உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் நாம் நீண்ட காலம் வாழ முடியும். எந்த உணவுகளில் சத்து அதிகமாக உள்ளது என்பதை ஆராய்ந்து சாப்பிட வேண்டியது அவசியம். பழங்கள், காய்கறிகளை விட கீரைகளில் தான் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் கிடைக்கின்றது.
அதிலும் குறிப்பாக முருங்கை கீரையில் 300 வகையான நோய்களை குணப்படுத்தும் திறன் உள்ளது. அந்த காலகட்டத்தில் வீட்டிற்கு ஒரு முருங்கை மரம் இருக்கும். இதனால் அவர்கள் அடிக்கடி முருங்கை கீரையை பறித்து சமைத்து சாப்பிடுவார்கள்.
ஆனால் இந்த நவீன காலத்தில் முருங்கை கீரையை கூட காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். சரி வாங்க முருங்கை கீரையில் ஒளிந்திருக்கும் மகத்துவத்தை குறித்து பார்க்கலாம்..
நன்மைகள்:-
மருத்துவ ஆய்வுகள் படி, முருங்கை கீரையில் 90 வகையான சத்துக்கள் மற்றும் 46 வகையான மருத்துவ குணங்களும் உள்ளன. மற்ற கீரைகளை விட இதில் அதிகப்படியான புரதசத்துக்கள் மற்றும் உடலுக்கு முக்கிய தேவையான மற்ற சத்துகளும் உள்ளது.
தாவர உணவுகளில் உள்ளதை விட 25 சதவீதம் இரும்புசத்து உள்ளது. இதனால் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது. செயற்கை இரும்பு சத்து மருந்து மாத்திரைகளை விட கீரையில் கிடைக்கும் இரும்பு சத்து உடலுக்கு எந்த வித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது.
முருங்கை கீரை மூலம் உடல்சூடு, மந்தம், மூர்ச்சை, கண் நோய்கள் வராமல் தடுக்கலாம். வயிற்று புண்களை ஆற்றவும் பயன்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சமநிலைப்படுத்துகிறது.
கர்ப்பிணிகளுக்கு ரத்த சோகை வராமல் தடுக்கவும், தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்கவும் பயன்படுகிறது. ஆஸ்துமா, மார்புச்சளி, வறட்டு இருமல், தலைவலி, மூட்டுவலி, ஆகிய நோய்களுக்கும் ஆயுர்வேத மருந்தாய் செயல்படுகிறது.