நம் தமிழ் பெண்களுக்கு அழகு சேர்ப்பதில் பொட்டு முக்கிய இடத்தில் உள்ளது. இன்று அது குறைந்து வறுவது வேதனையே.
குறிப்பாக பொட்டு வைக்கும் பெண்களை அவ்வளவு சீக்கிரம் மெஸ்மரிசம் செய்ய முடியாதாம். எம் முன்னோர்கள் அனைவரும் நெற்றியில் வைக்கும் குங்குமப்பொட்டின் அழகே தனி என்று தான் சொல்ல வேண்டும்.
ஒவ்வொருவரும் தங்களின் முகத்திற்கேற்றவாறு பொட்டு வைக்க வேண்டும். மருத்துவ ஆராய்ச்சிகளின்படி, நினைவாற்றலும் சிந்தனைத்திறனும் திறனுக்கும் உரிய இடம் நெற்றி. யோகக் கலையில் இதனை ஆக்ஞா சக்கரம் என்கிறது.
எலக்ட்ரோ மேக்னடிக் என்ற மின்காந்த அலைகளாக மனித உடல் சக்தியை வெளிப்படுத்தும். அதிலும் முன்நெற்றி மற்றும் நெற்றிப் பொட்டு இரண்டும் மின்காந்த அலைகளை வெளியிடுவதில் முக்கியமானவை.
அதனால்தான், நம் மனம் கவலையால் வாடும்போது, தலைவலி அதிகமாவதை நாம் உணர்ந்திருப்போம். நாம் வெறும் நெற்றியாக இருக்ககூடாது என்று முன்னோர்கள் அடிக்கடி சொல்வதுண்டு.
நெற்றியில் இடும் திலகம், அந்தப் பகுதியைக் குளிர்விக்கிறது. நம் உடலின் சக்தி வெளியேறி விரயமாவதைத் தடுக்கிறது.
எனவே வெறும் நெற்றியாக இருக்கக் கூடாது என்கின்றனர் முன்னோர்கள். தற்போதைய காலக்கட்டத்தில் பல பெண்கள் தங்களின் அழகிற்காக கலர் கலராய் ஸ்டிக்கர் பொட்டுகளை வைத்துக் கொள்கிறார்கள்.
இதன் மூலம் அவர்களுக்கு எந்த பலனும் கிடையாது. அதேபோல, கணவனை இழந்த பெண்கள் குங்குமம் வைத்துக்கொள்வது தவறு என்னும் கருத்து இன்றைய சமுதாயத்தில் நிலவுகிறது. அது மிகவும் தவறான ஒன்றாகும்.
அவர்களும் பொட்டு வைத்துக்கொள்வதில் தவறு எதுவும் இல்லை. பெண்கள் நெற்றி வகிட்டில் பொட்டு வைத்துக்கொள்ளும் போது ஏற்படும் அழுத்தத்தினால் பெண்ணின் கர்ப்பப்பை ஆனது தூண்டப்படுகிறது.
அதனால் தான் கணவனை இழந்த பெண்கள் நெற்றி வகிட்டில் பொட்டு வைத்துக்கொள்ள கூடாது என்று கூறப்பட்டது. குறிப்பாக, அவர்கள் நெற்றியில் பொட்டு வைக்கவே கூடாது என்று எங்குமே கூறப்படவில்லை.
பெண்களுக்கு அழகே குங்குமம் வைப்பது தான். மேலும், குங்குமம் வைப்பதனால் கண் திருஷ்டி பாதிப்பில் இருந்து கூட விலக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
நெற்றியில் வைக்கும் திலகம் ஆனது அந்தப் பகுதியினை குளிர்வித்து நம்முடைய உடலில் உள்ள சக்தி ஆனது வெளியேற விடாமல் தடுக்கிறது. புருவ மத்தியில் பொட்டு வைத்துக் கொள்வதனால், மனமும் அமைதி அடைகின்றது.
ஆண்கள் இரண்டு புருவங்களையுமே இணைத்த நிலையில் குங்குமம் வைப்பது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்க உதவும்.
குங்குமத்தை வைத்துக் கொள்வதனால், மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்களினுடைய தாக்கம் ஆனது குறைந்து நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க செய்யும்.
பொட்டு வெச்ச இடத்தில் இருக்கும் கருமையை நீக்க என்ன செய்யலாம்
அழகை விரும்பும் பெண்கள் விதவிதமாய் பொட்டுகள் வைக்க விரும்பி அந்த இடத்தை புண்ணாக்கி அல்லது கருமையாக்கி கொண்டு விடுவார்கள்.
நெற்றிப்பொட்டு வைக்கும் இடம் மட்டும் தனித்து தெரியும். ஸ்டிக்கர் பொட்டுகளை அதிகம் பயன்படுத்தும் பெண்களின் நெற்றிப்பகுதியில் உண்டாகும் கருமை புருவங்களோடு தனித்து தெரியும்.
சிலருக்கு எப்போதும் பசை போன்று ஒட்டி இருக்கும். தற்போது குங்குமமும் கூட இராசயனங்களின் உதவியால் சருமத்தை புண்ணாக்கிவிடுகிறது. அப்படி புண்ணான நெற்றிப்பகுதியை எப்படி சரிசெய்வது என்பது குறித்து பார்க்கலாம்.
வீட்டிலிருக்கும் பொருள்களை கொண்டெ இந்த புண்ணை போக்கிவிடலாம்.சந்தனத்தூளுடன் கற்றாழை சந்தனம் எப்போதும் குளிர்ச்சித்தரக்கூடியது.
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அசல் சந்தனக்கட்டையை வாங்கி உரை கல்லில் உரைத்து அதையும் பயன்படுத்தலாம். அல்லது சந்தனப்பொடியை வாங்கி அதையும் பயன்படுத்தலாம்.
சந்தனப்பொடியில் கற்றாழை ஜெல்லை கலந்து சற்று கெட்டியாக இருக்கும்படி குழைக்கவும். அதை நெற்றிப்பொட்டில் நடுவில் பற்றுபோல் குழைத்து பூசவும்.
இவை உலர்ந்து உதிரும் வரை காயவிட்டு பிறகு பன்னீர் கொண்டு அந்த இடத்தை துடைக்க வேண்டும். இதனால் கருமை நிறம் மறைந்து சருமம் பொலிவு பெறும். தினமும் செய்தால் பலன் விரைவில் கிடைக்கும். வாரத்துக்கு மூன்று முறையாவது அவசியம் செய்ய வேண்டும்.