24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
21 6159db
ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க…இந்த கருப்புநிற உணவுப் பொருள்களை இனி தேடி தேடி சாப்பிடுங்க!

அடர்நிற உணவுகளைத் தொடர்ந்து எடுத்துக் கொள்வதன் மூலம் கேன்சர், இதய நோய், ஸ்ட்ரோக் போன்ற நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

மேலும் உடலின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகப்படுத்துவதற்கு இவை முக்கிய பங்கு வகிக்கின்றன.

அப்படி என்னதான் இந்த கருப்பு நிற உணவுகள் இருக்கின்றன என்று இப்பொழுது பார்க்கலாம்.

​கருப்பு அரிசி

பிளாக் பிரைஸ் என்பது நம்முடைய தெற்காசிய கண்டத்தில் விளைவிக்கக்கூடும் படக்கூடிய ஒரு உணவு வகைதான்.

இவற்றில் நாம் மேலே குறிப்பிட்ட ஆன்தோசயனின் அதிக அளவில் காணப்படுகின்றன.

இவை பெரும்பாலும் சைனாவில் பணக்கார குடும்பத்தினர் இந்த உணவுகளை உண்பதாக தகவல்கள் சொல்கின்றன.

இவை உடலின் நோய் எதிர்ப்பு திறனை அதிகப்படுத்தவும், கண் பார்வை திறனை அதிகப்படுத்தவும் பயன்படுகிறது. இதில் அதிக ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால் புற்றுநோய் வராமல் தடுப்பதற்கு உதவுகின்றது. இந்த அரிசியினை பயன்படுத்தி நாம் பிரட், நூடுல்ஸ் போன்ற பல்வேறு முறைகளில் சமைத்து உண்ண முடியும்.

​கருப்பு திராட்சை

இது நம்முடைய ஊர்களிலே காணக் கிடைக்கக்கூடிய பழம் தான். இவற்றில் அதிக இனிப்பு சுவை காரணமாக நாம் இதனை விரும்பி உண்போம்.

இவற்றில் அதிக அளவிலான ஊட்டச்சத்துகளும் காணக்கிடைக்கின்றன. இவற்றினை அதிகம் சாப்பிடுவதன் மூலம் கேன்சர் நோயில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

மேலும், இவை தோல் ஆரோக்கியத்திற்கும் பெரிதும் பயன்படுகின்றன. மற்றும் இதய நோய் வராமல் தடுப்பதற்கும் இவை பெரிதும் பயன்படுகிறது.

​உளுந்தம் பருப்பு

இந்தியாவில் அதிகமாக காண கிடைக்கக்கூடிய பருப்புவகைகளில் ஒன்றுதான். இவற்றினை நாம் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு பைபர், இரும்பு, புரோட்டீன் போன்ற சத்துகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ள முடியும் என்பதால் பெரும்பாலான நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.

​எள்

இவற்றில் இல்லாத ஊட்டச்சத்துகளை இல்லை என்று சொல்லலாம். பைபர், புரோட்டின், மக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், ஜிங்க், காப்பர், செலினியம், வைட்டமின் கே என பல ஊட்டச்சத்துகள் இதில் காணக்கிடைப்பது சிறப்பான ஒன்றாகும்.

இவற்றினை நீங்கள் எடுத்துக் கொள்வதன் மூலம் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் அளவு உங்கள் உணவில் பயன்படுத்தலாம்.

இவற்றினை நீங்கள் சாலட், ஜூஸ், சூப் போன்றவற்றில் இவற்றினை நீங்கள் பயன்படுத்தலாம்.

​கருப்பு பூண்டு

என்னடா இது பூண்டுஎன்றால் வெள்ளையாக தானே இருக்கும் இது என்ன கருப்பு போன்று என்றால் வெள்ளைப்பூண்டு ஒரு கட்டத்திக்கு பிறகு கருப்பு பூண்டாக மாறிவிடும் அல்லது சில முறைகள் மூலம் நாமே கருப்பு பூண்டாக மாற்றலாம் இவை பெரும்பாலும் மாமிசம், சூப், நூடுல்ஸ் ஆகியவை தயாரிப்பதற்கு இவற்றினை இந்திய சமையலறையில் அதிகம் பயன்படுத்துவார்கள்.

இவை நமக்கு கேன்சர் வராமல் தடுப்பதற்கு இவை உதவிபுரிகின்றன. இவற்றில் பல்வேறு நன்மைகள் இருப்பது குறிப்பிடதக்கது.

இவற்றில் ஏகப்பட்ட நன்மைகள் இருந்தாலும் சில தீமைகளும் இருக்கத்தான் செய்கின்றன. அளவுக்கு அதிகமாக இருந்தால் அமிர்தமும் நஞ்சு என்பது போல இவற்றினை அதிக அளவில் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஓரளவிற்கு தான் இவற்றினை எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒருவேளை நீங்கள் ஏற்கனவே சில டயட் முறைகளை பயன்படுத்துபவர் என்றால் உங்களுடைய நலவிரும்பி, மருத்துவர் ஆலோசனைக்கு பிறகு இவற்றினை எடுத்துக்கொள்வது உங்களுக்கு மிகுந்த பயனளிக்கும்.

 

Related posts

சேலம் ஸ்டைலில் மட்டன் குழம்பு செய்வது எப்படி

nathan

தெரிஞ்சிக்கங்க…கால்சியம் மற்றும் வைட்டமின் டி உட்கொள்ளலை அதிகரிப்பதில் உதவக்கூடிய பரந்த அளவிலான உணவுகள்..!!!

nathan

மணத்தக்காளிக்காய்

nathan

கோதுமை பாயாசம் செய்வது எப்படி?

nathan

உணவுப் பொருட்கள் சீக்கிரம் கெடாமல் இருக்க சில டிப்ஸ்!!!

nathan

சூப்பர் டிப்ஸ் கெட்ட கொழுப்பை கரைக்க சோயா பீன்ஸ் சுண்டல்..!

nathan

பெண்களே தெரிந்துகொள்ளுங்கள்! கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிட வேண்டிய சில சைவ உணவுகள்!!!

nathan

ஆரோக்கியத்திற்கு நல்லது கொய்யா ….

nathan

பித்தக்கோளாறை போக்கும் அன்னாசி பழம்

nathan