25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
coveriageddggs
ஆரோக்கிய உணவு

உடல் பூஸ்ட்-அப் ஆக சாப்பிட வேண்டிய உணவுகள்! தெரிஞ்சிக்கங்க…

ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை அனைத்து நடிகர்களும் தங்களது உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துள்ளதைக் கண்டு அவர்களை ரசிக்கும் ரசிகர்களும் அவர்களைப் போலவே தன்கள் உடலையும் பேணிக் காக்க விரும்புகின்றனர். தமிழகத்தில் இதை தொடங்கி வைத்த பெருமை “வாரணம் ஆயிரம்” சூர்யாவிற்கு தான் சேரும். தீடீரென சிக்ஸ் பேக் உடல்கட்டுடன் திரையில் தோன்றி அனைவரையும் மிரள வைத்தார். இதனால், தானாக முற்பட்ட ஆண்களை விட காதலில்களால் வற்புறுத்தப்பட்டு ஜிம்மிற்கு சென்ற ஆண்கள் தான் அதிகம்.

உடலை கட்டமைப்புடன் வைப்பதில் ஆண்கள் செய்யும் 14 தவறுகள்!!!

உடல்கட்டை பேணுவது மிக அவசியம் என்றப்போதிலும், அதற்கான வழிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும் என்பது மிகமுக்கியமான விஷயம். தானாக முற்படுவது அல்ல இன்டர்நெட்டில் காணொளிகள் கண்டு வீட்டில் அரைகுறையாக ஏதாவது செய்வது எல்லாம் தவறு. சரியான மாஸ்டரின் ஆலோசனையின் படி உடலினை ஏற்றுவது தான் சரியான முறை.

 

உடலை பேணிக் காக்கும் போது, உணவுக்கட்டுப்பாட்டில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடற்பயிற்சி செய்வதற்கு முன் சாப்பிட வேண்டிய உணவுகள், உடற்பயிற்சிக்கு பின் சாப்பிட வேண்டிய உணவுகள் என தனி தனியே இருக்கின்றன. நம்மில் பலருக்கும் உடல் அதிகரிக்க, குறைக்க என்னென்ன உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரியுமோ தவிர, உடற்கட்டை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் பற்றி அவ்வளவாக தெரியாது. இந்த கட்டுரையின் மூலம் நீங்கள் தெரிந்துக் கொள்ள போவது அதைப் பற்றி தான்…

வேர்கடலை

உடற்பயிற்சி செய்பவர்கள், உடற்பயிற்சி செய்தப் பின் வேர்கடலை சாப்பிடுவது மிகவும் நல்லது. இதில் உள்ள ஊட்டச்சத்துகள் உடல் திறனை அதிகரிக்க உதவும்

மில்க் ஷேக்

மில்க் ஷேக் குடிப்பது நல்ல ஊட்டமிளிக்கும், இதோடு நீங்கள் வாழைப்பழமும் சேர்த்து உட்கொண்டால் உடலுக்கு தெம்பாக இருக்கும்.

ஃபிரஷ் ஜூஸ்

உடற்பயிற்சி செய்தவுடன். இரசாயன கலப்புடைய கூல் ட்ரிங்க்ஸ் குடிப்பதை தவிர்த்து, ஃபிரஷ் ஜூஸ் குடிக்கலாம். முக்கியமாக, மாதுளை, ஆப்பிள், முலாம்பழம் போன்றவை முகவும் நன்மை விளைவிக்கும்.

முட்டை

முட்டையை ஆம்லெட், ஆஃப்-பாயில் எல்லாம் செய்து உண்பதற்கு பதிலாக, நன்கு வேக வைத்து அதிலுள்ள வெள்ளை கருவை மட்டும் சாப்பிடுவது உடற்பயிற்சி செய்பவர்களுக்கு மிகவும் நல்லது.

பருப்பு வகைகள் உலர்ந்த திராட்சை

உடற்பயிற்சி செய்த பின்னர் பாதாம், முந்திரி, பிஸ்தா மற்றும் உலர்ந்த திராட்சைகள் போன்ற உணவுப் பொருட்களை உட்கொள்வது நல்ல ஆரோக்கியம் மற்றும் உடல்திறன் அதிகரிக்க உதவும்.

சீஸ்

சீஸில் நிறைய உயர்ரக புரதச்சத்து இருக்கிறது. பாலுக்கு நிகராக அனைத்து நற்குணங்களும் சீஸில் இருக்கிறது. இதை உணவோடு சேர்த்து சாப்பிடுவது உடல்திறன் அதிகரிக்க உதவும்.

புரதம் நிறைந்த உணவுகள்

உடற்பயிற்சி செய்பவர்கள் புரதச்சத்து உள்ள உணவுகளை அதிகம் உட்கொள்வது அவர்களது உடலை நன்கு பேணிக் காக்க உதவும்.

தயிர்

தயிர் பாலில் இருந்து எடுக்கப்படும் உணவுப் பொருள். இதிலும் அதிகப்படியாக புரதச்சத்து இருக்கிறது. மற்றும் உடல் குளிர்ச்சியடைய தயிர் உதவும்.

கோதுமை உணவுகள்

கோதுமையில் புரதச்சத்து மற்றும் வைட்டமின் சத்து அதிகம் உள்ளது. கொழுப்பு இல்லாத உணவென்பதால். உடற்பயிற்சி செய்பவர்கள் கோதுமை உணவுகளை விரும்பி சாப்பிடலாம்.

தானியங்கள்

பாசிப்பயிறு, துவரை, மொச்சை, கொள்ளு, எள்ளு போன்ற பயிர் வகைகளில் உள்ள நிறைந்த ஊட்டச்சத்து உடல்திறன் அதிகரிக்க உதவும். எனவே, உடற்பயிற்சி செய்பவர்கள் பயிர் வகை உணவுகளை அதிகம் சாப்பிடுவது நல்லது.

அரிசி

உடல் எடை அதிகரிக்க விருப்பபடுவர்கள் மட்டும் அதிக அரிசி உணவுகள் எடுத்துக்கொள்வது நல்லது. பொதுவாக நீங்கள் உங்களது உடலை நன்கு ஏற்றிய பின்பு அரிசி உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.

ஓட்ஸ்

உடற்பயிற்சி செய்பவர்கள், தினமும் காலை, மாலை வேளைகளில்ஓட்ஸ் மீல்ஸ் சாப்பிடுவது நல்லது. இது உங்களது உடல் மற்று இதயத்தை பாதுகாக்க உதவும்.

வாழைப்பழம்

உடற்பயிற்சி செய்பவர்கள் தினமும் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது. மற்ற பழங்களை விட ஊட்டச்சத்து நிறைந்த பழம் மற்றும் அனைத்து கால வேளைகளிலும் சுலபமாக கிடைக்கும் பழம், வாழைப்பழம்.

புரோட்டீன் பவுடர்

உடற்பயற்சி செய்பவர்கள் அவர்களது உடல்திறனை அதிகரிக்க புரோட்டீன் பவுடர் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், மாஸ்டரின் அறிவுரைப்படி அளவாக எடுத்துக்கொள்வது தான் சரி. அதேப்போல, புரோட்டீன் பவுடர் அதிகமாக உட்கொண்டால் பக்க விளைவுகள் ஏற்படும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

Related posts

நீங்க தேங்காய்ப்பால் பிரியரா? பக்க விளைவுகள் ஏற்படும் தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா அல்சர் நோயை விரைவில் குணமாக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

nathan

உடல்நலன் காக்கும் உணவுமுறை!

nathan

பழைய சோறு சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

புற்றுநோயை அழிக்கும் 30 உணவுகள்!

nathan

தொண்டை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் சுக்கு மிளகு பால்

nathan

தெரிஞ்சிக்கங்க…பிளாக் டீ குடிப்பதனால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

nathan

தெரிஞ்சிக்கங்க…தினமும் ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

nathan

மைக்ரோவேவ் செய்யும் அற்புதமான மாயங்கள்!

nathan