தேவையான பொருட்கள்
மைதா மாவு – 1 கப்
பொடித்த சர்க்கரை – 1/2 கப்
கஸ்டர்ட் பவுடர் – 1/4 கப்
டூட்டி ஃப்ரூட்டி – 1/4 கப்
முந்திரிப்பருப்பு – 2 மேஜைக்கரண்டி
வெண்ணெய் – 6 மேசைக்கரண்டி
பால் – 1/4 கப்
பேகிங் பவுடர் – 1/4 தேக்கரண்டி
பேக்கிங் சோடா – ஒரு சிட்டிகை
உப்பு – ஒரு சிட்டிகை
ரோஸ் எசன்ஸ் -1/4 தே.க
செய்முறை
பாத்திரத்தில் பொடித்த சர்க்கரை, வெண்ணெய் சேர்த்துக் கரண்டி வைத்து கிரீம் பதத்திற்கு இரண்டும் ஒன்று சேர்த்து வரும் வரை நன்றாக கலக்கவும்.
பிறகு அதில் மைதா மாவு, கஸ்டர்ட் பவுடர், பேக்கிங் பவுடர் சேர்க்கவும்.
அதனுடன் ஒரு சிட்டிகை உப்பு, ஒரு சிட்டிகை பேக்கிங் சோடா சேர்த்து கரண்டி வைத்து நன்றாக கலந்து விடவும்.
பிறகு டூட்டி ஃப்ரூட்டி, முந்திரி பருப்பு, ரோஸ் எசன்ஸ் சேர்க்கவும்.
சிறிது சிறிதாக பால் சேர்த்து ஒன்று சேர பிசையவும். (அழுத்தி பிசைய கூடாது)
நீளவாக்கில் உருட்டி பிளாஸ்டிக் கவர் வைத்து மூடி குளிர்சாதனப் பெட்டியில் ஒரு மணி நேரம் வைக்கவும்.
ஒரு மணி நேரம் கழித்து (சிறிது அழுத்தமாக இருக்கும்) கவரை பிரித்து வட்ட வடிவில் வெட்டவும்.
பிறகு அதை தட்டில் அடுக்கி மைக்ரோவேவ் ஓவனில் 20 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.(அவனை 180 டிகிரி வெப்பநிலையில் 10 நிமிடம் முன்கூட்டியே சூடு படுத்திக் கொள்ளவும்.)
சுவையான ஹைதராபாத் கராச்சி பிஸ்கட் தயார்.
Courtesy: MalaiMalar