தலைமுடி சிகிச்சை

உச்சந்தலையில் அதிகம் சேரும் அழுக்கை வெளியேற்றணுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

கூந்தல் பராமரிப்பு என்று வந்தால் முதலில் நாம் என்ன செய்வோம், முடியை எப்படி பளபளப்பாக்குவது, கூந்தலை எப்படி உறுதியாக்குவது என்று அதன் வெளிப்புற தோற்றத்தை மட்டுமே கவனிப்போம். ஆனால் தலைமுடியின் ஆரோக்கியத்தை நிர்வகிப்பதில் நம்முடைய உச்சந்தலை தான் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்கிறார்கள் கூந்தல் பராமரிப்பு நிபுணர்கள்.

எனவே நீங்கள் ஆரோக்கியமான முடியை பெற விரும்பினால் உங்க உச்சந்தலையை சுத்தமாக வைத்திருக்க வேண்டுமாம். எனவே முதலில் உச்சந்தலையில் உள்ள இறந்த செல்களை அகற்ற ஸ்க்ரப் செய்ய வேண்டுமாம். இது உங்க கூந்தல் பிரச்சனைகளை தடுத்து நிறுத்த உதவுகிறது. அதே மாதிரி கண்ட கண்ட கெமிக்கல் நிறைந்த ஷாம்பு, கண்டிஷனர்களை பயன்படுத்துவதை விட இயற்கையான கூந்தல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துவது நல்லது.

உச்சந்தலை அழுக்கால் ஏற்படும் பாதிப்புகள்

முடி மற்றும் உச்சந்தலையில் படிந்துள்ள அழுக்குகள், தூசிகள் உங்க சரும துளைகளை அடைக்கக் கூடும். எனவே சரும துளைகள் அடைக்கப்படுவதால் மயிர்க்கால்களில் இருந்து முடி வளர்வது தடைபடுகிறது. இதனால் தான் கூந்தல் பராமரிப்பு என்று வரும் போது ஹேர் மாஸ்க், ஹேர் ஆயில் மற்றும் ஷாம்பு பயன்படுத்துவதோடு ஹேர் ஸ்க்ரப்பிங் செய்வதும் மிக முக்கியம். இது சரும துளைகளை அடைத்து கொண்டிருக்கும் தூசிகள், இறந்த செல்கள், அழுக்குகள் இவற்றை வெளியேற்றி சுத்தம் செய்கிறது.

எப்படி உங்க உச்சந்தலையை வீட்டில் இருந்த படியே சுத்தம் செய்யலாம், வாங்க அதற்கான ஸ்க்ரப் வகைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

கடல் உப்பு மற்றும் லெமன் ஹேர் ஸ்க்ரப்

தேவையான பொருட்கள்:

* கடல் உப்பு – 3 டேபிள் ஸ்பூன்

* லெமன் ஜூஸ் – 2 டீஸ்பூன்

* ஆலிவ் ஆயில் – 1 டீஸ்பூன்

பயன்படுத்தும் முறை:

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”] * ஒரு பௌலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள்.

* முதலில் உங்க தலையை சிறிது தண்ணீர் கொண்டு நனைத்து கொள்ளுங்கள்.

* பிறகு இந்த ஸ்க்ரப்பை எடுத்து தலையில் தடவி உங்க விரல்களால் மசாஜ் செய்யுங்கள்.

* இதை சில நிமிடங்கள் செய்த பிறகு வெதுவெதுப்பான நீரைக் கொண்டு, மைல்டு ஷாம்பு மற்றும் கண்டிஷனர் கொண்டு கழுவி விடுங்கள்.

பேக்கிங் சோடா மற்றும் பட்டை பொடி ஸ்க்ரப்

உங்க உச்சந்தலையை சுத்தம் செய்ய பேக்கிங் சோடா மற்றும் பட்டை பொடி கலந்து ஸ்க்ரப் தயாரித்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* இலவங்கப்பட்டை பொடி – 1 டீஸ்பூன்

* ஆலிவ் எண்ணெய் – 1 டீஸ்பூன்

* பேக்கிங் சோடா – 2 டீஸ்பூன்

பயன்படுத்தும் முறை:

* ஒரு பௌலில் பட்டை, ஆலிவ் ஆயில், பேக்கிங் சோடாவை கட்டிகள் இல்லாமல் கரைத்து கொள்ளுங்கள்.

* வேண்டுமானால் அத்தியாவசியமான எண்ணெய் அல்லது சிறிது தண்ணீர் கூட சேர்த்துக் கொள்ளுங்கள்.

* பிறகு இந்த ஸ்க்ரப்பை பயன்படுத்தி உச்சந்தலையை நன்றாக தேய்த்து கழுவுங்கள். சில நிமிடங்கள் மசாஜ் செய்து கொள்ளுங்கள்.

தேன் மற்றும் சர்க்கரை ஹேர் ஸ்க்ரப்

உச்சந்தலையில் உள்ள இறந்த செல்களை நீக்கி, உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த தேன் மற்றும் சர்க்கரை ஹேர் ஸ்கரப் போடுங்கள்.

தேவையான பொருட்கள்:

* தேன் – 1 டீஸ்பூன்

* ஆலிவ் ஆயில் – 1 டீஸ்பூன்

* சர்க்கரை – 4 டீஸ்பூன்

பயன்படுத்தும் முறை:

* ஒரு பாத்திரத்தில் தேன், ஆலிவ் எண்ணெய், சர்க்கரையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

* இப்போது உங்க தலைமுடியை ஈரமாக்கி அதைக் கொண்டு ஹேர் ஸ்க்ரப் செய்யுங்கள். இது உங்க உச்சந்தலையை சுத்தமாக்க உதவுகிறது.

* இந்த ஹேர் ஸ்க்ரப் உங்க தலையில் இருந்து இறந்த சருமத்தை வெளியேற்றவும், அழுக்குகளையும் அகற்ற உதவுகிறது. இது உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலை இரண்டையும் ஆரோக்கியமாக வைக்க உதவும். அதோடு முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்க உதவி செய்யும்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button