Tamil News Mappillai Samba Rice Kanji SECVPF
ஆரோக்கிய உணவு

சுவையான மாப்பிள்ளை சம்பா மோர் கஞ்சி

தேவையான பொருட்கள் :

மாப்பிள்ளை சம்பா அரிசி – 100 கிராம்,

தண்ணீர் – 100 மில்லி,
மோர் – 50 மில்லி,
சின்ன வெங்காயம் – 8 ,
பச்சை மிளகாய் – ஒன்று ,
கறிவேப்பிலை – சிறிதளவு,
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
கடுகு – அரை டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

சின்ன வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மாப்பிள்ளை சம்பா அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்த பிறகு மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

ஒரு வாணலியில் அரைத்த மாப்பிள்ளை அரிசி, தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு வேகவைத்துக் கொள்ளவும்.

பின் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து வேகவைத்த கஞ்சியில் ஊற்றவும்.

நன்கு ஆறியபின் மோர் சேர்த்து பரிமாறவும்.

சூப்பரான மாப்பிள்ளை சம்பா மோர் கஞ்சி ரெடி.

Courtesy: MalaiMalar

Related posts

பழரசம் உடலுக்கு தீங்கானாதா?

nathan

பக்க விளைவுகள் ஏற்படுத்தாத அதிசய பானம்

nathan

Omega-3 Rich Foods in Tamil – ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் உள்ள உணவுகள்

nathan

சுவையான பீட்ரூட் பிரியாணி – செய்வது எப்படி?

nathan

தெரிஞ்சிக்கங்க…சர்க்கரை நோயாளிகள் வெண்டைக்காய் சாப்பிடுவது நல்லதா?

nathan

தயிர் சாப்பிடும் போது கவனிக்க வேண்டியவை

nathan

உங்களுக்கு தெரியுமா இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள்!!!

nathan

தெரிந்துகொள்வோமா? குடலில் உள்ள ஒட்டுண்ணிகளை இயற்கையான வழியில் அழிக்க உதவும் உணவுகள்!!!

nathan

வாழையடி வாழையாக நீங்கள் வாழ உதவும் வாழைப்பழம்! தெரிஞ்சிக்கங்க…

nathan