29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
5012539 sirukeerai
ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க…தினமும் கீரை சாப்பிட்டீங்கன்னா, இந்த நோயெல்லாம் தூரமா ஓடிடும்!

இந்திய உணவு கலாச்சாரம் மருத்துவ குணம் வாய்ந்தது என நாம் அனைவரும் அறிந்தது தான். நாம் உபயோகப்படுத்தும் மசாலா பொருள்களில் இருந்து பருப்பு வகைகள், தானியங்கள் என அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இதில் நாம் முக்கியமாக தெரிந்துக்கொள்ள வேண்டியது கீரை வகைகளை பற்றி. பாட்டி வைத்தியம் பற்றி நாம் பேசும் போது அதில் கீரையை தவிர்த்திட முடியாது. ஏனெனில், நமது பாட்டிமார்கள் வைத்தியம் பார்த்ததே கீரை மற்றும் மூலிகை இலை, கொடிகளை வைத்துதான். கீரையை நம் முன்னோர்கள் தினசரி உணவில் உபயோகப்படுத்தியதன் காரணம், அதனுடைய மருத்துவ குணங்களை அறிந்ததினால் தான்.

 

இன்று நாம் மாதம் ஒருமுறை குடும்பத்துடன் சுற்றுலா செல்கிறோமோ இல்லையோ, வீட்டில் யாருக்காவது உடல்நிலை சரியில்லை என மருத்துவமனைக்கு செல்கிறோம். இதன் காரணம் நமது உணவு முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் தான். நமது கால தட்பவெட்ப நிலைக்கு எந்த உணவு உகந்ததோ அதை தான் நாம் சாப்பிட வேண்டுமே தவிர, இது சுவைமிக்க சுவிட்சர்லாந்து உணவு, இது ஆஸ்திரேலியாவில் பிரசித்திபெற்ற உணவு என நமது உடல்நிலைக்கும், கால நிலைக்கும் பொருந்தாத உணவுகளை உட்கொள்ள கூடாது. நமது உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளையும் கொண்டுள்ள உணவு கீரை. அதிலுள்ள மருத்துவ குணம் பற்றி நாம் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டும்…

வெந்தயக்கீரை

வெந்தயக்கீரை உடலுக்கு ஊக்கத்தை அளிக்க கூடியது. வயிற்றுப்புண்கள் மற்றும் பேதியை குறைக்கும். அதிகமாக இரும்பு சத்துக்கொண்ட இந்த கீரைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்கள் தொடர்பான நோய்கள் குறையும்.

முருங்கைக்கீரை

இந்த கீரை மிகவும் சக்தி மற்றும் வலிமை வாய்ந்த கீரை ஆகும். அதிக அளவில் இரும்பு சத்து கொண்டது. ஆண்மையை அதிகரிக்க செய்யும். மலச்சிக்கல் குறையும். உடலின் வெப்பத்தை குறைக்கும். இந்த கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப்புண் மற்றும் இருதய நோய்கள் தாக்காமல் தடுக்கலாம். இரத்தத்தை சுத்தப்படுத்தும். மாதவிடாயின் போது ஏற்படும் வலிகளை குறைக்கும். இரத்தச்சோகைகளை குறைக்கும்.

அரைக்கீரை

அரைக்கீரை உடலில் இருக்கும் விஷங்களை முறிக்கும் சக்தி கொண்டது. மேலும் தோல் சம்பந்தப்பட்ட நோய்களை குறைக்கும். இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் காணப்படும். தேமல், சிரங்கு, சொறி போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.

சிறுகீரை

உடலுக்கு ஊக்கத்தை தந்து தளர்ச்சியை போக்க வல்லது. குடல் புண்கள் மற்றும் குடலுக்கு வலிமையை தரக்கூடியது. மலச்சிக்கல் குறையும். இந்த கீரைகளை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் உடலில் அதிக பித்தத்தை குறைக்கும்.

அகத்திக்கீரை

இந்த கீரை உடலில் காணப்படும் அதிக அளவு வெப்பத்தை குறைக்கும். பித்தம் மற்றும் தலைச்சுற்று, மயக்கம் போன்ற பித்த சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குறைக்கும் வல்லமை வாய்ந்தது. அகத்தி கீரையை அளவாக எடுத்து சாப்பிட்டு வந்தால் நோய்களை போக்கும். அளவுக்கு மீறி சாப்பிட்டு வந்தால் பேதி ஏற்படும். எனவே அகத்திக்கீரையை அளவாக உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்.

மணத்தக்காளி கீரை

இது வயிற்றுப்புண்களை போக்கும் திறன் வாய்ந்தது. குடல் புண்களை குறைத்து குடலுக்கு பலம் அளிக்கும். இந்த கீரைகளை தொடர்ந்து உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கருப்பை கோளாறுகளை குறைக்கும்.

பாலக்கீரை

இந்த கீரை உடலுக்கு வலிமையை தரக்கூடியது. மலச்சிக்கலை குறைக்கும். இதை தொடர்ந்து உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடல் நோய்கள் எதுவும் வராமல் தடுக்கும்.

புளிச்சக்கீரை

இந்த கீரை உடலுக்கு வளமை தரக்கூடியது. இந்த கீரையை அதிகமாக உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுக்கடுப்பு, இரத்தபேதி மற்றும் சீதபேதியை குறைக்கும்.

பசலைக்கீரை

இந்த கீரை உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. சிறுநீர் கட்டை குறைத்து நீரை வெளியேற்றும் சக்தி வாய்ந்தது. இந்த கிரையை சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும். குடல் புண்களை குறைக்கும்.

Related posts

கனவாய் மீன் வறுவல் செய்ய..!

nathan

6ம் எண்ணில் பிறத்தவர்களின் பொதுவான குணங்கள் -தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

தினம் ஒரு லிச்சிபழம்

nathan

நரம்பு மண்டல பாதிப்பை கட்டுப்படுத்தும் சுக்கு கஷாயம்

nathan

இதை கட்டாயம் படியுங்கள் உடல் மற்றும் இரத்தத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற உதவும் உணவுகள்!

nathan

சூப்பர் டிப்ஸ்! உடலில் உள்ள தேவையற்ற கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் கொத்தவரங்காய்..!

nathan

பிரச்சினை வரும் உஷார்! மதிய உணவு சாப்பிட்ட பிறகு இந்த 5 விடயங்களை கட்டாயம் செய்யாதீங்க!

nathan

புளி அல்ல… மாணிக்கம்!

nathan

செய்முறைகளுடன் ஜிஞ்சர் சிக்கன்

nathan