Other News

திருமண மோதிரத்தை நான்காவது விரலில் மட்டும் அணிவதற்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா?

பொதுவாக காதலர்கள் தங்களின் காதல் திருமணத்தில் முடிந்து தங்களுடைய அடுத்தப் பயணத்தை வெற்றிகரமாக தொடங்க வேண்டும் என்று விரும்புவார்கள். திருமணத்திற்கு அடையாளமாக இருப்பது அவர்களின் நிச்சயதார்த்த அல்லது திருமண மோதிரம்தான். திருமணத்தின் அடையாளமாக தாலி இருந்தாலும் மோதிரம் மாற்றிக்கொள்வது என்பது இப்பொழுது பரவலாக இருக்கும் ஒரு பழக்கமாகும்.

திருமண மோதிரம் என்பது வெறும் சாதாரண நகை அல்ல, அது தம்பதிகளுக்குள் ஏற்படப்போகும் பந்தத்தின் அடையாளமாக இருக்கிறது. மோதிரம் மாற்றிக்கொள்ளும் நாம் ஏன் அதனை எப்பொழுதும் நான்காவது விரலில் அணிகிறோம் என்று எப்போதாவது சிந்தித்து உள்ளோமோ? உலகம் முழுவதும் நான்காவது விரலில்தான் திருமண மோதிரத்தை அணிகின்றனர். அதற்கு பின்னால் பல காரணங்களும்,கதைகளும் இருக்கிறது.

தோற்றம்

திருமணத்தின் அடையாளமாக இடது கையில் மோதிரம் அணியும் வழக்கம் கிபி 1549 ஆம் ஆண்டில் இருந்துதான் தொடங்கப்பட்டது. ஐரோப்பாவில் இருந்த கத்தோலிக்க திருச்சபையில்தான் இந்த பழக்கம் முதன் முதலாக தொடங்கப்பட்டது. அதற்கு முன் வலது கையில்தான் மோதிரம் அணியப்பட்டு வந்தது. அல்லது கை ஒருவரின் பலத்தை பிரதிபலிப்பதால் இந்த பழக்கம் கடைபிடிக்கப்பட்டு வந்தது. அதன்பின் பல்வேறு மாற்றங்களால் இது இடக்கைக்கு மாற்றப்பட்டது.

ரோமானியர்களின் நம்பிக்கை

இந்த பாரம்பரிய பழக்கத்திற்கு பின்னால் ரோமானியர்களின் நம்பிக்கையும், கோட்பாடும் உள்ளது. . விஞ்ஞானம் அதிகம் முன்னேறாதபோது, நம் கையின் நான்காவது விரலில் இருந்து ஒரு நரம்பு நேராக இதயத்திற்கு ஓடுகிறது என்று நம்பப்பட்டது. இது பொதுவான நம்பிக்கையாக கருதப்பட்டாலும் இதற்கு பின்னால் வேறு சில காரணங்களும் இருந்தது.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

 

சீனர்களின் நம்பிக்கை

சீனர்களின் நம்பிக்கைப்படி நம்முடைய ஒவ்வொரு விரல்களும் ஒவ்வொரு உறவை பிரதிபலிக்கிறது. அந்த வகையில் நமது நான்காவது விரல் நம்முடைய வாழ்க்கைத்துணையை பிரதிபலிக்கிறது. கட்டை விரல் பெற்றோர்களையும், நடுவிரல் உங்களையும், சுண்டு விரல் குழந்தைகளையும் பிரதிபலிக்கிறது. இந்த காரணத்திற்கு பின்னால் சீனர்கள் ஒரு விளையாட்டையும் வடிவமைத்துள்ளார்கள்.

சீனர்களின் விளையாட்டு

உங்களின் இரண்டு கைகளையும் ஒன்றாக இணைத்து வையுங்கள். உங்களை பிரதிபலிக்கும் உங்களின் நடுவிரலை மட்டும் கீழ்நோக்கி மடக்குங்கள். மீதமுள்ள விரல்கள் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டிருக்க வேண்டும். இப்பொழுது உங்கள் குழந்தைகளின் விரலான சுண்டு விரலை பிரிக்க முயற்சியுங்கள். உங்களால் எளிதில் இதனை செய்ய முடியும். ஏனெனில் குழந்தைகள் குறிப்பிட்ட காலம் வரைதான் உங்களுடன் இருப்பார்கள். அவர்களுக்கான குடும்பம் அமைந்த பிறகு உங்களை விட்டு விலகிவிடுவார்கள்.

மற்ற விரல்கள்

இதனைத் தொடர்ந்து உங்களின் விரலாய் பிரிக்க முயலுங்கள், இதையும் எளிதில் செய்து விடலாம், உங்கள் உடன்பிறந்தவர்களும் உங்களை விட்டு விலகுவதன் அடையாளம் இது. இதேபோல உங்களின் கட்டை விரலையும் நீங்கள் பிரிக்கலாம். உங்கள் பெற்றோரும் காலம் முடிந்தவுடன் உங்களை விட்டு விலகிவிடுவார்கள்.

 

வாழ்க்கைத்துணை

இப்போது உங்கள் வாழ்க்கைத்துணை விரல் மட்டும் மீதமிருக்கும். அதனை நீங்கள் எவ்வளவு முயன்றாலும் பிரிக்க முடியாது. ஏனெனில் உங்கள் வாழ்க்கைத்துணை மட்டுமே உங்களுடன் இறுதிவரை வரப்போகிறார்கள் என்பதே இதன் அர்த்தம். இதனால்தான் நான்காவது விரலில் மோதிரம் அணியப்படுவதாக சீனர்கள் கூறுகிறார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button