தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு – 2 கப்,
காய்ச்சிய பால் – அரை கப்,
உப்பு – அரை டீஸ்பூன்.
ஸ்டஃப் செய்வதற்கு:
முட்டைகோஸ் துருவல் – அரை கப்,
வெங்காயத் துருவல், கேரட் துருவல், பொடியாக நறுக்கிய பசலைக் கீரை – தலா கால் கப்,
எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு,
கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன்,
உப்பு – சிறிதளவு.
செய்முறை:
கோதுமை மாவுடன் பால், உப்பு, தண்ணீர் விட்டு மிருதுவாகப் பிசையவும்.
முட்டைகோஸ் துருவல், கேரட் துருவல், வெங்காயத் துருவல், பசலைக் கீரை ஆகியவற்றுடன் உப்பு சேர்த்துப் பிசறி வைக்கவும். 10 நிமிடம் கழித்து காய்கறிக் கலவையை பிழிந்து கொள்ளவும்.
அதனுடன் உப்பு, எலுமிச்சைச் சாறு, நறுக்கிய கொத்தமல்லி, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள… காய்கறி பூரணம் ரெடி!
பிசைந்த மாவில், கொஞ்சம் மாவை எடுத்து கிண்ணம் போல் செய்து… அதனுள் பூரணம் வைத்து மூடவும். இதேபோல் ஒவ்வொரு ரொட்டியையும் தயார் செய்யவும்.
தோசைக்கல்லை மிதமான தீயில் வைத்து தேய்த்த ரொட்டியை சுட்டெடுக்கவும்.
சத்தான முட்டைகோஸ் ரொட்டி ரெடி.