26.7 C
Chennai
Sunday, Feb 23, 2025
jackfruit
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா பலாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

சாலையின் ஓரத்தில் இருக்கும் தள்ளுவண்டியை கடக்கும் போது வாசனை தூக்குகிறதா? ஆம், அதான் முக்கனிகளுள் ஒன்றான பலாப்பழத்தின் சீசன் ஆரம்பித்துவிட்டதே? பின் வாசனை தூக்காமலா இருக்கும். அப்படி விற்கப்படும் பலாப்பழத்தின் வாசனையை நுகர்ந்து மட்டும் செல்லாமல், அதனை வாங்கி சாப்பிடவும் செய்யுங்கள். ஏனெனில் பலாப்பழம் வருடம் முழுவதும் கிடைக்காது. அதற்கென்று வரும் சீசன் போது வாங்கி சாப்பிட்டால் தான், அதன் உண்மையான சுவையை ருசிக்க முடியும்.

 

பலாப்பழம் மட்டுமின்றி, அதன் விதையிலும் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. அதில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், பைட்டோ நியூட்ரியன்ட்டுகள், கார்போஹைட்ரேட்டுகள், எலக்ரோலைட்டுகள், நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் போன்றவை வளமாக உள்ளது. மேலும் இப்பழத்தில் கலோரிகள் இருக்கிறது ஆனால் கொழுப்புக்கள் இல்லை. ஆகவே இப்பழத்தை எவ்வித அச்சமும் இல்லாமல் ரசித்து ருசித்து சாப்பிடலாம். அதுமட்டுமின்றி, இது உடலுக்கு மட்டுமின்றி அழகைப் பாதுகாக்கவும் உதவுகிறது. சரி, இப்போது பலாப்பழத்தின் நன்மைகளைப் பார்ப்போமா!!!

மலச்சிக்கல்

பலாப்பழத்தை சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், செரிமான மண்டலம் சீராக செயல்பட்டு, நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, முகம் பொலிவோடு இருக்கும்.

புரோட்டீன்

பலாப்பழத்தில் புரோட்டீன் அதிகம் இருப்பதால், இதனை சீசன் போது தினமும் உட்கொண்டு வாருங்கள். மேலும் இது பருப்பு வகைகளுக்கு சிறந்த மாற்றாக விளங்கும். இதனால் பருப்புக்களின் மூலம் ஏற்படும் வாய்வுத் தொல்லையைத் தவிர்க்கலாம்.

நோயெதிர்ப்பு சக்தி

பலாப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், இவற்றை உட்கொள்வதன் மூலம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் காய்ச்சல், சளி போன்றவை தாக்காமல் தடுக்கலாம்.

ஆற்றல்

பலாப்பழத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் இருக்கிறது. மேலும் இதில் உடலின் ஆற்றலை அதிகரிக்கும். சிம்பிள் சர்க்கரையான ஃப்ருக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் அதிகம் உள்ளது.

புற்றுநோயைத் தடுக்கும்

பலாப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், பைட்டோ நியூட்ரியன்டுகள் மற்றும் ப்ளேவோனாய்டுகள் உள்ளது. இவை புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்.

இரத்த அழுத்தம்

பலாப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இது உடலில் சோடியத்தின் அளவை சீராக பராமரிக்கும். இதனால் உடலில் உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறையும்.

செரிமானம்

பலாப்பழத்தில் நார்ச்சத்து வளமாக நிறைந்திருப்பதால், அவற்றை உட்கொள்வதன் மூலம் செரிமான பிரச்சனைகள் நீங்கும்.

குடல் புற்றுநோய்

பலாப்பழத்தில் டயட்டரி கொழுப்புக்கள் அதிகம் இருப்பதால், அவை குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, குடல் புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்.

பார்வையை மேம்படுத்தும்

பலாப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், அவை பார்வை கோளாறு ஏற்படுவதைத் தடுப்பதோடு, கண்களில் புரை ஏற்படுவதையும் தடுக்கும். முக்கியமாக பலாப்பழத்தில் கண்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் ஏ அதிகம் உள்ளது.

சரும ஆரோக்கியம்

தற்போது விரைவிலேயே முதுமைத் தோற்றம் ஏற்படுகிறது. ஆனால் பலாப்பழத்தை உட்கொண்டு வந்தால், விரைவில் முதுமைத் தோற்றம் ஏற்படுவதைத் தடுத்து, சருமத்தை இளமையோடு பாதுகாக்கலாம்.

ஆஸ்துமா

ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டவர்கள், பலாப்பழத்தை சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விரைவில் நிவாரணம் பெறலாம்.

எலும்புகளின் ஆரோக்கியம்

பலாப்பழத்தில் உள்ள கால்சியம், எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதோடு, எலும்புகளை வலிமையோடும் வைத்துக் கொள்ளும். இதனால் ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் நாள்பட்ட மூட்டுவலி ஏற்படுவதைத் தடுக்கலாம்.

இரத்த சோகை

பலாப்பழத்தில் வைட்டமின் ஏ, சி, ஈ, கே, நியாசின், வைட்டமின் பி6, ஃபோலேட், பேன்டோதெனிக் ஆசிட், காப்பர், மாங்கனீசு மற்றும் மக்னீசியம் அதிகம் இருப்பதால், அவை இரத்தம் உருவாக உதவும். மேலும் இப்பழம் உடலானது இரும்புச்சத்தை உறிஞ்சி, இரத்த சோகை ஏற்படுவதைத் தடுக்கும்.

சளி மற்றும் நோய்த்தொற்றுகள்

பலாப்பழத்தில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், இவற்றை உட்கொள்ளும் போது, சளி மற்றும் நோய்த்தொற்றுகள் தாக்குவது தடுக்கப்படும். மேலும் ஒரு கப் பலாப்பழத்தில் உடலுக்கு வேண்டிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கிடைத்து, நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை அடையும்.

இரத்த சர்க்கரை அளவு

உடலில் மாங்கனீசு குறைபாட்டினால் ஏற்படுவது தான் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாவது. ஆனால் இந்த சத்து பலாப்பழத்தில் அதிகம் இருப்பதால், இதனை சாப்பிட்டு வந்தால், இரத்த சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ளலாம்.

தைராய்டு

தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியத்திற்கு காப்பர் மிகவும் முக்கியமான ஒன்று. உடலில் காப்பர் குறைபாடு ஏற்பட்டால், அது தைராய்டு சுரப்பியில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும். இத்தகைய காப்பர் பலாப்பழத்தில் இருப்பதால், தைராய்டு இருப்பவர்கள், இதனை உட்கொள்வது நல்லது.

மாலைக்கண் நோய்

பலாப்பழத்தில் கண்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் ஏ உள்ளது. ஆகவே இந்த பழத்தை உட்கொண்டு வந்தால், மாலைக்கண் நோய் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

இதய நோய்

பலாப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6, இரத்தத்தில் ஹோமோசிஸ்டின் அளவை குறைத்து, இதயத்தை சீராகவும் ஆரோக்கியமாகவும் செயல்பட உதவும்.

அல்சர்

அல்சர் இருப்பவர்கள், பலாப்பழத்தை உட்கொண்டு வந்தால், அல்சர் குணமாவதுடன், வயிற்றுப் பிரச்சனைகளும் நீங்கும்.

சரும சுருக்கம்

பலாப்பழத்தின் விதையை பாலில் சிறிது நேரம் ஊற வைத்து, பின் அதனை அரைத்து முகத்தில் தடவி மாஸ்க் போட வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், ஆறே வாரங்களில் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும்.

கூந்தல் வளர்ச்சி

பலாப்பழத்தின் விதைக்கு உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் சக்தி உள்ளது. ஆகவே இதன் விதையை சமைத்து சாப்பிட்டு வந்தால், தலை முதல் கால் வரை இரத்த ஓட்டம் சீராக இருந்து, இதனால் தலையில் முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

பட்டுப்போன்ற சருமம்

நல்ல பட்டுப் போன்ற சருமத்தைப் பெற, பலாப்பழத்தின் விதையை உலர வைத்து, அதனை பால் மற்றும் தேனுடன் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி, உலர வைத்து கழுவி வேண்டும். இப்படி செய்து வந்தால் பட்டுப் போன்ற சருமத்தைப் பெறலாம்.

வைட்டமின் ஏ

பலாப்பழத்தின விதையில் உள்ள வைட்டமின் ஏ, முடிக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று. முக்கியமாக முடியின் ஆரோக்கியத்தையும், முடியில் ஏற்படும் வறட்சியையும் தடுக்கும்.

Related posts

தினமும் காலையில் வெந்தயத்துடன் இதை சேர்த்து சாப்பிடுவது நல்லதா? தெரிஞ்சிக்கங்க…

nathan

பெண்களுக்கு மிகவும் உகந்த கருப்பு உளுந்து களி

nathan

உங்களுக்கு தெரியுமா இடியாப்பம் அடிக்கடி சாப்பிட்டால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் ?

nathan

உங்களுக்கு தெரியுமா ஆண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய சில முக்கிய உணவுகள்!

nathan

ஆண்கள் விளாம்பழம் சாப்பிடலாமா?

nathan

karuveppilai benefits in tamil – கருவேப்பிலை பயன்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து சாப்பிட்டால் நிகழும் அதிசயம்

nathan

உடல் எடையை குறைக்கும் கொள்ளு இட்லி

nathan

பப்பாளி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது!

nathan