Gongura Thokku Pulicha Keerai Thokku SECVPF
ஆரோக்கிய உணவு

சுவையான கோங்குரா தொக்கு

தேவையான பொருட்கள் :

கோங்குரா (புளிச்ச கீரை) – 2 கட்டு

கடலைப்பருப்பு – ஒரு மேஜைக்கரண்டி
வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 20
புளி – எலுமிச்சை அளவு
சீரகம் – ஒரு தேக்கரண்டி
நல்லெண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

கோங்குரா (புளிச்ச கீரை) இலைகளை மட்டும் கிள்ளி நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடலை பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்துப் பொன்னிறமாக வறுக்கவும்.

இதை ஆறவைத்து அரைத்துக் கொள்ளவும்.

மீண்டும் வாணலியில் எண்ணெய் விட்டு கோங்குராவை நன்கு சுருண்டு வரும் பதம் வரை வதக்கவும். கோங்குரா ஆறியதும் புளி, உப்பு சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்.

இறுதியாகப் முதலில் அரைத்தவற்றை சேர்த்து ஒரு சுற்று சுற்றி இறக்கிவிடவும்.

சாதம், சப்பாத்தி என்று எல்லாவற்றுடனும் இந்தத் தொக்கு ஜோராக இருக்கும்.

Related posts

ருசியான பருப்பு போளி செய்ய…!

nathan

ஆண்மையை அதிகரிக்கும் வால்நட்

nathan

உங்களுக்கு தெரியுமா வல்லாரையின் விவரமான மருத்துவப் பயன்கள்

nathan

கத்தாழை மீன் : கத்தாழை மீனின் சிறப்பம்சங்கள்

nathan

உடல் பருமனை குறைக்குமா கிரீன் டீ?அதை எவ்வாறு அருந்த வேண்டும்?

nathan

கமலா ஆரஞ்சு பழத்தில் எத்தனை சத்துக்கள் உள்ளன தெரியுமா!

nathan

குளிர்சாதன பெட்டி வைக்கப்பட்ட இறைச்சியை சாப்பிடலாமா?

nathan

ரத்த நாளங்களில் படியும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துகிறது கவுனி அரிசி.

nathan

சூப்பரான பாதாம் ராகி மால்ட்

nathan