28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
garlic 151
ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிந்துகொள்வோமா? சமைக்காத பச்சை பூண்டை குழந்தைகளுக்கு கொடுப்பது பாதுகாப்பானதா?

நம் குழந்தைகள் தான் நமது வாழ்க்கை. அவர்கள் அன்றாடம் செய்யும் சின்ன சின்ன குறும்பும், சிரிப்பும் தான் நம் வாழ்வை வண்ணமயமாக்குகிறது. அவர்கள் முகத்தில் உதிக்கும் சந்தோஷம் தான் நம் மனதில் எழும் சந்தோஷமாக அமைகிறது. இந்த தலைமுறை குழந்தைகள் எல்லாவற்றிலும் திறமைசாலியாகவும் அறிவாளியாகவும் இருக்கின்றனர். அவர்கள் நிறைய கற்றுக் கொள்கிறார்கள். நிறைய செயல்படுத்துகிறார்கள். வேகமாக வளரவும் செய்கின்றனர். அவர்களின் குழந்தை பருவம் அப்படியே மாறிவிடுகின்றன.

நிறைய அம்மாமார்கள் தங்கள் குழந்தைக்கு ஆரோக்கியமான உணவளிப்பதிலும், பாடம் சொல்லிக் கொடுப்பதிலும், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களில் குழந்தைகள் அடிமையாவதை தடுப்பதிலும் தங்கள் முழு கவனத்தை செலுத்துகின்றனர். ஏனெனில் இவைகள் அனைத்தும் முக்கியமான விஷயங்கள். ஆனால் உங்கள் குழந்தைக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போவதை தடுக்க என்ன செய்யப் போகிறீர்கள்.

நோய்வாய்ப்படுதல் மற்றும் தொற்றுக்கள் அனைத்தும் குழந்தைகளை அடிக்கடி பிடித்து கொள்ளும். நீங்கள் ஒவ்வொரு தடவை மருத்துவரை அணுகும் போதும் எடுத்து கொள்ளும் ஆன்டி பயோடிக்ஸ் குழந்தையின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து விடும். இப்படி அடிக்கடி வரும் சின்ன சின்ன உபாதைகளுக்கு மருந்து எடுக்கும் போது அவையே பக்க விளைவுகளை உண்டு பண்ணவும் வாய்ப்பிருக்கிறது.

சில தாய்மார்கள் ஆயுர்வேத முறையை வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கேட்டு பின்பற்றுகிறார்கள். இந்த ஆயுர்வேத முறைகளால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை. ஆனால் இதை தகுந்த ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனை பெற்று குழந்தைகளுக்கு செய்வது நல்லது. ஏனெனில் சில ஆயுர்வேத முறைகள் குழந்தைகளுக்கு பாதுகாப்பானது கிடையாது. பெரியவர்கள் பயன்படுத்தக் கூடியதாக இருக்கும். எனவே எதையும் தக்க ஆலோசனை பெற்று செய்வது நல்லது.

இந்த ஆயுர்வேத பொருட்கள் நமக்கு ஏற்படும் பல உடல் உபாதைகளை போக்க வல்லது. இதற்கு நீங்கள் மிகவும் மெனக்கெட வேண்டாம். நம் சமையலறை பொருட்களே போதும். இந்த உடல் உபாதைகளை நீக்கிவிடும். அவற்றுள் சிறந்த ஒரு பொருள் தான் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பூண்டு. இந்த பூண்டில் ஆன்டி-செப்டிக், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-பேஸ்மோடிக் போன்ற சக்தி வாய்ந்த பொருட்கள் உள்ளன. இப்படிப்பட்ட மருத்துவ குணங்கள் வாய்ந்த பூண்டை குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லதா பாதுகாப்பானதா என்பதை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

பூண்டு குழந்தைகளின் வயிற்று பிரச்சினைகளுக்கு உதவுகிறது

பூண்டு குழந்தைகளின் வயிற்று பிரச்சனை, குடல் பிரச்சினைகளை சரிசெய்யும் மிகச்சிறந்த பொருளாகும். குழந்தைகள் ஜங்க் உணவுகளை சாப்பிடுவதில் மட்டும் விருப்பம் காட்டுவார்கள். இதனால் அவர்களுக்கு ஜீரண பிரச்சினைகள் இருக்கும். இந்த பூண்டு வயிற்றில் இருக்கும் கெட்ட பாக்டீரியாக்களை அழித்து வயிற்றையும் குடலையும் ஆரோக்கியமாக வைக்கிறது.

சளி மற்றும் இருமலுக்கு மருந்தாக பயன்படுகிறது

குழந்தைகள் அடிக்கடி சளி மற்றும் இருமல் போன்றவற்றால் அவதிப்படுவர். இதற்கு பச்சை பூண்டு நல்ல பலனை கொடுக்கும். மூக்கு வடிதல், இருமல் மற்றும் சளி போன்றவற்றிற்கு நிவாரணம் அளிக்கிறது.

கண் தொற்றுக்கு பயன்படுதல்

பூண்டில் உள்ள விட்டமின் சி மற்றும் செலினியம் குழந்தைகளுக்கு ஏற்படும் கண் வீக்கம், கண்ணீர் வடிதல் போன்றவற்றிற்கு பயன்படுகிறது. இருப்பினும் மருத்துவரின் ஆலோசனை பேரில் செய்வது நல்லது.

காது பிரச்சினைக்கு பயன்படுதல்

குழந்தைகளுக்கு ஏற்படும் மற்றொரு பிரச்சினை காது வலி. இவற்றிற்கு பூண்டு எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்து பயன்படுத்துவது நல்லது. இவை காது வலியை உண்டாக்கும் பாக்டீரியாவை அழிப்பதோடு மறுபடியும் காதில் பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கிறது.

ஆஸ்துமாவுக்கு ஒரு மிகச்சிறந்த மருந்து

சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு ஆஸ்துமா இருப்பது அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டிய நிலை ஏற்படும். இந்த மருந்துகளால் பக்க விளைவுகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. இதற்கு ஆயுர்வேத பொருட்களளை பயன்படுத்தும் போது பக்க விளைவுகளின் அபாயம் இல்லை. எனவே, பூண்டு போன்ற ஆயுர்வேத பொருட்கள் ஆஸ்துமாவுக்கு பயன்படுகிறது.

நீங்கள் சரியான அளவில் மற்றும் சரியான முறையில் பூண்டை பயன்படுத்தினால் மட்டுமே நல்லது. எல்லா பிணிகளையும் போக்கலாம். இருப்பினும் இந்த பூண்டால் சில பக்க விளைவுகளும் குழந்தைக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. அதைப் பற்றி இப்பொழுது பார்ப்போம்.

அதிகப்படியான பூண்டு இரத்தக் கசிவை உண்டாக்கும்

சமைக்காத பச்சை பூண்டை குழந்தைகளுக்கு அதிகமாக கொடுக்கும் போது இரத்தக் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது. இவை இரத்தம் உறைதல் தன்மையை குறைத்து தீவிர பிரச்சினைகளை உண்டு பண்ணுகிறது.

வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்துகிறது

பூண்டு ஜீரண பிரச்சினையை சரிசெய்கிறது. ஆனால் அதிகப்படியான பூண்டு வயிற்றில் எரிச்சல் மற்றும் ஜீரணமின்மை மற்றும் பேதி போன்றவற்றை ஏற்படுத்தி விடும்.

குழந்தைகளின் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது

பெரியவர்கள் பூண்டை சாப்பிடும் போது, அவர்களின் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் வைக்கப்படுகிறது. ஆனால் குழந்தைகளுக்கு இது இரத்த அழுத்தத்தை குறைத்து தீவிர பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும்.

அதிகப்படியான பூண்டு குழந்தைகளின் சருமத்தில் எரிச்சலை உண்டாக்கும்
அதிகப்படியான பூண்டு குழந்தைகளின் சருமத்தில் எரிச்சலை உண்டாக்கும்
பூண்டு அதன் ஆன்டி-செப்டிக் பொருட்களால் சின்ன வெட்டு காயங்கள் போன்றவற்றை சரியாக்குகிறது. அதிகப்படியான பூண்டை தடவினால், அவை சருமத்தில் எரிச்சல், வெந்த சருமம், கொப்புளங்கள் போன்றவற்றை ஏற்படுத்தி தீவிர பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும்.

எனவே சரியான முறையில் சரியான ஆலோசனையை பெற்றுக் கொண்டு உங்கள் குழந்தைகளுக்கு பூண்டை பயன்படுத்துங்கள். பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையை பெற்றுக் கொண்டு அதன் படி செயல்படுவது நல்லது.

Related posts

இது உடலில் ஒருவித போதையை ஏற்படுத்தி பாலுணர்வை தூண்டுகிறது….

sangika

டிரஸ்ல இருக்கிற கறை போகலையா?…அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

படிக்கத் தவறாதீர்கள்! பகலில் தூங்கினால் எடை அதிகரிப்பு மற்றும் மாரடைப்பு ஏற்படும் என்பது உண்மையா?

nathan

குழந்தைக்கு தாய்ப்பால் பிடிக்காமல் போக அம்மா செய்யும் இந்த விஷயங்கள்தான் காரணம்…

nathan

வெயிலுக்கு மொட்டை அடிக்கலாமா? – ஆயுர்வேதம் என்ன சொல்கிறது?

nathan

வீட்டில் இந்த மீன்கள் வளர்த்தால் செல்வம் பெருகும் !தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப பொறாமைக்காரர்களாம்…

nathan

இதை முயன்று பாருங்கள் பிரியாணி இலையை தீயிட்டு கொளுத்தி சுவாசித்தால் ஏற்படும் நன்மைகள்…!!

nathan

காய்கறிகள் மற்றும் பழச்சாற்றின் மூலம் நமது தோலை பள‌பள‌ப்பாக்கும் வழிகள்:

nathan