பொதுவாக இணையத்தைப் பயன்படுத்தும் போதெல்லாம் பல விதமான அச்சுறுத்துல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இணையத்தை பயன்படுத்தும்போது ஒவ்வொருவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
உங்கள் தனிப்பட்ட தரவு மட்டுமல்லாமல், வங்கி, கிரெடிட் கார்டுகள் விவரங்களையும் நீங்கள் இழக்க வேண்டிவரும். ஹேக்கர்கள் இந்த சூழலை சாதகமாகப் பான்படுத்தி, மால்வேர், வைரஸ் மற்றும் போலி தளங்களை உருவாக்கி, யூசர்களிடம் இருந்து தரவுகளை மற்றும் பல விதமான தகவல்களைப் பெறுவதற்கு குறி வைக்கின்றனர்.
பாதுகாப்பாக Browse செய்யவதற்கு, பாஸ்வேர்டு மேனேஜர் கருவி உதவியாக இருக்கும். இன்று, கிட்டத்தட்ட ஒவ்வொரு தளத்துக்கும் பாஸ்வேர்டு பயன்படுத்த வேண்டும். பல பாஸ்வேர்டுகளை உங்களால் நினைவில் வைத்துக் கொள்ள முடியாது.
அதே போல், ஒரே பாஸ்வேர்டை அனைத்து இடங்களிலும் நீங்கள் பயன்படுத்தக் கூடாது. எனவே, நீங்கள் பாஸ்வேர்டு மேனேஜர் கருவியைப் பயன்படுத்தி, உங்கள் பாஸ்வேர்டுகளை சேமித்து வைக்கலாம். உங்கள் பாஸ்வேர்டுகள் அனைத்தும் என்கிரிப்ட் செய்யப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்படும்.
இதனையடுத்து, நீங்கள் பிரவுஸ் செய்யும் போது, பல விதங்களில் உங்கள் கணினி தாக்கப்படலாம். கிராஸ் சைட் ஸ்கிரிப்டிங் (XSS), இன்ஜெக்ஷன் தாக்குதல்கள், போலியான தளங்கள், MITM, உள்ளிட்ட பல தாக்குதல்களை உங்கள் பிரவுசர்கள் எதிர்கொள்ளலாம்.
இந்த தாக்குதல்களைத் தவிர்க்க நீங்கள் உங்களது மைக்ரோசாப்ட் எட்ஜ் அல்லது கூகிள் குரோம் பிரவுசர்களை அப்டேட் செய்ய வேண்டும். அடுத்தது மிக முக்கியமாக நீங்கள் பயணம் செய்யும் போது, ஹோட்டலில், ரயில் நிலையங்களில், உணவகத்தில், பொது Wi-Fi பயன்படுத்தும் போது, உங்கள் இணைய டிராஃபிக் நம்பகமானது என்று உறுதியாக கூற முடியாது.
அவ்வகையான இணைய இணைப்புகளை பயன்படுத்தும் போது, உங்கள் ஃபோன் அல்லது லேப்டாப்பின் தகவல்கள் திருடப்பட வாய்ப்புள்ளது. எனவே, பொது நெட்வொர்க் பயன்படுத்தினால், எப்போதும் நம்பிக்கையான VPN சேவையை பயன்படுத்தி பிரவுஸ் செய்யுங்கள்.