26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
Bottle Gourd Curry benefits SECVPF
ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க…தொப்பையை கரைக்க மட்டுமல்ல சர்க்கரை நோயாளிகளுக்கும் இந்த காய் சிறந்தது

உடலில் நீர்ச்சத்தினை அதிகரிக்க, சுரைக்காயை வாரத்திற்கு இருமுறையாவது எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

சுரைக்காயில் உடலுக்குத் தேவையான பல சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. சுண்ணாம்பு சத்து, வைட்டமின் சி, வைட்டமின் கே, கால்சியம், நார்ச்சத்து உள்ளிட்டவை இருக்கிறது. 95% நீர்ச்சத்து நிறைந்த காய்கறி சுரைக்காய்.

நீர்ச்சத்து அதிகமிருப்பதால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல், சிறுநீரகத்தில் கல் உள்ளிட்ட பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கிறது. மலச்சிக்கலுக்கும் சிறந்த தீர்வு. மேலும் குடலில் புண்கள் இருந்தால் சுரைக்காய் சாப்பிட்டு வர குணமாகும். உடல் சூட்டைக் குறைக்கும்.

சர்க்கரை நோயாளிகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினைக் கட்டுக்குள் வைக்க சுரைக்காயை வாரம் இருமுறை சாப்பிடலாம். உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வாரத்திற்கு 3 முறையாவது சுரைக்காயை எடுத்துக்கொள்ளுங்கள்.

உடலில் கெட்ட கொழுப்புகளை கரைக்கவும் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றவும் உதவுகிறது. குறிப்பாக வயிற்றுப்பகுதில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்க அதாவது தொப்பையைக் குறைக்கும் ஒரு எளிய மருந்து சுரைக்காய்.

சுரைக்காய் சாப்பிடுவதால் வயதாகும் சரும செல்களை புத்துணர்வு அடைய வைக்கும். இதனால் சருமம் பொலிவு பெறும். இளமையைத் தக்கவைக்கலாம்.

 

Related posts

சுவையான குடைமிளகாய் மசாலா

nathan

அடிக்கடி காய்ச்சல் மற்றும் பிற நோய்களால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்வது எப்படி…?

nathan

வாய்ப்புண், வயிற்றுபுண்ணை குணமாகும் கசகசா கஞ்சி

nathan

மெல்லிடை மேனிக்கு வெங்காயப் பச்சடி!

nathan

யார் யார் எந்தெந்த ஜூஸ் குடிக்கலாம்? 10 பழச்சாறுகள்…

nathan

தெரிஞ்சிக்கங்க…சூடான தண்ணீரில் உப்பு கலந்து குளிப்பதால் இத்தனை நன்மைகளா?

nathan

உணவே மருந்தாகும்… உடற்பயிற்சியே துணையாகும்!

nathan

வெயில் காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் முளைக்கீரை

nathan

எந்த நோய்க்கு எந்த பழம் மிகவும் நல்லது? இதை படிங்க…

nathan