அசைவ வகைகள்

ரமலான் ஸ்பெஷல் உணவுகள்

மட்டன் பிரியாணி

தேவையான பொருட்கள்:

மட்டன் – 1 கிலோ
பாசுமதி அரிசி – 1 கிலோ
பெரிய வெங்காயம் – 6
தக்காளி – 6
பச்சை மிளகாய் – 6
இஞ்சி, பூண்டு விழுது – 2 1/2 மேசைக்கரண்டி
பட்டை – 3
கிராம்பு – 10
ஏலக்காய் – 15
அன்னாசி மொக்கு – 2
மிளகாய் தூள் – 1 1/2 மேசைக்கரண்டி
கரம் மசாலா – 1தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
தயிர் – 1 கப்
எலுமிச்சை – 1
புதினா – 1 கப்
கொத்தமல்லி – 1 கப்
உப்பு – 3 மேசைக்கரண்டி
நெய் – 5 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 2 கொத்து
பிரியாணி இலை – 3
கலர் பொடி – சிறிதளவு

1467785536 1985

செய்முறை:

அரிசியில் தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் ஊற வைக்கவும். வெங்காயம், தக்காளி இரண்டையும் மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறி வைத்துக் கொள்ளவும். புதினா கொத்தமல்லி தழைகளை கழுவி வைக்கவும்.

கறியினை சுத்தம் செய்து மஞ்சள் தூள் போட்டு கழுவி வைக்கவும். அதில் தயிர் பாதி, இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் தூள் மற்றும் உப்பு போட்டு கிளறி வைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி மொக்கு, பிரியாணி இலை போட்டு பொரிய விடவும். உடனே நறுக்கின வெங்காயம் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, கீறின பச்சை மிளகாய் போட்டு 3 நிமிடம் வதக்கவும். பிறகு நறுக்கின வெங்காயம், தக்காளி, கறியை போட்டு வதக்கவும். தக்காளி நன்கு வதக்க வேண்டும். புதினா கொத்தமல்லி போட்டு வதக்க வேண்டும்.

இதனுடன் கறி துண்டங்களைப் போட்டு மசாலா கறி துண்டங்களை சேரும்படி நன்கு பிரட்டி விடவும். அதில் ரம்பை இலை, தயிர், கரம் மசாலா சேர்த்து அதிக தீயில் வைத்து கிளறவும். பிறகு 6 கப் தண்ணீர் சேர்த்து கலர் பொடி, உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்து கிளறி மூடி விடவும். சுமார் 15 நிமிடம் கழித்து, கொதித்து வாசனை வந்ததும் அரிசியை களைந்து போட்டுக் கிளறி விடவும்.

குறிப்பு: தண்ணீர் 1 கப் அரிசிக்கு இரண்டு என்ற விகிதத்தில் வைக்கவும். வதக்கும் மாசாலாவில் தண்ணீர் இருக்கும் என்பதால் 1-க்கு 11/2 கப் ஊற்றவும்.

சிக்கன் 65

தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத சிக்கன் – 1/2 கிலோ சிறியதாக நறுக்கியது
தயிர் – 1/2 கப்
இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
மிளகு தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

1467785611 809

செய்முறை:

சிக்கன் துண்டுகள் நன்கு நீரில் கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, தயிர் அல்லது எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து, 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதனுடன் சோள மாவு, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், மிளகு தூள், மஞ்சள் தூள், அரிசி மாவு, மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பிறகு ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை, சோள மாவு கலவையில் சேர்த்து கலந்து, 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும், ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து, தீயை குறைவில் வைத்து பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். சுவையான சிக்கன் 65 ரெடி!

கத்தரிக்காய் மாசாலா

தேவையான பொருட்கள்:

பெரிய கத்தரிக்காய் – 5
தக்காளி – 2
கடுகு – 1/2 டீஸ்பூன்
புளி – எலுமிச்சை அளவு
சீரகம் – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
வேர்க்கடலை – 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
தனியா தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
வெங்காயம் – 2 பெரியது
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

1467785668 1029

செய்முறை:

அரைப்பதற்காக சீரகம், வெந்தயம், வேர்க்கடலை அனைத்தையும் லேசாக வறுத்து ஆற வைத்து அரைத்து கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு பிறகு வெங்காயம் போட்டு வதக்கி இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி நறுக்கிய கத்தரிக்காயை சேர்த்து கிளறவும்.

சிறிது நேரம் வதங்கியவுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியாத் தூள் போட்டு அரத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து வதக்கி தண்ணீர் சேர்க்கவும். கொதித்தவுடன் புளி கரைசல் சேர்த்து சுருண்டு வந்தவுடன் கொத்தமல்லி தூவி இரக்கவும்.

தயிர் பச்சடி

தேவையான பொருட்கள்:

தயிர் – 1 கப்
வெங்காயம் – 2 பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 1 பொடியாக நறுக்கியது
தக்காளி – 2 பொடியாக நறுக்கியது
உப்பு – தேவையான அளவு

1467785702 7045

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தயிர், நறிக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். தயிர் பச்சடி தயார். இவை பிரியாணி போன்றவற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button