Other News

ஆச்சரியப்படுத்தும் உண்மைகள்…நீங்கள் 4 ஆம் எண்ணில் பிறந்தவரா?

4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் நான்காம் எண்காரர்கள் ஆவர். இவர்கள் ராகு பகவான் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இவர்கள் சுதந்திரமாக இருக்க விருபுவார்கள். யாரும் இவர்களை கட்டுபடுத்த முடியாது. தந்திரத்துடன் கூடிய வீரத்தை கொண்டவர்கள். கடுமையான உழைப்பாளிகள். இவர்கள் எந்த நேரத்தில் என்ன செய்வார்கள், சொல்வார்கள் என்பதை கணிக்க முடியாது.

 

இவர்களுக்கு கடவுள் பக்தி மிகக் குறைவு. பெரும்பாலும் பகுத்தறிவு வாதிகளாகத் தான் இருப்பார்கள். இவர்களில் ஒரு சிலர் கையில் இருக்கும் பணத்தை தண்ணீர் போல செலவு செய்யும் குணம் கொண்டவர்கள். ஆடம்பரமாக வாழ ஆசைப்படுவார்கள். சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தங்களை மாற்றி கொள்வார்கள். தான் செய்வது தான் சரி என்று நினைப்பார்கள்.

 

பல காலம் உழைத்து சேர்த்த பணத்தை தனக்கு பிடித்த அற்ப காரியத்திற்காக செலவு செய்து விடுவார்கள். யாரையும் அவ்வளவு எளிதில் நம்ப மாட்டார்கள். கடவுள் பக்தியை மட்டும் இவர்கள் கொஞ்சம் வளர்த்துக் கொண்டால் வாழ்க்கையில் கண்டிப்பாக முன்னேறுவார்கள். இவர்கள் சுயநலவாதிகளாக இருப்பார்கள். மற்றவர்களிடம் கண்டிப்புடன் நடந்து கொள்வார்கள்.

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”] இவர்கள் யாரிடமும் நெருங்கி பழக மாட்டார்கள். அதனால் இவர்களுக்கு நட்பு வட்டாரம் அதிகம் இருக்காது. சிலர் சிறுவயதில் இருந்தே குடும்ப பாரத்தை சுமப்பார்கள். ஒரு சிலர் குடும்பமே உலகம் என நினைத்து வாழ்வார்கள். இவர்களுக்கு மனதுக்கு பிடித்த மாதிரி நல்ல வாழ்க்கை துணை அமைவது சற்று கடினம்.

 

ஒரு சிலருக்கு குழந்தை பிறப்பில் தாமதம் ஏற்படலாம். சாப்பாட்டு பிரியர்களாக இருப்பார்கள். இந்த எண் காரர்கள் பெரும்பாலோனோர் சற்று குண்டான உடலமைப்பை கொண்டவர்கள். விளையாட்டுத் துறையில் இவர்கள் ஈடுபட்டால் அதில் நன்றாக பிரகாசிப்பார்கள். இவர்களை யாரவது சீண்டினால் சும்மா இருக்க மாட்டார்கள். பழி வாங்கும் உணர்வு அதிகம் இருக்கும். எதையும் அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள். சந்தர்ப்பம் பார்த்து தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.

 

இவர்களுக்கு தலைவலி, நரம்புக் கோளாறுகள் ஏற்படலாம், அதனால் வண்டி, வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்ல வேண்டும். இவர்களுக்கு இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சனைகள் இவர்களுக்கு வரலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button