டயட்டிங்கில் இருப்பவர்களுக்கு உடல் எடையை குறைக்க கிரீன் டீ மிகுந்த உதவியாக இருக்கும். ஆனால் சரியான நேரத்தை அறிந்து குடிக்க வேண்டும். இதில் டானின்ஸ் என்ற வேதிப்பொருள் உள்ளது.
காலையில் எழுந்தவுடன் கிரீன் டீ குடிப்பதால் உடலில் அமிலத்தன்மை சுரக்கிறது. இதனால் குமட்டல், வாந்தி போன்ற ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படகூடும். கிரீன் டீ நல்லது தான். ஆனால் வெறும் வயிற்றில் கிரீன் டீ குடிப்பதால் என்ன நடக்கும் தெரியுமா? வாங்க தெரிந்துகொள்ளலாம்.
- வெறும் வயிற்றில் கிரீன் டீ குடிப்பதால் புரோட்டீன் அளவு குறையும். இதனால் இரத்த ஓட்டம் தடைப்பட்டு உயிருக்கே ஆபத்தாய் முடியும். எனவே கிரீன் டீ குடிப்பதற்கு முன் எதாவது உணவு சப்பிட்டே ஆகா வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
- அதுபோல இரத்த குழாய் அடைப்பால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் கிரீன் டீ குடிக்க கூடாது. கிரீன் டி உடலின் ஆற்றலை இழக்க வைக்கிறது. உடலில் உள்ள முக்கிய இரும்பு சத்துக்களையும் உறுஞ்சிவிடுகிறது.
- இதய பாதிப்பு, இரத்தக் கொதிப்பு மற்றும் அனிமியா போன்ற நோய்கள் உள்ளவர்களும் கிரீன் டீயை வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது.
- கிரீன் டீயில் உள்ள கஃபைன் மன அழுத்தத்தை உண்டாக்குவதால் இதயத்துடிப்பு வேகமாக அதிகரிக்கும். இது இதய கோளாறு கொண்டவர்களுக்கு முற்றிலும் தீங்கை விளைவிக்கும்.
- இதனால் காலை எழுந்ததும் வெறும் கிரீன் குடிக்காமல் ஊற வைத்த தானிய வகைகள், பழங்களின் சாலட், பிஸ்கெட் இப்படி ஏதாவதொன்றை சாப்பிட்ட பிறகு கிரீன் டீ குடிக்கலாம்.