர் களுக்கும் ஆடை வடிவமைப்பாளர்கள் பரிந்துரைக் கிறார்கள். அதன் மூலம் அவர்களது அழகு மெரு கேறுகிறது.

தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் வெளிப் படுத்த விரும்பும் கருப்பு நிற பெண்கள், நீல நிற ஆடைகளை தேர்ந்தெடுக்கலாம். அனைத்து வகை சருமத்தினருக்கும் லாவெண்டர் பொருந்தும். இது சுவீட் அன்ட் சிம்பிள் என்று வர்ணிக்கப்படுவதாகும். டார்க் ஸ்கின் கொண்டவர்கள் அணியும் ஆடைகளில் ஏதாவது ஒன்று வெள்ளை நிறத்தில் இருப்பது சிறப்பு. அப்படியிருந்தால் அவர்களது தன்னம்பிக்கை இரட்டிப்பாகும்.

கருப்பு நிறம் கொண்டவர்கள் மணப்பெண் அலங்காரத்திலும் கவலைப்படவேண்டியதில்லை. மேக்கப் நிபுணர்கள் `உங்களுக்கு பிடித்த உடைகளை எடுத்துக்கொண்டு வாருங்கள். அதற்கு பொருத்தமாக உங்கள் மேக்கப் அலங்காரத்தை நாங்கள் மாற்றிக்காட்டுகிறோம்’ என்கிறார்கள். பொருத்தமாக இருக்காது என்று நினைத்து நீங்கள் எதையும் தவிர்க்க வேண்டாம் என்று அவர்கள் சொல்கிறார்கள். கருப்பு நிறம் கொண்டவர்கள் அதிக ஜொலிப்புகொண்ட புடவைக்கு பதில், குறைந்த அளவு ஜரிகை கொண்ட புடவையை தேர்ந்தெடுத்தால் அழகு அதிகரிக்கும்.

Courtesy: MalaiMalar

Related posts

ரஷ்மிகா போலி வீடியோவில் இருந்த ஒரிஜினல் பெண் ஜாரா பட்டேல்

nathan

30,000 பேர் வசிக்கும் 36 மாடிகளை கொண்ட பிரம்மாண்ட குடியிருப்பு…

nathan

ஆளே மாறிப்போன சமந்தா! இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட லேட்டஸ்ட் படங்கள்

nathan

உலகின் 250 ஆண்டுகள் பழமையான ராட்சத ஆலமரம்

nathan

சூப்பர் டிப்ஸ்! இஞ்சி ஜூஸில் மஞ்சள் தூள் கலந்து குடிச்சுப் பாருங்க? எந்த நோய்யும் உங்களை அண்டாது!

nathan

தனது மகனின் திருமணம் குறித்து உளறி கொட்டிய செந்தில் – தம்பி ராமய்யாவின் Reaction

nathan

முதியவரை லவ் செய்து திருமணம் செய்த 30 வயது பெண்..

nathan

மெட்ராஸ் மாகாணம் ‘தமிழ்நாடு’ என பெயர் மாறிய வரலாறு

nathan

கும்ப ராசி பெண்கள் – இதில் மிகவும் கவனமாக இருப்பார்கள்

nathan