25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
14 123
ஆரோக்கிய உணவு

சுவையான பாகற்காய் சட்னி

காலையில் தோசை அல்லது இட்லிக்கு தேங்காய் சட்னி செய்து போர் அடித்திருந்தால், சற்று வித்தியாசமாக பாகற்காய் கொண்டு சட்னி செய்து சாப்பிடுங்கள். இது ஆரோக்கியமானது மட்டுமின்றி, சுவையாகவும் இருக்கும். அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளவாறு செய்து சாப்பிட்டால், பாகற்காயின் கசப்பே தெரியாது.

சரி, இப்போது அந்த பாகற்காய் சட்னியை எப்படி செய்வதென்று பார்ப்போம். குறிப்பாக இந்த சட்னி சாதத்திற்கு சூப்பராக இருக்கும்.

Bitter Gourd Chutney
தேவையான பொருட்கள்:

பாகற்காய் – 1
துருவிய தேங்காய் – 2-3 டேபிள் ஸ்பூன்
மல்லி – 1 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் – 5-6
புளி – 1 எலுமிச்சை அளவு
வெல்லம் – 1 எலுமிச்சை அளவு
உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

எண்ணெய் – 2-3 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/4 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

செய்முறை:

முதலில் பாகற்காயை துண்டுகளாக்கி அதில் உள்ள விதைகயை நீக்கிக் கொள் வேண்டும்.

பின்னர் அதில் 1 டீஸ்பூன் உப்பு மற்றும் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அப்படி ஊற வைத்த பின் பாகற்காயானது நீரை வெளியேற்றியிருக்கும். அப்போது அதனை வெளியேற்றிவிட்டு, அதில் சிறிது தண்ணீர் தெளித்து மீண்டும் நன்கு பிரட்டி விட வேண்டும். இதனால் பாகற்காயில் உள்ள கசப்பானது குறைந்திருக்கும்.

பின் புளியை நீரில் 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின்பு மிக்ஸியில் பாகற்காய், மல்லி, சீரகம், வரமிளகாய், உப்பு, புளி மற்றும் வெல்லம் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் அரைத்து வைத்துள்ள சட்னியை சேர்த்து வேண்டுமானால் சிறிது தண்ணீர் சேர்த்து கிளறி, மிதமான தீயில் 15-20 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

எப்போது சட்னியின் நிறமானது அடர் சிவப்பு நிறத்தில் மாறுகிறதோ, அப்போது சட்னியை இறக்கினால், பாகற்காய் சட்னி ரெடி!!!

Related posts

சத்தான வெஜிடபிள் பணியாரம்

nathan

உங்களுக்கு தெரியுமா இதெல்லாம் சாப்பிட்டா ஒரே மாசத்துல ஹைட்டாகலாம்!!

nathan

பித்தம், அஜீரணம், வாய்க்கசப்பை போக்கும் தனியா பத்திய குழம்பு

nathan

மாதவிடாய் காலத்தில் இந்த உணவுகளையெல்லாம் நீங்க தள்ளி வச்சுடுங்க!!

nathan

எச்சரிக்கை கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடிப்பதை உடனே நிறுத்துங்கள்

nathan

மணத்தக்காளி கீரையின் அற்புத மருத்துவ பயன்கள் !!

nathan

தெரிஞ்சிக்கங்க…30 வயதிற்கு மேல் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ சாப்பிட வேண்டிய உணவுகள்!

nathan

தக்காளி சாப்பிடுவதால் இவ்வளவு ஆபத்தா?தெரிஞ்சிக்கங்க…

nathan

சுவையான பசலைக்கீரை உருளைக்கிழங்கு மற்றும் கத்திரிக்காய் வறுவல்

nathan