25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
suryaworkoutfor7aamarivu2 copy
ஆரோக்கியம் குறிப்புகள்

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…நல்ல திடமான உடலுக்கு அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

அனைவரும் ஷாருக்கான், சல்மான் கான், சூர்யா, விக்ரம் போல இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறோம். ஆனால், அதற்கான செயலில் இறங்க தான் முற்றிலுமாக மறந்துவிடுகிறோம். இன்றைய சூழ்நிலையில் நோய்களிடம் இருந்து நாம் தான் தப்பி ஓடி ஒளிந்துக் கொள்ள வேண்டும். அந்த அளவிற்கு புதிது புதிதாக பல நோய்கள் தினம் தினம் தோன்றுகின்றன. அவைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று ஒரு கேள்வி எழுந்தால், நீங்கள் செய்ய வேண்டிய ஒரே செயல் ஆரோகியமான உணவு மட்டுமே. நாம் ஏதோ ஒரு சில காரணங்களினால் நமது உணவுப்பழக்கத்தை மாற்றிக்கொண்டுவிட்டோம். அதன் விளைவுகளே நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்ததற்கான காரணம்.

 

ஒருசில உணவுகளைப் பொருட்களை நமது அன்றாட உணவுகளில் நாம் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். உதாரணத்திற்கு மஞ்சள், தேன், முட்டை, இஞ்சி போன்றவை நமது உடல்திறனையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது. இது போல ஒருசில உணவுகள் நமது தினசரி உணவில் பங்கெடுக்கும் பட்சம், நமது உடல்திறன் எப்போதும் உச்சத்திலேயே இருக்கும். சரி இனி நமது உணவுப்பழக்கத்தில் நாம் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவுகளை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்…

அஞ்சறை பெட்டிய கண்டா, அஞ்சி ஓடும் நோய்கள்!

இஞ்சி

இஞ்சி உடல் வலியை குறைக்கவும். குமட்டல் ஏற்படாமல் இருக்கவும் உதவுகிறது.

செர்ரி

சரும செல்களை புதிப்பிக்கவும், அதில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கவும் செர்ரி உதவுகிறது. சருமப் பிரச்சனைகளில் இருந்து விரைவில் வெளிப்பட உதவுகிறது.

மஞ்சள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மஞ்சள் வெகுவாக உதவுகிறது. மற்றும் மூட்டு வழிகளில் இருந்து விடுபடவும் நல்ல பயனளிக்கிறது.

முட்டை

தசைகளுக்கு நல்ல ஊட்டமளிக்க வல்லது முட்டை. இதிலுள்ள உயர்த்தர ஊட்டச்சத்துகள் உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது. இதில் உள்ள புரதச்சத்து உங்களது உடல்திறனை அதிகரிக்க உதவுகிறது

மீன்

உங்கள் உணவுப்பழக்கத்தில் தினமும் மீனை சேர்த்துக் கொள்வதினால் கண் பார்வைக்கு நல்லது மற்றும் இதில் அதிகம் புரதச்சத்து இருக்கிறது. இது உங்களது உடல் வலிமையை அதிகரிக்க உதவுகிறது.

பிஸ்தா

உடற்பயிற்சி செய்பவர்கள் மட்டுமல்லாது அனைவரும் பிஸ்தாவை தினசரி சாப்பிடலாம். இதிலுள்ள உயர்தர வைட்டமின் சத்துகள் எலும்புகள் வலுபெற உதவுகிறது.

பட்டாணி

பட்டாணியில் உங்களது உடல் எடையைக் கட்டுப்படுத்தும் தன்மை இருக்கிறது மற்றும் இது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

திராட்சை

திராட்சை உங்களது உடலில், சக்தியை அதிகரிக்க உதவுகிறது, உடற்பயிற்சி செய்யும் முன்னர் நீங்கள் திராட்சையை உட்கொள்வது நல்ல பயன் தரும்

வாழைப்பழம்

ஒரு நாளுக்கு உங்களுக்கு தேவையான சத்துகளில், அதிகமானதை தரவல்லது வாழைப்பழம்.

ஓட்ஸ்

ஓட்ஸ் உங்களது உடல் எடையை குறைக்க உதவும் சரியான உணவு. மற்றும் உங்கள் உடல் வலுவை அதிகரிக்க ஓட்ஸ் உதவுகிறது.

Related posts

கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய காய்கறி மற்றும் பழங்கள்! தெரிஞ்சிக்கங்க…

nathan

இந்த நேரத்தில் கனவு கண்டால் மிகவும் ஜாக்கிரதை….தெரிஞ்சிக்கங்க…

nathan

கொழுப்பை குறைக்க தினமும் 10 டம்ளர் தண்ணீர் குடியுங்கள்

nathan

கருஞ்சீரகம் தண்ணீர் பயன்கள்

nathan

உங்க ஆரோக்கியத்தைப் பத்தி உங்க நாக்கு என்ன வாக்கு சொல்லுதுன்னு தெரியுமா!!! தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

nathan

இந்த 5 ராசிக்காரங்கள காதலிக்கிறது ரொம்ப ஈஸியான விஷயமாம்…

nathan

“எலுமிச்சை சாறுடன் தேன் குடிப்பது நல்லதா’

nathan

கழிவறையில் 10 நிமிடங்களுக்கு அதிகமாக உட்கார்ந்திருந்தால் என்ன நடக்கும் தெரியுமா?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

தமன்னா வோட ஃபிட்னெஸ் சீக்ரெட் இதுதானாம்! என்னன்னு தெரிஞ்சுக்கனுமா? இதைப் படிங்க!!

nathan