28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
ruitsthatsafeguardyourheart
ஆரோக்கிய உணவு

இதயம் வலுவடைய உதவும் பழங்கள்!!! அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்..

மனித உடலின் என்ஜின் எனக் கருதப்படுவது இதயம். இதயத்தைப் பாதுகாப்பது மிகவும் அவசியமான ஒன்று. ஏனெனில் உடல் பருமன் அதிகரித்தல், இரத்தக் கொதிப்பு, இரத்த கொழுப்பு, இரத்த சர்க்கரை என எது அதிகரித்தாலும் இதயம் பாதிக்கப்படும். எனவே நாம் உட்கொள்ளும் உணவை சரியான முறையில் தேர்வு செய்து, அதை சரியான அளவில் உட்கொள்ள வேண்டியது அவசியம். பொதுவாகவே நாம் இன்றளவில் அதிக ரெடிமேட் உணவுகளையும், மைதா கலந்த உணவுகளையும் அதிகம் உட்கொள்கிறோம். இவை உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்க கூடியவை ஆகும்.

முடிந்த வரையிலும் இதய நலத்தை பாதுகாக்க காய்கறிகளும், பழங்களும் உட்கொள்வது நன்மை விளைவிக்கும். பொதுவாக காலை நேர உணவுகளில் கடின உணவுகளை தவிர்த்துவிட்டு பழங்களை சாப்பிடுவது இதய நலத்திற்கு நல்ல பயனளிக்கும். பழங்களிலும் தேர்வு செய்யப்பட்ட, இதயத்திற்கு நன்மை விளைவிக்கும் பழங்களை உட்கொள்வது மிகவும் சிறந்தது. இதய நோயில் இருந்து இதயத்தை வலுவடைய உதவும் 13 பழங்களைப் பற்றி இனி தெரிந்துக் கொள்ளலாம்…

மாதுளம் பழம்

மாதுளம் பழத்தை எடுத்து தோலை நீக்கி நன்கு அரைத்து பிழிந்து வடிகட்டி அந்த சாற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுவடையும்.

அத்திப்பழம்

அத்திப்பழங்களை சுத்தம் செய்து நன்கு வெயிலில் காய வைத்து கல்லுரலில் போட்டு இடித்து வஸ்த்திரகாயம் (துணியில் சலித்தல்) செய்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பாலில் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால், இதய பலவீனம் குறையும்.

திராட்சை

திராட்சைப் பழங்களை வெந்நீரில் ஊற வைத்து சாறு எடுத்து அதனுடன் சமஅளவு துளசி சாற்றை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், இதயத்தில் ஏற்படும் படபடப்பு குறையும்.

கிஸ்மஸ் பழம்

சிறிதளவு கிஸ்மஸ் பழம் மற்றும் கொத்தமல்லியை தண்ணீரில் இரவு முழுவதும் சுட வைத்து காலையில் அரைத்து வடிகட்டி குடித்தால், மார்பு படபடப்பு மற்றும் மார்பு வலி குணமாகும்.

ஆரஞ்சுப் பழம்

ஆரஞ்சுப் பழம் தினசரி உணவுடன் சாப்பிட்டு வந்தால் இதயம் பலமாக இருக்கும்.

ஆப்பிள்

ஆப்பிளில் உள்ள ஃப்ளேவோனாய்டுக்கள் இதயத் தமனிகளைப் பாதுகாக்க உதவுகிறது. மற்றும் கொழுப்பினை குறைக்கும், இலகுவடைய செய்யவும் ஆப்பிள் பயன் தருகிறது.

ஆப்ரிகாட்

ஆப்ரிகாட்டில் இருக்கும் வைட்டமின் ஏ, சி, ஈ மற்றும் கே, நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துகள் இதயத்தை வலுவுடன் வைத்துக் கொள்ள உதவுகின்றன.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் உடலில் இரத்த்க்கொதிப்பை அதிகரிக்காமல் இருக்க உதவுகிறது. மற்றும் இதில் இருக்கும் வைட்டமின் பி 6 மற்றும் சி, நார்ச்சத்துகள் இதயத்தைப் படபடப்பின்றி வைத்திட உதவுகிறது.

பெர்ரிப் பழங்கள்

ப்ளூபெர்ரி, ப்ளாக்பெர்ரி, ரெசப் பெர்ரி போன்று பெர்ரிகளில் பல வகை பழங்கள் உள்ளன. பெர்ரி பழங்களில் வைட்டமின் சி, பொட்டாசியம், மங்கனீஸ் மற்றும் நார்சத்து போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. தொடர்ந்து 8 வாரங்கள் பெர்ரி பழங்களை நீங்கள் சாப்பிட்டு வந்தால். HDL (High-density lipoprotein) எனப்படும் இதயத்திற்கு தேவையான நல்ல கொழுப்புச்சத்து கிடைக்கும். இது இதயத்திற்கு ஆரோக்கியத்தை அழிக்கக்கூடியது ஆகும்.

கிவிப்பழம்

கிவிப் பழத்தில் வைட்டமின் ஈ மற்றும் சி, மக்நீசியும் மற்றும் நார்ச்சத்துகள் போன்ற ஊட்டச்சத்துகள் இருக்கின்றன. வைட்டமின் ஈ நமது உடலில் LDL (Low-density lipoprotein) எனப்படும் தீயக் கொழுப்புச்சத்தை குறைக்க உதவுகிறது.

பப்பாளி

பப்பாளியில் உயர்ரக வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ, கால்சியம், பொட்டாசியம், மக்நீசியும், மற்றும் ஃபோலேட் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. முக்கிடமாக பப்பாளியில் இருக்கும் ஃபோலேட்டின் சத்து இதயத்திற்கு நல்ல அர்ரோகியத்தை அளிக்கிறது.

பீச் பழம்

பொதுவாகவே வைட்டமின் சி, ஈ, மற்றும் கே; நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துகள் இதய நலத்திற்கு முக்கியமாக தேவைப்படுகிறது. பீச் பழத்தில் இவை அனைத்தும் அதிகமாக நிறைந்திருக்கின்றன.

தக்காளிப் பழம்

தக்காளியில் இருக்கும் வைட்டமின் சி, ஈ, பொட்டாசியம், ஃபோலேட் போன்ற ஊட்டச்சத்துகள் இதயத்தை கார்டியோவாஸ்குலர் பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கிறது.

Related posts

சர்க்கரை நோயாளிகள் பேரிச்சம் பழம் சாப்பிடலாமா ?

nathan

உடலுக்கு வலுசேர்த்து ஆரோக்கியம் காக்கும் பயறுகள்!

nathan

சப்பாத்தி ரோல்

nathan

உங்களுக்கு தெரியுமா? தினம் ஒரு கிவி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

nathan

நீங்களும் முயற்சி செய்யுங்கள் ! உடலில் தேங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைக்க உதவும் அற்புதமான ஆரோக்கிய பானங்கள்!!!

nathan

தெரிஞ்சிக்கங்க… கருவின் சிறந்த மன வளர்ச்சிக்கு கர்ப்பிணி பெண்கள் தினமும் எவ்வளவு பாதாம் சாப்பிடலாம் ?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…உங்களுக்கு பால் பிடிக்காதா? இதோ பாலுக்கு இணையான சில உணவுப் பொருட்கள்!!!

nathan

தினமும் இந்த 7 வகையான டீயில ஏதாவது ஒன்ன குடிச்சிட்டு வந்தா மூளை சுறுசுறுப்பாகும்..!

nathan

தினமும் முட்டை சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?

nathan