31.4 C
Chennai
Sunday, Apr 27, 2025
woman
ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிஞ்சிக்கங்க…பெண்கள் கூற விரும்பி, கூறாமல் மறைக்கும் விஷயங்கள்!!!

ஆண் தோழனால் தன் நண்பன் மகிழ்ச்சியை இரட்டிப்பு ஆக்க முடியும். ஆனால், ஓர் பெண் தோழியால் மட்டுமே சோகத்தை பாதியாக குறைக்க முடியும். பெண் தோழியால் மட்டுமே சில கிறுக்குத்தனமான செயல்களில் ஈடுபட முடியும். மற்றும் அந்த கிறுக்குத்தனமான செயல்களை பெண் தோழி செய்யும் போது மட்டும் தான் ஆண் தோழனால் பொறுத்துக்கொள்ள முடியும்.

காதலி, தங்கை, அக்கா போன்றவர்களுடன் ஏற்படும் காதலுக்கும், ஓர் பெண் தோழி மீது ஏற்படக்கூடிய காதலுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. இது, ஓர் நல்ல பெண் தோழியுடன் நட்பு பாராட்டும் ஆண்களுக்கு மட்டுமே தெரியும். இவர்களுக்கு மத்தியில் இரகசியங்கள் கூட பாதுகாக்கப்படும்…..

குடும்பத்தை விட பெரியதாய்
நீ என் குடும்பத்தில் ஒருவனாக இல்லை எனிலும் கூட, என் வாழ்க்கையில் அதை விட முக்கியமான நபராக நீ இருக்கிறாய்.

தவறு நடக்கும் போது
நான் ஏதேனும் தவறு செய்துவிட்டால் உன்னை தான் முதலில் அழைக்க நினைப்பேன்.

அறிவுரை
எனக்கு ஏதேனும் அறிவுரை தேவைப்படுகிறது எனும் பட்சத்தில் நான் நினைக்கும் முதல் நபர் நீதான்.

நினைவுகள்
என் வாழ்க்கையில் பொக்கிஷமாக நினைக்கும் நினைவுகள், நான் உன்னுடன் இருந்த தருணங்களே ஆகும்.

அழுகை வரும் போது
என் நாளின் இறுதியில், நான் அழக்கூடாது என நினைக்கும் போது, உனக்கு தான் முதலில் குறுஞ்செய்தி அனுப்புகிறேன்.

சண்டை
சண்டையிட்டுக் கொண்டு சில நாட்கள் நாம் பேசாமல் இருக்கும் போதும் கூட எனக்கு தெரியும், நாம் எப்படியும் கூடிய விரைவில் பேசிவிடுவோம் என்று எனக்கு தெரியும்.

தவறான எண்ணம்
நான் கிறுக்குத்தனமான காரியங்களில் ஈடுபடும் போது கூட நீ என்னை தவறாக பார்க்க மாட்டாய் என எனக்கு தெரியும்.

நட்புடன்
என் வாழ்நாளில் கடைசி வரை நீ இதே தோழமையுடன் என்னுடன் இருக்க வேண்டும்.

உன்னுடன் இருப்பேன்
உனது அனைத்து இன்ப, துன்பங்களிலும் உனக்கு துணையாக இருப்பேன்.

காதல்
காதலையும் தாண்டிய அன்பு உன்மேல் நான் கொண்டுள்ளேன்.

Related posts

உடல் எடையை அதிகரிக்க!

nathan

கடுமையான கோபம் அடைபவர்களும் மாரடைப்பு நோயால் அவதி- ஆய்வில் தகவல்

nathan

மன நோயை குணப்படுத்தும் மீனெண்ணெய் மாத்திரைகள்

nathan

உடல் எடைக்கு ஏற்ப தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்

nathan

எலும்புகளில் கால்சியக் குறைபாடு ஏற்படுவதால் தேய்மானம் ஏற்படுகின்றது. பெண்களுக்கு எந்த வயதில் ஏற்படுகிறது தெரியுமா…?

nathan

உடல் எடையை குறைக்க எலுமிச்சை டயட்

nathan

கட்டாயம் இதை படியுங்கள் ஹைப்பர் ஆக்டிவிட்டி, ஆட்டிஸம் குறைபாடுகளையும் சில பயிற்சிகளின் வழியாகச் சரிசெய்யலாம்.

nathan

காலையில் கண் விழித்ததும் உள்ளங்கையைப் பார்த்தால் நல்லது நடக்கும்!

nathan

தெரிஞ்சிக்கங்க…தூங்கும் போது ஏன் கால்களுக்கு நடுவே தலையணை வெச்சு தூங்கணும்-ன்னு சொல்றாங்க தெரியுமா?

nathan