ஒரு குழந்தை நன்றாக வளர்ப்பதில் பெற்றோர்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. குழந்தைகளின் எதிர்காலமே பெற்றோர்கள் கைகளில் தான் இருக்கிறது. குழந்தைகளின் மனதில் சிறு வயதிலேயே நல்ல பண்புகளை விதைக்க வேண்டும்.
ஒரு பெற்றோராக குழந்தையின் மனநிலையை முதலில் அறிய வேண்டும். மேலும், அவர்களிடம் ஒருவருடைய செயல்கள் யாரை பாதிக்கும், பிரச்சினைகள் உருவாகாமல் தடுப்பது எப்படி என்று குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே அறிவுரை கூறி வளர்க்க வேண்டும்.
குழந்தைகளை வளர்க்கும்போதே மொழி மற்றும் அறிவாற்றல் திறன்களை சொல்லி கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். அவர்கள் வளரும் வரை காத்திருக்க வேண்டாம். இதை சிறுவயதில் நாம் கொடுக்கக்கூடிய அறிவுரைகள் குழந்தைகளிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
நேர்மறையான பாசிட்டிவ் எண்ணங்கள் கற்று கொடுப்பதனால், அவர்கள் வளர்ந்த பிறகு சந்திக்க கூடிய பிரச்சினைகளை கூட எளிதில் சமாளித்து கொள்வார்கள்.
உங்கள் குழந்தைகளுக்கு எங்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும், என்ன பேச வேண்டும் எது சரி, எது தவறு என்பது தெரியாததால், அவர்களுக்கு உலகத்தை பற்றிய சரியான புரிதலை உண்டாக்க வேண்டும்.
குழந்தைகளுடன் தனியாக நேரம் செலவழிக்கையில் அல்லது குழந்தைகளுக்கு பிடித்த இடத்திற்கு அழைத்து சென்று தனிமையில் அவர்கள் செய்த தவறை எடுத்துக்கூறி, அதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படலாம் என்று கூறி, அந்த தவறு சரியற்ற செயல் என்று அவர்களுக்கு அன்பாக எடுத்து சொல்லி புரிய வையுங்கள்.
குழந்தைகளிடம் வெறும் அறிவுரைகள் கூறும் பெற்றோராக மட்டும் இருக்காதீர்கள். குழந்தைகள் பேசுவதையும் செவி கொடுத்து கேளுங்கள். மேலும், உங்கள் குழந்தை உங்கள் பேச்சைக் கேட்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பதைப் போலவே, உங்கள் குழந்தையின் பேச்சை நீங்கள் காது கொடுத்து கேட்க கற்றுக்கொள்ள வேண்டும்.
இதனையடுத்து உங்கள் குழந்தையின் மீது அடிக்கடி விமர்சனத்தை அள்ளி தெளிக்காதீர்கள். இதனால் அவர்களின் மனம் உடைந்து, உங்களை வெறுக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
முக்கியமாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறந்த முன்மாதிரியாக திகழவேண்டும். பொதுவாக குழந்தைகள் அனைவரும் தன் பெற்றோர்களை பார்த்தே வளருவதால், அவர்களை போலவே செயல்படுவார்கள். இதனால் உங்கள் குழந்தைகள் செய்யும் அனைத்து விஷயத்தையும் ஊக்கப்படுத்துங்கள்.