27.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
treatbreathingproblems
ஆரோக்கிய உணவு

தெரிந்துகொள்வோமா? சுவாசப் பிரச்சனைகளை சரி செய்ய உதவும் வீட்டு நிவாரணிகள்!!!

நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம் என்ற பழமொழியை அறியாதவர் யாரும் இருக்க முடியாது. இதை வைத்து பார்க்கும் போது இன்றைய உலகில் ஆப்ரிக்காவின் அமேசான் காடுகளில் இருப்பவர்களை தவிர மற்றவர்களில் 99.9% மக்கள் மிகவும் ஏழையாக தான் இருப்பார்கள். தினசரி ஒரு புதிய ஸ்மார்ட் ஃபோன் வெளிவருவது போல ஒரு புதிய நோயும் கண்டறியப்படுகிறது. எந்த நோயாக இருந்தாலும் அது குறிவைப்பது நமது மூச்சை தான். சுவாசம் தான் நமது உயிரை காக்கும் கவசம். அதற்கே சிரமப்படுபவர்கள் எத்தனையோ பேர் இருகின்றனர். முன்பெல்லாம் நமது வீட்டில் இருக்கும் பழைய பாட்டிகள் தான் மூச்சு விட சிரமப்படுவார்கள். ஆனால், இப்போதெல்லாம் இளம் காளைகளே மூச்சுவிட சிரமப்படுகின்றனர்.

 

சரியான உடற்பயிற்சி இல்லாதது, உடலுக்கு சரியான வேலை தராதது, இதயத்தில் வலிமை குறைவு, யோகா பயிற்சி இல்லாதது என பல காரணங்கள் இதற்கு கூறலாம். இதில் சுவாச கோளாறு ஏற்படுவதற்கு முக்கியமான காரணம் என்னவாக இருக்கும் என்று பார்த்தால் கண்டிப்பாக அது நமது கவனக்குறைவு தான். நமது உடலின் மீது நமக்கே இல்லாத அக்கறையின் காரணமாக தான் பல்வேறான உடல்நல கோளாறுகள் ஏற்படுகின்றன.

 

நாம் ஓடி ஓடி உழைப்பது எதற்காக நல்ல வாழ்வினை அமைத்துக்கொள்ள தானே? அந்த நல்ல வாழ்விற்கு தேவை உங்களது ஆரோக்கியமான உடல்நிலை. சவாசிப்பதற்கே சிரமம் என்றால், எப்படி இருக்கிறது உங்கள் உடல்நிலை என நினைத்துப் பாருங்கள். சரி உங்களுக்கு சுவாசிப்பதில் ஏற்படும் சிரமத்தை சரிசெய்ய சிறந்த வீட்டு நிவாரணங்கள் இருக்கின்றன அதை நீங்கள் சரியான முறையில் சாப்பிட்டு வந்தாலே இது கோளாறு பூரணமாக குணமாகிவிடும்…

இஞ்சி

இஞ்சி, சுவாசக் கோளாறுகளை சரிசெய்வதற்கான ஒரு சிறந்த நிவாரணி. இது ஆஸ்துமா மற்றும் பல சுவாச பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.இது நெஞ்சில் இருக்கும் கபத்தை கரைக்கிறது. தினமும் சிறிதளவு இஞ்சியை உங்களது உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. அல்லது காலை மாலை வேளைகளில் இஞ்சி தேநீர் பருகுவது உங்களது உடல்நலத்தை அதிகரிக்கும்.

அத்திப்பழம்

சுவாசப் பிரச்சனைகளுக்கு தீர்வு தருவதில் அத்திப்பழம் ஒரு சிறந்த உணவாகும். சுவாசிப்பதில் சிரமம் உள்ளவர்கள் தினமும் அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் ஒரு சில வாரங்களிலேயே நல்ல பலனை எதிர்பார்க்காலாம்.

கடுகு எண்ணெய்

சுவாசக் கோளாறுகளுக்கு தீர்வளிப்பதில் சிறந்து விளங்கும் மற்றுமொரு வீட்டு நிவாரணியாக கருதப்படுவது கடுகு எண்ணெய். சுவாசக் குழாயில் இருக்கும் அடைப்புகளை சரி செய்து பழையபடியே நன்கு சவாசமளிக்க சீரிய முறையில் உதவுகிறது கடுகு எண்ணெய்.

பூண்டு

பூண்டில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மூச்சு திணறலை குறைக்க உதவுகிறது. சுவாசக் கோளாறுகள், ஆஸ்துமா போன்றவைக்கும் பூண்டு ஒரு நல்ல வீட்டு நிவாரணி ஆகும்.

காபி

காபியில் இருக்கும் காப்பின் என்னும் மூலப்பொருள் அதிகப்படியாக உட்கொண்டால் ஒரு சில உடல் நல தீங்குகளை உருவாக்கும் என்பது உண்மை. ஆயினும், குறைந்த அளவில் சூடான காபியை உட்கொள்வதனால் சுவாசக் கோளாறுகள் குறைகின்றன. மூச்சு குழாய் அழற்சியை குறைக்க இது உதவுகிறது என கூறப்படுகிறது.

யூக்கலிப்டஸ் எண்ணெய்

மூக்கடைப்பு, சளி போன்றவையில் இருந்து விடுப்பட யூக்கலிப்டஸ் எண்ணெய் சிறந்த நிவாரணியாக திகழ்கிறது. உங்களுக்கு சுவாசிப்பதில் சிரமம் எற்பட்டால், ஒரு துணியில் சில துளி யூக்கலிப்டஸ் எண்ணெய்யால் நனைத்து உங்கள் முகத்தின் அருகில் வைத்துக்கொண்டு உறங்குங்கள். இது உங்களது சுவாசக் கோளாறுகளை சரி செய்யும்.

தேன்

பழங்காலத்தில் இருந்தே சுவாசக் கோளாறுகளுக்கு தேன் ஒரு நல்ல இயற்கை நிவாரணியை திகழ்ந்து வருகிறது. தேனை வாசத்தை முகர்வதினால் சுவாசப் பிரச்சனைகள் சரியாகும் என கூறப்படுகிறது. மற்றும் தேனை சுடு நீரில் கலந்து பருகி வந்தாலும் நல்ல பலன் அளிக்கும்.

வெங்காயம்

வெங்காயம் ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு நல்ல தீர்வளிக்கிறது. வெங்காயத்தை பச்சையாக உண்பது நல்ல பலனளிக்கும் என கூறப்படுகிறது. உங்களது உணவோடு பச்சை வெங்காயத்தை சேர்த்து சாப்பிடுவது நல்லது.

எலுமிச்சை

சுவாசப் பிரச்சனைகள் ஏற்பட முக்கிய காரணமாக கருதப்படுவது வைட்டமின் சி’யின் குறைப்பாடு. ஆஸ்துமா உள்ளவர்களுக்கும் கூட வைட்டமின் சி சத்தின் குறைப்பாடு இருக்கிறது. எலுமிச்சையில் இருக்கும் நிறைந்த வைட்டமின் சி’யின் சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இந்த குறைபாடுகளை சரி செய்ய உதவுகிறது.

ஓமம் விதைகள்

இந்தியாவில், சுவாசப் பிரச்சனைகளுக்கு வீட்டு சிறந்ததொரு வீட்டு நிவாரணியாக திகழ்வது ஓமம் விதைகள். கபத்தை குறைக்க இது சீரிய முறையில் உதவுகிறது. நுரையீரல் சார்ந்த பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வளிக்கிறது ஓமம் விதைகள்.

Related posts

உங்களுக்கு தெரியுமா வெங்காயத்தில் ஒழிந்திருக்கும் அற்புத மருத்துவ குணங்கள்..!

nathan

பழங்கள் சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்க கூடாது தெரியுமா?அவசியம் படிக்க..

nathan

வெயிலுக்கு நீர்சத்து நிறைந்த வெள்ளரிக்காய் – பாசிப்பருப்பு சாலட்

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த ஒரு பொருள் மின்னல் வேகத்தில் எடையைக் குறைக்க உதவும்!

nathan

ப்ளம்ஸ் பழத்தை தங்கள் டயட்டில் நிச்சயம் சேர்த்துக் கொள்ளலாம்..tips .. tips..

nathan

தினமும் ஒரு டம்ளர் ஓட்ஸ் பால் குடிப்பதால் பெறும் நன்மைகள்!தெரிந்துகொள்வோமா?

nathan

மருந்து போல் குணப்படுத்தும் உருளைக்கிழங்கு

nathan

தெரிஞ்சிக்கங்க…காலை வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டிய சாப்பிடக்கூடாத பானங்கள் என்ன தெரியுமா.?

nathan

இந்த ஒரு பொருளுடன் அத்திப்பழம் சாப்பிட்டால் குண்டாகிடுவீங்க…தெரிஞ்சிக்கங்க…

nathan