தேவையானவை:
கறுப்பு முழு உளுந்து – ஒரு கப்,
பச்சை மிளகாய் – 2,
இஞ்சி – சிறிய துண்டு,
சீரகம், கடுகு – தலா கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
தேங்காய் துருவல் – 3 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
* இஞ்சி, பச்சை மிளகாய், சீரகத்தை அரைத்துக் கொள்ளவும்.
* உளுந்தை 8 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் போட்டு வேக வைத்து எடுக்கவும்.
* வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, கறிவேப்பிலை தாளித்து. வெந்த உளுந்து, அரைத்த இஞ்சி விழுது, உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
* பச்சை வாசனை போனதும், தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
* இந்த சுண்டல் இடுப்பு எலும்புக்கு பலம் தரும். பெண்களுக்கு ஏற்ற சத்தான சுண்டல் இது.