ஆரோக்கியமான உணவு என்றால் அவைகளைப் பற்றி அதிகமாக தெரிந்து கொள்ளாமல், குருட்டுத்தனமாக அவைகளை அதிகமாக உண்ணுவது பொதுவாக நடக்க கூடிய ஒன்றே. ஆரோக்கியமான உணவு உங்களை குண்டாக்கும் என்பதை மறந்து விடக்கூடாது. ஆம், உண்மையை தான் கூறுகிறோம். ஏனென்றால் முக்கால்வாசி ஆரோக்கியமான உணவுகளில் கலோரிகள் வளமையாக உள்ளன. இதைக் கேட்ட பிறகு அவைகளை உண்ணுவதை நிறுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் சரியான அளவில் உட்கொள்வது மிகவும் முக்கியமாகும்.
அன்றாட வாழ்க்கையில் நாம் உழைப்பதற்கு நம் உடலுக்கு இயற்கையான மற்றும் ஆரோக்கியமான உணவுகள் தேவைப்படும். நம் உடலுக்கு சில ஊட்டச்சத்துக்கள் செயற்கையாக கிடைப்பதில்லை. அதனால் அவைகளை உணவு மூலம் தான் பெற வேண்டும். நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சி செய்தாலும் கூட, அனைத்து விதமான ஆரோக்கியமான உணவுகளும் தேவையே, ஆனால் மிதமான அளவில்.
இந்த கட்டுரையில், அளவாக உட்கொள்ளவில்லை என்றால் உங்கள் எடையை அதிகரிக்க செய்யும், வளமையான கலோரிகளை கொண்ட ஆரோக்கியமான சில உணவுகளைப் பற்றி தான் நாம் பார்க்க போகிறோம். இங்கே நாம் பார்க்க போகும் சில உணவுகள் ஆரோக்கியமானதாக தெரியலாம், ஆனால் அவைகள் அப்படியில்லை. இவ்வகையான உணவுகளை நீங்கள் முழுமையாக தவிர்க்க வேண்டும்.
பழுப்பு அரிசி
இப்போதெல்லாம் பழுப்பு நிற அரிசியைப் பயன்படுத்தும் ஆரோக்கிய போக்கு நம்மிடையே நிலவி வருகிறது. வெண்ணிற அரிசிக்கு பதிலாக மக்கள் இப்போது பழுப்பு நிற அரிசியை தான் பெரும்பாலும் விரும்புகின்றனர். இதற்கு காரணம், பழுப்பு நிற அரிசியில் நார்ச்சத்தும் பல ஊட்டச்சத்துக்களும் வளமையாக உள்ளது. இருப்பினும், பழுப்பு நிற அரிசி உங்களை வேகமாக குண்டாக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? அதற்கு காரணம், ஒரு கப் அளவில் 35 கி அளவிலான கொழுப்பு உள்ளது. ஒரு வேளையில் நாம் கண்டிப்பாக ஒரு கப்பிற்கு அதிகமாக தான் அரிசி உண்ணுவோம் என்பதை மறந்து விடாதீர்கள்.
டையட் பானங்கள்
சந்தையில் கிடைக்கும் குளிர் பானங்களில் “டையட்” என குறிப்பிடப்பட்டிருந்தால் உடனே அதனை நம்பி விடாதீர்கள். அதற்கு பதிலாக “கொழுப்பு” என்று தான் அவற்றில் எழுதப்பட்டிருக்க வேண்டும். “சுகர் ஃப்ரீ” அல்லது “ஜீரோ கலோரி” சர்க்கரை என சேர்க்கப்பட்டிருக்கும் டையட் பானங்களில் அஸ்பார்டேம் உள்ளது. அதனால் அவைகளை அதிகமாக உட்கொள்ளும் போது கொழுப்பு அதிகரிக்கும். அதனால் தான் டையட் பானங்களுக்கு பதில் சாதாரண குளிர் பானங்களையே பருகுங்கள்.
தயிர்
தயிரில் நல்ல பாக்டீரியாவும் கால்சியமும் உள்ளதால் அது நம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஒவ்வொரு நாளும் நீங்கள் சிறிய கிண்ணத்தில் தயிரை உண்ணுங்கள். இருப்பினும், தயிரில் அதிகளவில் கலோரிகளும் கொழுப்பும் அடங்கியுள்ளது. சுவை கலந்த தயிரை நீங்கள் வாங்கினால், அதில் கூடுதல் கலோரிகள் இருக்கும். அதற்கு காரணம், அதில் சில சர்க்கரை, சுவையூட்டிகள் மற்றும் இதர பிற்சேர்க்கைகள் அடங்கியிருக்கும். நீங்கள் உடல் எடையை குறைக்க நினைத்தாலும் இவைகள் அதற்கு வழி விடாது.
வெண்ணெய் பழம்
நாம் அனைவரும் அறிந்ததை போல், வெண்ணெய் பழத்தில் வைட்டமின்கள், கனிமங்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் வளமையாக உள்ளது. அதனால் இதில் தீவிரமான உடல்நல பயன்கள் அடங்கியுள்ளது. ஆனால் இது உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் என்பதை நீங்கள் அறிவீர்களா? இதில் கொழுப்பும் கலோரியும் அதிகமாக உள்ளது. ஒரு முழு வெண்ணெய் பழத்தில் கிட்டத்தட்ட 350 கலோரிகள் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?
நட்ஸ்
நட்ஸ் என்பது சிறந்த ஆரோக்கியமான நொறுக்குத்தீனி என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அவைகளில் புரதம், நார்ச்சத்து, பல வைட்டமின்கள், கனிமங்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் வளமையாக அடங்கியுள்ளது. இருப்பினும் அவற்றில் கலோரிகளும் அதிகமாக உள்ளது. அதனால் அவைகளை அதிகமான அளவில் உட்கொள்ளாமல் பரிந்துரைக்கப்பட்ட அளவையே எடுத்துக் கொள்ள வேண்டும். கால் சதவீத பாதாமில் 132 கலோரிகள் உள்ளது. படம் பார்க்கும் போது பாப் காரன் உண்ணுவதற்கு பதிலாக நட்ஸ்களை கொரித்தால், உங்களுக்கு தொப்பை தான் வரும்.
பேக் செய்யப்பட்ட பழச்சாறு
பழச்சாறுகளை வீட்டில் தயார் செய்து பருகினால் ஆரோக்கியமானது. ஆனால் அவற்றை வெளியே இருந்து வாங்கி வந்தால், அவை உங்களுக்கு ஆரோக்கியமற்றதாக மாறும். பேக் செய்யப்பட்ட பழச்சாறுகளில் சர்க்கரை, ரசாயன பதப்பொருட்கள் மற்றும் சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டிருக்கும். இவை உடல் பருமனை ஏற்படுத்தி, இதர உடல்நலம் தொடர்பான சிக்கல்களையும் உண்டாக்கி விடும்.
உலர்ந்த பழங்கள்
பேரிச்சம்பழம், அத்திப்பழம், கிஸ்மிஸ் பழம், உலர்ந்த முந்திரிப்பழம் போன்ற சில உலர்ந்த பழங்களில் தண்ணீர் இல்லாமல் சர்க்கரை அதிகமாக சேர்க்கப்பட்டிருக்கும். இருப்பினும், அவைகளில் நார்ச்சத்தும் பல ஊட்டச்சத்துக்களும் வளமையாக உள்ளது. ஆனால் அதே அளவிலான கலோரிகளும் அடங்கியுள்ளது. சர்க்கரையும் கலோரிகளும் நற்பதமான பழங்களில் உள்ளதை விட, இதில் 8 மடங்கு அதிகமாக உள்ளது. ஒரு கப் உலர்ந்த கிஸ்மிஸ் பழத்தில் கிட்டத்தட்ட 460 கலோரிகள் உள்ளது. ஆனால் ஒரு கப் திராட்சையில் வெறும் 60 கலோரிகளே உள்ளது.
ரெடிமேட் சாலட்கள்
ரெடிமேட் சாலட் ஆர்டர் செய்தால் தான் ஆரோக்கியமான உணவை உண்ட திருப்தியை நாம் அடைவோம். கண்டிப்பாக சால்ட் என்பது ஆரோக்கியமான உணவுகளில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. ஆனால் ரெடிமேட் சாலட்டில் செய்யப்படும் அலங்கார பொருட்கள் மற்றும் சாஸ் ஆரோக்கியமானதா? இத்தகைய சாலட் பிற்சேர்க்கைகள், ஆரோக்கியமற்ற கொழுப்புகள் மற்றும் கலோரிகளை வளமையாக கொண்டுள்ளது. இதனால் உடல் பருமன் ஏற்படும். அதனால் சாதாரண சாலட்டை குறைந்த அளவில் உண்ணுங்கள்.