26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
21 616c8d55
அசைவ வகைகள்

சுவையான வறுத்தரைச்ச சிக்கன் குழம்பு

பல வகையான சிக்கன் குழம்பை சாப்பிட்டு இருப்போம். அந்த வகையில் வறுத்தரைச்ச சிக்கன் குழம்பு எப்படி செய்யலாம் என்பதை பற்றி இங்கு பார்க்க போகிறோம்.

வறுத்து அரைத்த சிக்கன் குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். இது தவிர தோசை, சப்பாத்தி, இட்லி போன்றவற்றுடனும் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

தேங்காய் எண்ணெய் – 1/4 கப்
சிக்கன் – 1 கிலோ
சின்ன வெங்காயம் – 30 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 4- (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 (நீளமாக கீறியது)
இஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்
உருளைக்கிழங்கு – 1 (தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது)
உப்பு – சுவைக்கேற்ப
கறிவேப்பிலை – சிறிது தாளிப்பதற்கு
சோம்பு – 2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
பிரியாணி இலை – 1
ஏலக்காய் – 5
கிராம்பு – 5
பட்டை – 1 துண்டு
வறுத்து அரைப்பதற்கு

வரமிளகாய் – 10-12
மல்லி விதைகள் – 4 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
மிளகு – 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கையளவு அரைப்பதற்கு…
துருவிய தேங்காய் – 1 கப்
பொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன்
சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை விளக்கம்

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ‘வறுத்து அரைப்பதற்கு’ கொடுத்துள்ள பொருட்களை போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி, மிக்சர் ஜாரில் போட்டு, நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக ஒரு பௌலில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் அதே மிக்சர் ஜாரில் தேங்காய், சோம்பு, பொட்டுக்கடலை சேர்த்து, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின் அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாவ வதக்கி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும். பிறகு அதில் தக்காளி மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பின் அதில் சிக்கனை கழுவிப் போட்டு, 5-6 நிமிடம் நன்கு சிக்கனை வதக்க வேண்டும். பின்னர் அதில் வறுத்து அரைத்த மசாலா மற்றும் நீரை ஊற்றி கிளறி, அதை குக்கரில் ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் உருளைக்கிழங்குகளை போட்டு, பின் அரைத்த தேங்காய் மசாலா சேர்த்து அடுப்பில் வைத்து, 10-15 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான வறுத்தரைச்ச சிக்கன் குழம்பு தயார்.

Related posts

மீன் கட்லட்,

nathan

லெமன் ஃபிஷ் ஃப்ரை… இதுவரை மீனை இப்படி சாப்பிட்டு இருக்க மாட்டீங்க..!

nathan

சுவையான சிக்கன் பிரைட் ரைஸ்

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான இறால் ஃப்ரைடு ரைஸ்

nathan

காரம் தூக்கல்… மட்டன் க்ரீன் கறி… ருசி அதைவிட தூக்கல்!

nathan

பெப்பர் மட்டன் வறுவல்

nathan

இறால் பெப்பர் ப்ரை (prawn pepper fry)

nathan

ருசியான… சிக்கன் பக்கோடா

nathan

மொறு மொறு என கோபி மஞ்சூரியனை ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் செய்வது எப்படி தெரியுமா?..

nathan