மருத்துவ குறிப்பு

BP-யை குணமாக்கும் அக்குபங்க்சர்

முப்பத்தைந்து வயதை தாண்டுபவர்கள் BP எனும் இரத்த அழுத்தத்தை பற்றி கவனம் கொள்ள வேண்டும்.

நமது இதயம் துடிக்கும்பொழுது ரத்தத்தின் அழுத்த அளவு (140) -க்கும் மிகையாகவும், இதயம் துடிக்காமல் இருக்கும் பொழுது அழுத்த அளவு (90) க்கும் மிகையாகவும் இருந்தால், அதை உயர் ரத்த அழுத்தம் என்று மருத்துவ முறை சொல்கிறது.

உடலில் உள்ள உப்பின் அளவு, நீரின் அளவு, சிறுநீரகம், பல விதமான ஹார்மோன்களின் நிலை ஆகியவற்றால் ரத்த அழுத்தம் மாற்றம் அடையும்.

தேவையான / சரியான ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் உண்டாக வாய்ப்புகள் மிகக்குறைவு. உயர் ரத்த அழுத்தம் ஏற்பட மரபு ரீதியான காரணங்கள் மற்றும் சுற்றுச்சூழல் காரணங்கள் ஆகியவையே.

அன்றாட வாழ்க்கை சூழல் நிலையை மாற்றுவதன் மூலம் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டுவரமுடியும். உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு இதயத்தில் அளவுக்கு அதிகமான அழுத்தம் ஏற்ப்படும். எனவே குறிப்பிடும் படியாக உயர் ரத்த அழுத்தம் இருக்கும். இதனால் பெரும்பாலானோர் உடல் எடையை குறைப்பதன் மூலம் உயர் ரத்த அழுத்த பிரச்சினைக்கு தீர்வு காணலாம்.

அளவுக்கதிகமான புகைப் பழக்கம், குடிப்பழக்கம், தூக்கமின்மை ஆகியவைகளும் உயர் அழுத்தத்திற்கான காரணிகள் ஆகும்.

உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்வதன் மூலம் சற்று பயனளிக்கும்.

இந்த உயர் ரத்த அழுத்ததிற்கு அக்குபங்க்சர் புள்ளிகளை கொண்டு நிரந்தரமாக சரி செய்து விட முடியும்!

கீழ்காணும் அக்கு புள்ளிகளை, உங்கள் ஆள்காட்டி விரலாலோ அல்லது கட்டை விரலாலோ அழுத்தம் கொடுக்கவேண்டும், ௭ (7) முறை கடிகார சுற்றும் ௭ (7) முறை எதிர் கடிகார சுற்று முறையிலும் அழுத்தம் கொடுப்பது ரத்த அழுத்தத்தைபோக்கும் வழிமுறை!

அக்கு புள்ளிகள் : GV20, ST 36, LIV 3, LIV 2, SP 6, UB23

1459937333 7599

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button