27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
sapota fruit chiku fruit SECVPF
ஆரோக்கிய உணவு

சத்துக்கள் நிறைந்த ‘சப்போட்டா’! புற்று நோயை கட்டுப்படுத்துவதிலும் பங்கு வகிக்கின்றன

சப்போட்டா, நார்ச்சத்து கொண்டது. 100 கிராம் பழத்தில் 5.6 கிராம் நார்ச்சத்து உள்ளது. சப்போட்டாவில் உள்ள நார்ப்பொருட்கள் புற்று நோயை கட்டுப்படுத்துவதிலும் பங்கு வகிக்கின்றன.

சத்துக்கள் நிறைந்த ‘சப்போட்டா’

சப்போட்டா காயாக இருக்கும்போது வெளிப்படும் பால் போன்ற வேதிப்பொருள் தான் டேனின். இது சிறந்த நோய் எதிர்ப்பு பொருள்.

வெப்பமண்டல கனிகளில் பரவலாக சாப்பிடப்படும் பழ வகை, சப்போட்டா. மத்திய அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட சப்போட்டா, மெக்சிகோ, பெலிசி போன்ற மழைக்காடு பகுதிகளில் மிகுதியாக வளர்கிறது. இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, மலேசியா போன்ற வெப்ப மண்டல நாடுகளிலும் அதிகமாக விளைகிறது.

சப்போட்டா, நார்ச்சத்து கொண்டது. 100 கிராம் பழத்தில் 5.6 கிராம் நார்ச்சத்து உள்ளது. இவை எளிதில் ஜீரணம் ஆகக்கூடியது. சப்போட்டாவில் உள்ள நார்ப்பொருட்கள் புற்று நோயை கட்டுப்படுத்துவதிலும் பங்கு வகிக்கின்றன.

சப்போட்டா பழத்தில் வைட்டமின்-சி அதிக அளவில் உள்ளது. 100 கிராம் பழத்தில் 24.5 சதவீதம் ‘வைட்டமின்-சி’ கிடைக்கிறது. தீங்கு தரும் பிரீ-ரேடிக்கல்களை நீக்குவதிலும், நோய்த் தொற்று ஏற்படாமல் காப்பதிலும் ‘வைட்டமின்-சி’ யின் பங்கு மகத்தானது.

அத்தியாவசிய வைட்டமின் ஆன, வைட்டமின்-ஏ குறிப்பிட்ட அளவில் காணப்படுகிறது. இதுபோக பொட்டாசியம், தாமிரம், இரும்பு போன்ற தாதுக்களும், போலேட், நியாசின், பான்டோதெனிக் ஆசிட் போன்றவையும் உள்ளன.

Courtesy: MalaiMalar

Related posts

வாழைத்தண்டு மோர்–அல்சர் – அசிடிட்டிக்கான அசத்தல் ரெசிபிக்கள்!

nathan

எலுமிச்சை தேநீர் ஆரோக்கிய நன்மை

nathan

கருத்தரிப்புக்கு உதவும் உணவுகள் – நலம் நல்லது – 4!

nathan

ஆலு பன்னீர் கோப்தா

nathan

கருணை கிழங்கு தீமைகள்

nathan

முந்திரி அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

nathan

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு என்ன செய்ய வேண்டும்? தெரிஞ்சிக்கங்க…

nathan

உருளைக்கிழங்கின் மருத்துவ குணங்கள்

nathan

சுவையான சேமியா வெஜிடபிள் உப்புமா

nathan