25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
7014542
சமையல் குறிப்புகள்

வீட்டிலேயே செய்யலாம் மலபார் பரோட்டா

தேவையான பொருட்கள் :

மைதா மாவு – அரை கிலோ,

முட்டை (விருப்பப்பட்டால்) – ஒன்று,
பால் – 100 மில்லி,
தயிர் – 50 மில்லி,
தூள் உப்பு, சர்க்கரை – தலா ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், தண்ணீர் – தேவைக்கேற்ப

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் முட்டை, பால், தயிர், தூள் உப்பு, சர்க்கரை அனைத்தும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலக்கவும்.

பின்னர், அதில் தண்ணீர் ஊற்றிக் கலக்கவும். அதனுடன் மைதா மாவை சேர்த்து நன்றாகப் பிசைந்து, சுமார் ஒன்றரை மணி நேரம் ஊற வைக்கவும்.

பிறகு, சிறிது மாவை எடுத்து உருண்டையாக செய்து, தட்டி, இரண்டு கைகளிலும் வீசி, மடித்து எடுக்கவும்.

பின்னர் மீண்டும் பரோட்டாவாக தட்டி வைக்கவும்…

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் செய்து வைத்த பரோட்டாவை போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

பிறகு, அதனை கைகளில் வைத்து அடித்து பரிமாறவும்.

சூப்பரான மலபார் பரோட்டா ரெடி.

Related posts

சூப்பரான கும்பகோணம் கடப்பா சாம்பார்

nathan

சுவையான வெஜ் கீமா

nathan

பிரட் பாயாசம்

nathan

சூப்பரான உருளைக்கிழங்கு தயிர் கிரேவி

nathan

செட்டிநாடு இட்லி பொடி

nathan

முருங்கைக்கீரை புலாவ் ரெடி….

sangika

சுவையான மோர் ஃப்ரைடு சிக்கன்

nathan

சுவையான எண்ணெய் கத்திரிக்காய் பொரியல்

nathan

சுவையான ஆந்திரா ஸ்டைல் கோங்குரா சிக்கன்

nathan