25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிஞ்சிக்கங்க… நம்மோடு தினமும் உறவாடும் விஷத்தன்மையுள்ள இரசாயனங்கள்!

இரசாயன கலவையில் தயாரிக்கப்பட்ட சமையல் பத்திரங்கள் மற்றும் உணவு அடைத்து வைக்கும் பெட்டிகளின் மூலம் உங்கள் உடலுக்கு ஏற்படும் தீங்குகள் பற்றி உங்களுக்கு தெரியுமா? நீங்கள் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்களில் இது மிக மிக முக்கியமான ஒன்றாகும். நமது இன்றைய ஆடம்பரமாக காட்டிக்கொள்ள வேண்டும் என்ற கட்டாய சமூகத்தின் வீதிகளில் நாம் தினசரி சமையலுக்கு உபயோகப்படுத்தும் பாத்திரங்களின் மூலமாகவும், நாம் தினசரி நமது குழந்தைகளுக்கும், நாமும் உணவு எடுத்து செல்லும் உணவுப் பெட்டிகளிலும் எவ்வளவு நச்சுத்தன்மை இருக்கிறது என்று தெரியாமலேயே பயன்படுத்தி வருகிறோம்.

 

இதுமட்டுமல்ல நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும், சோப்பில், இருந்து பல் துலக்கும் பேஸ்ட் வரை இவற்றில் கலக்கப்பட்டிருக்கும் இரசாயன கலவைகள் உங்கள் அடுத்த சந்ததிக்கான ஆணிவேரையே ஆட்டிவைக்கும் தன்மையுடையது. பிளாஸ்டிக் நமது மண்ணில் மக்கவே பல நூற்றாண்டுகள் ஆகும் என்ற உண்மை அறிந்த நமக்கு சுட சுட சமைத்து அதைப் பிளாஸ்டிக் பெட்டிகளில் அடைத்து மதிய வேலை உணவிற்கு பயன்படுத்துவதினால் எவ்வாறான தீங்குகள் எல்லாம் நமது உடலுக்கு வரும் என நாம் என்றாவது யோசித்ததுண்டா? கட்டாயம் நாம் யோசிக்க வேண்டும். இது, ஆண்களின் ஆண்மையை குறிவைக்கிறது என்பது நம்மில் எவ்வளவு பேருக்கு தெரியும்.

 

இந்நாட்களில் ஆண்களுக்கு ஆண்மை குறைவு ஏற்படுவதற்கும், பெண்கள் மிக சிறிய வயதிலேயே பூப்படைவதற்கும் இதுவும் ஒரு காரணம் என்றால் உங்களால் நம்ப முடியுமா? நம்பி தான் ஆகவேண்டும். இது மட்டுமல்ல. நாம் உபயோகப்படுத்தும் பல இரசாயன கலவைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட சமையல் பாத்திரங்களில்னால் பல்வேறு உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதையெல்லாம் தெரிந்துக்கொள்ள தொடர்ந்துப் படியுங்கள் …

 

பிளாஸ்டிக் பாத்திரங்கள்

பிளாஸ்டிக்கில் இருக்கும் பைசெப்ஃனால்-ஏ (Bisphenol-A (BPA) எனும் இராசாயக் கலவையினால், நமது உடலுக்கு மிகவும் தேவையானது நாளமில்லா சுரப்பிகள் பாதிப்படைகிறது. நாம் பிளாஸ்டிக் பாத்திரங்களில் உணவு உட்கொள்வதனால் நமது உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் பாதிக்கப்படையக் காரணம் என கூறப்படுகிறது. மற்றும் இது பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அளவை பாதிக்கிறது, அவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட ஒரு காரணமாகவும் திகழ்கிறது.

பல் துலக்கும் பேஸ்ட்

ஃப்தலேட்ஸ் (Phthalates) நாம் தினசரி உபயோகப்படுத்தும் உப்பு இருக்கா இல்லையா போன்ற பல் துலக்கும் பேஸ்ட்களில் கலக்கப்படும் பொருள் இது. இது நமது விந்தணுவின் உறபத்தி அளவை குறைக்கிறது, மற்றும் இதனால் மலட்டுத்தன்மை ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கின்றன. மற்றும் இவை தமனிகளை கடுமையாக பாதிக்கின்றன எனவும் கூறப்படுகிறது. இப்போதுள்ள குழந்தைகளுக்கு ஏற்படும் உயர் இரத்த அழுத்தத்திற்கு இதுதான் காரணம் என மருத்துவர்கள் கருதிகின்றனர்.

நான்-ஸ்டிக் தவா

உலகெங்கிலும் தயாரிக்கப்படும் நான் ஸ்டிக் தவாக்கள் அனைத்தும் ஃப்புளூரினேற்றம் செய்யப்பட்ட பின் தான் தயாரிக்கப்படுகின்றன. இந்த இரசாயனம் தண்ணீர் புகாமல் (Water Resistance) இருக்க மர சாமான்களான மேஜை, நாற்காலி, சோஃபா போன்றவற்றில் உபயோகப்படுத்தப்படும் இரசாயனம். இதை கொண்டு தான் நாம் சமைக்க பயன்படுத்தும் நாண்-ஸ்டிக் தவாக்கள் தயாரிக்க படுகின்றன. இதனால் சிறுநீரக செயலிழப்பு, விந்தணு குறைவு, தைராய்டு மற்றும் இதய பாதிப்புகள் ஏற்படுகின்றன. குழந்தைகளுக்கு உடல் எடை அதிகரிக்கவும் இது ஒரு காரணம் என கூறப்படுகிறது.

வீட்டு உபயோக பொருள்கள்

நாம் நமது வீட்டில் பயன்படுத்தும் வீட்டு உபயோக பொருள்களான நாற்காலிகள், சோஃபா, தரை விருப்புகளில் பாலிப்ரோமினேடட் டைபினைல் ஈதர்கள் (Polybrominated Diphenyl Ethers – PBDEs). இவ்வகையான இரசாயனங்களோடு நாம் வருட கணக்கில் வீட்டில் வாழும் போது. இது நமது மூளையை பாதிக்கிறது. நமது ஐ.க்யூ அளவை இது மங்கிவிட செய்கிறது.

துணி துவைக்கும் பவுடர்

நமது உடைகளில் உள்ள கரைகளை ஒரே நிமிடத்தில் போக்கிவிடும், ஒரு சலவையில் பளீச்சென்று ஆக்கிவிடும் என்று கூறப்படும் துணி துவைக்கும் பவுடர்களில் இருக்கும் இரசாயன பொருகளின் மூலம் தான், இந்நாளில் பலருக்கு தீராத தலைவலி, குமட்டல் போன்றவை வர காரணம்.

Related posts

இடுப்பு கொழுப்பை மட்டும் மின்னல் வேகத்தில் கரைக்கணுமா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

நாப்கின் பயன்படுத்தும் போது தவறாமல் கடைபிடிக்க வேண்டிய 7 விஷயங்கள்.

nathan

இரவு உணவருந்திய பிறகு சிறிது நேரம் நடப்பதால் ஏற்படும் உடல்நல நன்மைகள்!!!

nathan

மலட்டுத்தன்மையை தீர்க்க இயற்கை மூலிகைகளிலேயே நிவாரணம்!…

nathan

ஹெல்த் ஸ்பெஷல்.. ஜலதோஷம், மூக்கடைப்பு ஆகியவற்றுக்கு எளிமையான தீர்வுகள்

nathan

சர்க்கரை நோய் இல்லாதவர்களுக்கு ‘இந்த’ அறிகுறிகள் இருந்தா? மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகமாம் -தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

கிரேப் ஃப்ரூட்டின் ஹெல்த்தி – பியூட்டி பலன்கள் 12

nathan

உங்களது பர்ஸில் மறந்தும் இந்த பொருளை வைக்காதீங்க!தெரிஞ்சிக்கங்க…

nathan

தெரிஞ்சிக்கங்க…வெள்ளை சாதம் சாப்பிடுவதை தவிர்த்தால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan