22.8 C
Chennai
Sunday, Dec 14, 2025
21 616bc8314
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெஜிடபிள் ஜூஸ்!

வெயில், குளிர்காலம் போன்றவையில் இருந்து பாதுகாத்துகொள்ளவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் சளி, இருமலிருந்து விடுபட சுவையான ஹெல்தியான வெஜிடபிள் ஜூஸ் குடியுங்கள்.

இதனால உடலுக்கு தேவையான பல மடங்கு நோய் எதிர்ப்பு சக்திகளை பெறுவீர்கள். சரி வாங்க வெஜிடபிள் ஜூஸ் எப்படி செய்வது குறித்து பார்க்கலாம்..

தேவையான பொருள்கள்:-

கேரட்

தக்காளி

தண்டு கீரை

குடைமிளகாய்(சிவப்பு)

பூண்டு

மிளகு

கொத்தமல்லி தழை

உப்பு

செய்முறை:-

கேரட், தக்காளி, தண்டு கீரை, சிவப்பு குடை மிளகாய் ஒரு சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். அதே சமையம் உப்பு, மிளகு, பூண்டை இடித்து கொள்ளவும். இவை அனைத்தையும் ஒரு வாணலியில் 30 நிமிடம் நன்றாக வேக வைக்கவும்.
காய்கறிகள் நன்றாக வெந்ததும் சிறிது நேரம் ஆற வைக்கவும். காய்கறிகள் ஆறியவுடன் மிக்ஸியில் நன்றாக அரைத்து விழுதாக்கி கொள்ளவும்.
அரைத்த விழுதுடன் கொத்தமல்லி தழையை சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக மீண்டும் அரைக்கவும். அரைத்த இந்த வெஜிடபிள் ஜூஸை சிறிது நேரம் பிரிட்ஜில் வைத்து அருந்தலாம்.

இப்போது ஹெல்தியான வெஜிடபிள் ஜூஸ் தயார். சளி,இருமல் வராமல் தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இந்த வெஜிடபிள் ஜூஸ் பயனுள்ளதாக இருக்கும்.

Related posts

மீன் எப்படி வாங்கணும் தெரியுமா ? அப்ப இத படிங்க!

nathan

உங்களுக்கு தெரியுமா எல்லா நேரத்திலும் நெய் ஊற்றி சாப்பிட்டால் அவ்வளவு தான்..!!

nathan

‘கருப்பு கசகசா’ தினமும் ஒரு தேக்கரண்டி விதையை நீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால்

nathan

ஆட்டின் கொழுப்பை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? பாதிப்புக்கள் என்ன?

nathan

உங்களுக்கு தெரியுமா வாழைப்பூவை வாரம் ஒருமுறை சாப்பிடுவதால் உடலில் உண்டாகும் மாற்றங்கள்!

nathan

அடிக்கடி உணவில் வாழைத்தண்டை சேர்த்து கொள்வதால் இந்த மருத்துவ நன்மைகள் உண்டாகுமாம்!தெரிஞ்சிக்கங்க…

nathan

கொலஸ்ட்ராலை முற்றிலும் இல்லாதொழிக்கும் நல்லெண்ணைய்…!

nathan

தினமும் அருந்துங்கள் தொப்பையை 3 நாட்களில் குறைக்க இந்த ஒரு பானம் போதும்

nathan

சுவையான வாழைப்பழ முட்டை தோசை

nathan