தலைமுடி சிகிச்சை

தலைக்கு சீகைக்காயைப் பயன்படுத்துவதால் பெறும் நன்மைகள்!!!தெரிஞ்சிக்கங்க…

சீகைக்காய் ஓர் அற்புதமான மூலிகை. இதனைக் கொண்டு தலைமுடியைப் பராமரித்து வந்தால், ஏராளமான நன்மைகளைப் பெறலாம். இதனைக் கொண்டு ஷாம்பு தயாரிக்கலாம் அல்லது ஹேர் பேக் கூட தயாரிக்கலாம். இந்த ஷாம்பு மற்றும் ஹேர் பேக்குகளைத் தயாரிக்கும் முன், சீகைக்காயினால் நம் தலைமுடிக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

பட்டுப்போன்ற தலைமுடி

சீகைக்காய் கொண்டு தலைமுடியைப் பராமரித்தால், தலைமுடி பட்டுப்போன்று மென்மையாக இருக்கும். அதிலும் சீகைக்காயை ஹேர் பேக் செய்து தலைக்கு பயன்படுத்தினால், ஸ்கால்ப்பில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, ஸ்கால்ப்பின் ஆரோக்கியமும் மேம்படும்.

பொடுகைப் போக்கும்

சீகைக்காயில் பூஞ்சை எதிர்ப்பு பொருள் மற்றும் ஸ்கால்ப்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இதர ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே பொடுகுப் பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள் தங்களின் தலைமுடிக்கு சீகைக்காயைப் பயன்படுத்தி வந்தால், விரைவில் போக்கலாம்.

அடர்த்தியான முடி

சீகைக்காய் தலைமுடியின் மயிர்கால்களை வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும். எனவே உங்களுக்கு தலைமுடி அடர்த்தியாக வேண்டுமானால், சீகைக்காயை உலர வைத்து, தேங்காய் எண்ணெயில் போட்டு கொதிக்க விட்டு, அந்த எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து வந்தால், தலைமுடி வலிமையாகி முடி உதிர்வது குறையும்.

சீகைக்காய் ஷாம்பு செய்வது எப்படி?

இரவில் படுக்கும் போது சீகைக்காய், பூந்திக் கொட்டை மற்றும் உலர்ந்த நெல்லி ஆகியவற்றை நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அவற்றை அடுப்பில் வைத்து, அப்பொருட்கள் மென்மையாகும் வரை நன்கு கொதிக்க வைத்து இறக்கி, நீரை வடிகட்டிவிட்டு, குளிர வைத்து அரைத்தால், சீகைக்காய் ஷாம்பு தயார்.

சீகைக்காய் ஹேர் பேக்

உலர்ந்த சீகைக்காய், வேப்பிலை, வெந்தயப் பொடி மற்றும் சிறிது உலர்ந்த நெல்லி ஆகியவற்றுடன் சேர்த்து ஹேர் பேக் செய்யலாம். அதற்கு இந்த பொருட்கள் அனைத்தையும் ஒரு கப் நீரில் போட்டு 15 நிமிடம் கொதிக்க விட்டு, பின் அவற்றில் உள்ள நீரை வடிகட்டி, அந்த பொருட்களை கையால் மசித்து, தலையில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இப்படி செய்தால், முடி நன்கு வலிமையோடு ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்கும்.

15 1444886378 5 shikakai hair pack

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button