27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
pregnant doctor
மருத்துவ குறிப்பு

இந்த அறிகுறிகள் இருந்தால்… அலட்சியம் காட்ட வேண்டாம்..!

இன்றைய காலக்கட்டத்தில் எந்த வயதினருக்கு எது மாதிரியான நோய்கள் உண்டாகும் என்றே கணிக்க முடியாத நிலை உள்ளது. நாம் சாதாரணமாக எடுத்து கொள்ளும் உடல்நல பிரச்சினை கூட பின்னாளில் பெரும் பிரச்சினையாக மாறலாம். எந்த நோயும் அறிகுறிகள் இல்லாமல் ஒருவரை பாதிப்பதில்லை.

அறிகுறிகள் ஏற்படும்போதே உஷாராகி விட்டால் பெரிய பிரச்னைகள் வராமல் நம்மைக் காத்துக்கொள்ளலாம்.

அப்படி நிச்சயம் அலட்சியப்படுத்தக்கூடாத அறிகுகள் குறித்து காண்போம்.

நெஞ்சுப் பகுதியில் அழுத்தமாக உணர்வது, இதயம் இறுகுவதுபோல உணர்வது, தாங்க முடியாத தொடர்வலி… முதலியவை உடனே கவனிக்கப்பட வேண்டியவை. இவை இதயம் தொடர்பான கோளாறுகளுக்கான அறிகுறிகளாகவும் இருக்கலாம். எனவே, தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகவும்.

திடீரென்று தாங்க முடியாத தலைவலி ஏற்படுவது, மூளை தொடர்பான பிரச்னைகளுக்கான முக்கியமான அறிகுறி. தலைவலியுடன் சேர்த்து கண்களில் பாதிப்பு ஏற்படுவது, இன்னும் ஆபத்தானது. குறிப்பாக, கண்களின் பின்பகுதியில் வலிப்பது, பார்வை மங்கலாகத் தெரிவது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

குறிப்பிட்ட சில காலங்களுக்குள் உடல் எடை அதிகம் குறைவதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றே. சர்க்கரைநோய், நாளமில்லாச் சுரப்பி பாதிப்புகள், புற்றுநோய் போன்றவற்றுக்கான அறிகுறிகளாகவும் இவை இருக்கலாம்.

உடலின் ஏதாவது ஒரு பகுதியில் தொடர்ந்து கட்டிகள் வருவதும் ஆபத்தே. பெரும்பாலும் இவை புற்றுநோய்க்கான அறிகுறிகளாக இருக்கும்.

சிலருக்கு அடிவயிற்றில் அடிக்கடி வலி எடுக்கும். இந்தப் பிரச்னை இருக்கும் பலர், அது செரிமானக் கோளாறாக இருக்கலாம் என்று சுய மருத்துவம் செய்துகொள்வதைக் காணலாம். உண்மையில் நீர்க்கட்டி, அல்சர், குடல்வால் அழற்சி, குடல் பாதிப்புகள் போன்றவற்றின் அறிகுறிகளாகவும் அடிவயிற்றில் வலி இருக்கக்கூடும்.

வாந்தி, தொடர் வயிற்றுப்போக்கு, அதிகளவு காய்ச்சல்… இவை மூன்றும் ஏற்பட்டு, இரண்டு நாள்களுக்கும் மேலாக உடல் வலுவின்றி இருப்பவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

Related posts

குழந்தை அளவுக்கு அதிகமா பால் குடிச்சிருகுனு எப்படி கண்டுபிடிக்கிறது?பெண்களே தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

பெண்கள் வெளியில் சொல்ல கூச்சப்படும் உடல் உபாதைகள்

nathan

எலுமிச்சை சாறு

nathan

கர்ப்பிணிகள் சுடுதண்ணீரில் குளித்தால் கருச்சிதைவு ஏற்படுமாம்…தெரிந்துகொள்வோமா?

nathan

சலரோகத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க!….

sangika

மலச்சிக்கல் தீர்க்கும் கடுக்காய்ப் பொடி

nathan

சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை

nathan

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா!

nathan

சுவர்களை அழகாக வைத்துக் கொள்ள என்ன வழி?

nathan