25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
the problem of SECVPF
தலைமுடி சிகிச்சை

பொடுகு பிரச்சனையில் இருந்து தலைமுடியை பராமரிக்க இந்த பொருள் போதும்! தெரிஞ்சிக்கங்க…

பொடுகு என்பது வறண்ட தலை அல்லது கிருமி பாதிப்பால் ஏற்படலாம். எக்ஸிமா, சோரியாஸிஸ் பாதிப்பு போன்றவைகளும் காரணமாக இருக்கலாம்.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்படும் பொடுகு பிரச்சினையயல் தாய்மார்கள் படும் பாடு அதிகம்.

சிலருக்கு இவை சில காரணங்களால் ஒத்துக் கொள்ளாமல் இருக்கலாம். பொதுவில் பொடுகினை தவிர்க்கவும், ஆரம்ப நிலையில் இருப்பதனை நீக்கவும் கீழ்க்கண்ட முறைகள் வெகுவாய் உதவும். அதிக பாதிப்பிற்கு மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

‘ மருந்து கடைகளில் கிடைக்கும் சாதாரண ஆஸ்பிரின் மாத்திரை இரண்டினை பொடித்து நைசாக்கி சிறிது தண்ணீரில் கலந்து ஈரமான தலையில் நன்கு தடவி விடுங்கள்.

2-3 நிமிடங்கள் ஊற வைத்து தலையை நன்கு நீரில் சுத்தம் செய்து விடலாம். சமையல் சோடா இரு டீஸ்பூன் எடுத்து சிறிது தண்ணீரில் கலந்து ஈர தலையில் மண்டையில் படும்படி தடவி 10 நிமிடங்கள் பொறுத்து குளிர்ந்த நீரில் தலையினை நன்கு அலசி விடவும்.

ஆப்பிள் சிடார் வினிகர் என்று கடையில் கிடைக்கும். இதனை சிறிதளவு நன்கு தலையில் தடவுங்கள்.

இதன் மருத்துவ குணம் கிருமி நாசினியாக செயல்படும். 15 நிமிடங்கள் தலையில் டவல் சுற்றி வைத்து பின்பு நன்கு தலையினை அலசி விடுங்கள். வாரம் இருமுறை கூட இதனைச் செய்யலாம்.

தேங்காய் எண்ணெய் கொண்டு தலையை மென்மையாய் மசாஜ் செய்யுங்கள். ஒரு மணி நேரம் கழித்து தலையை நன்கு சுத்தம் செய்து விடுங்கள்.

மிக சிறந்த முடி பராமரிப்பாக இது அமையும். ஒரு சிறிய கப் நீரில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தடவி ஐந்து நிமிடங்கள் கழித்து நீரில் தலைமுடியினை அலசுங்கள்.

பொடுகு மறையும் வரை தினமும் இதனை செய்யலாம். பொடி உப்பினை சிறிது நீரில் கலந்து ஈரமான தலையில் தடவி ஐந்து நிமிடங்களில் அலசுங்கள்.

வெள்ளை வெள்ளையாக கொட்டுவது நீங்கும். பூண்ட நசுக்கி சாறு எடுத்து தலையில் தடவி பின்னர் ஷாம்பு போட்டு அலசி விடுங்கள். ஆலிவ் எண்ணெய் கொண்டு தலையை மசாஜ் செய்து தலையை அலச முடியின் ஆரோக்கியம் சிறந்து இருக்கும்.

Related posts

உங்களுக்கு தெரியுமா பூண்டை இதோட கலந்து தேய்ச்சா முடி கிடுகிடுனு வேகமா வளருமாம்…

nathan

பளபளக்கும் கூந்தல் வேணுமா?

nathan

தெரிஞ்சிக்கங்க…நரைமுடிக்கு மூலிகை ஹேர் டை போட்டால் உடனே மாற்றம் தெரியுமா?

nathan

உங்கள் கூந்தல் வளர்ச்சியை எப்படி மெருகேத்தலாம்? தெரிந்துகொள்வோமா?

nathan

சூப்பர் டிப்ஸ்! இளநரையை விரட்டணுமா? அப்ப இதை முயன்று பாருங்கள்…

nathan

தலைமுடியை வலுவடையச் செய்யும் எண்ணெய்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…உங்க தலை முடி அடிக்கடி பிளவு ஏற்பட்டு உதிர்கிறதா?

nathan

கற்றாழை முடி உதிர்வை தடுத்து ஆரோக்கியமாக வைக்கிறது!

nathan

உங்களுக்கு தெரியுமா பீர் குடிக்கு மட்டுமல்ல, முடிக்கும் தான்!!!

nathan