26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
3 watermelon
ஆரோக்கிய உணவு

கோடையில் தவிர்க்க வேண்டிய உடல் சூட்டை அதிகரிக்கும் உணவுப் பொருட்கள்!!! தெரிஞ்சிக்கங்க…

கோடைக்காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இப்போதே சூரியனின் கதிர்கள் நம்மை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக அடிக்கடி நமக்கு தாகம் ஏற்படுவதோடு, உடலும் அதிகமாக வெப்பமடைந்துவிடும். இதனால் நிம்மதியாக சிறுநீர் கழிக்கவே முடியாது. மேலும் கோடையில் தான் பைல்ஸ் பிரச்சனை அதிகம் வரும். பைல்ஸ் என்னும் மூல நோய் வருவதற்கு முக்கிய காரணம், உடல் சூடு தான்.

ஆகவே உங்களுக்கு பைல்ஸ் பிரச்சனை வரக்கூடாதெனில், உடலை கோடைக்காலத்தில் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு பழங்களை அதிகம் சாப்பிடுவதோடு, நீராகாரங்களையும் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதே சமயம் ஒருசில உணவுப் பொருட்களை அளவாக எடுத்து வர வேண்டும். ஏனெனில் அவை உடலின் வெப்பத்தை அதிகரிக்கும். குறிப்பாக இந்த உணவுப் பொருட்களை மே மாதத்தில் எடுத்துக் கொள்வது தவிர்ப்பது நல்லது.

இங்கு அப்படி கோடையில் உடலின் வெப்பத்தை அதிகரிக்கும் பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த உணவுப் பொருட்களில் கவனமாக இருந்தால், கோடையை வெற்றிகரமாக சமாளிக்கலாம்.

தேங்காய் எண்ணெய்

குளிர்காலத்தில் உணவில் தேங்காய் எண்ணெயை சேர்த்து சாப்பிடுவது நல்லது. ஆனால் கோடையில் இதனை அதிகம் எடுத்துக் கொள்வதைத் தவிர்ப்பது தான் நல்லது. ஏனெனில் இவை உடலின் வெப்பநிலையை அதிகரிக்கும். தேங்காய் எண்ணெயில் ஆரோக்கியமான சாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்துள்ளது. இவை உடலில் கொழுப்புச் செல்களாக சேராமல், உடைக்கப்பட்டு எனர்ஜிகளாக மாற்றப்படுகின்றன. மேலும் இதில் ஆன்டி-வைரல் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் தன்மை இருப்பதோடு, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்கும்.

ஐஸ் தண்ணீர்

வெயிலில் அலைந்து திரிந்து வீட்டிற்கு வந்ததும், அனைவருக்கும் ஃப்ரிட்ஜில் உள்ள தண்ணீரை குடிக்க வேண்டும் என்று தோன்றும். ஆனால் ஐஸ் தண்ணீர் உடலின் வெப்பநிலையைத் தான் அதிகரிக்கும் என்பது தெரியுமா? ஐஸ் வாட்டர் உடலில் உள்ள கலோரிகளை கரைத்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றினாலும், உடலின் வெப்பநிலையை அதிகரிப்பதில் முதன்மையான ஒன்று. ஆகவே கோடையில் ஐஸ் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும்.

தர்பூசணி

கோடையில் அதிகம் விற்கப்படும் தர்பூசணியில் என்னதான் நீர்ச்சத்து அதிகம் இருந்தாலும், இது உடலின் வெப்பநிலையை அதிகரிக்கக்கூடிய பழங்களில் ஒன்று. ஆகவே தர்பூசணி உடலுக்கு குளிர்ச்சியானது என்று தவறாக எண்ணி அதிகமாக அதனை சாப்பிட்டுவிடாதீர்கள். பின் உடல் சூடு பிடித்துக் கொள்ளும்.

வேர்க்கடலை

வேர்க்கடலையில் நியாசின் என்னும் வைட்டமின் பி3 அதிகம் உள்ளது. இது உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மெட்டபாலிசத்தை உயர்த்தும். இத்தகைய வேர்க்கடலை உடலின் வெப்பநிலையை அதிகரிப்பதில் முக்கியமான ஒன்று. ஆகவே கோடையில் வேர்க்கடலை உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.

கைக்குத்தல் அரிசி

ஏற்கனவே சூடான உடல் கொண்டவர்கள், கைக்குத்தல் அரிசியை கோடைக்காலத்தில் உட்கொள்ள வேண்டாம். கைக்குத்தல் அரிசி எவ்வளவு தான் ஆரோக்கியமான உணவுப் பொருளாக இருந்தாலும், அதனை கோடையில் உட்கொள்வதை தவிர்த்திடுங்கள். ஏனென்றால், கைக்குத்தல் அரிசி உடலின் வெப்பநிலையை அதிகரிக்கக்கூடியவை.

இஞ்சி

இஞ்சியைப் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டுமென்பதில்லை. இது நல்ல காரசாரமான உணவுப் பொருள் என்பதால், இயற்கையாகவே இதற்கு உடலின் வெப்பநிலையை உயர்த்தும் குணம் உள்ளது. எனவே கோடையில் இஞ்சியை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

Related posts

தூதுவளை சூப்

nathan

உங்களுக்கு தெரியுமா எலுமிச்சை ஜூஸ் குடிப்பதன் மூலமாக நாமடையும் ஆரோக்கிய பயன்கள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா நுங்கில் இவ்வளவு சிறப்புகள் இருக்கா?

nathan

இளமைக்கு உத்தரவாதம் தரும் இயற்கை உணவுகள்!

nathan

உங்களுக்கு தெரியுமா பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் ஏற்படும் 10 ஆரோக்கிய நன்மைகள்!

nathan

உங்களுக்கு தெரியுமா செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

உணவே மருந்து !!!

nathan

பெண்களின் நோய் தீர்க்கும் கீரைத்தண்டு!

nathan

கேரட் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா….!

nathan