28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
cover 22 1495432497
ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க… கர்ப்ப காலத்தில் சீஸ் சாப்பிடுவது குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்குமா?

சீஸ் கால்சியத்தின் ஆதாரமாக விளங்குகிறது. நிறைய சீஸ் வகைகள் சாப்பிடுவதற்கு ஏற்றதாக உள்ளது. ஆனால், சில வகையான சீஸ்களை சாப்பிடுவது பாதுகாப்பானது அல்ல. ஏனென்றால் அவற்றில் லிஸ்டீரியா போன்ற குழந்தைக்கு ஆபத்து விளைவிக்கும் பாக்டீரியாக்கள் உள்ளன.

கர்ப்ப காலத்தில் சாப்பிட கூடாது

மென்மையான சீஸ்களான கேம்பம்ப்ர்ட் மற்றும் செவ்ரே (ஆட்டிலிருந்து கிடைக்கும் சீஸ்) போன்றவை கர்ப்ப காலத்தில் சாப்பிட ஏற்றவை அல்ல. ப்ளூ வைண்டு சீஸ் (blue-veined cheeses), டனிஸ் ப்ளூ (danish blue) மற்றும் ரோக்யூபோர்ட் ( roquefort ) ஆகியவற்றை கர்ப்ப காலத்தில் சாப்பிட கூடாது.

கர்ப்ப காலத்தில் சாப்பிடலாம்

கடினமான ப்ளூ வைண்டு சீஸ்களான, ஸ்டில்டன்களில் மென்மையாக்க பயன்படுத்தப்படும் லிஸ்டீரியாக்கள் அதிக அளவில் சேர்த்தப்படுவது இல்லை. எனவே இது கர்ப்ப காலத்தில் சாப்பிட ஏற்றதாக உள்ளது.

சமைத்து சாப்பிடவும்

இருப்பினும் கடினமான ப்ளூ சீஸ்களில் மிக குறைந்த அளவு மட்டுமே லிஸ்டீரியாக்கள் சேர்க்கப்பட்டிருந்தாலும், அவை முற்றிலும் இல்லாமல் இருப்பதே நல்லது. எனவே சமைக்கப்படாத சீஸ்களை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

லிஸ்டிரியோஸிஸ்

நீங்கள் இந்த லிஸ்டீரியாவினால பாதிக்கப்பட்டிருந்தால், உங்களுக்கு லிஸ்டிரியோஸிஸ் என்ற காய்ச்சல் உண்டாகும். இது சில வாரங்களுக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்தாலும், பிறகு உங்களுக்கு காய்ச்சல் அறிகுறி தென்படும்.

கருசிதைவு

இந்த லிஸ்டிரியோஸிஸ் காய்ச்சல் தாய்க்கு சிறிதளவு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தினாலும், குழந்தையின் உடல்நலத்தில் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தும். சில சமயம் இது கருச்சிதைவை உண்டாக்கும். மேலும் ஐந்தில் ஓரு குழந்தை பிறக்கும் போது இறக்கும் வாய்ப்பு உள்ளது.

கர்ப்பமான பெண்களை தாக்கும்

லிஸ்டிரியோஸிஸ் காய்ச்சல் கர்ப்பமாக உள்ள பெண்களை அதிகமாக தாக்குகிறது. ஏனெனில் கர்ப்பமாக உள்ளவர்களுக்கு இந்த காய்ச்சலை எதிர்த்து போராடும் திறன் குறைவாக உள்ளது.

நன்கு சமைக்க வேண்டும்

நீங்கள் மென்மையான சீஸ்கள், ப்ளூ வைண்டு சீஸ்கள் ஆகியவற்றை சாப்பிட நேர்ந்தால், அவற்றை நன்றாக சமைத்து சாப்பிடுங்கள். சமைக்கும் போது இதில் உள்ள பாக்டீரியாக்கள் கொல்லப்படுகின்றன. சீஸ்களை உருகும் வரை மட்டும் சமைக்காமல், சற்று கொதிக்கும் வரை சமைக்க வேண்டியது அவசியம்.

கடினமான சீஸ்களில் ஆபத்து குறைவு

பசுவின் பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட கடினமான சீஸ்களை சாப்பிடுவது நல்லது. இவற்றில் பார்மிசன் உள்ளது. இதில் மிக சிறிதளவு லிஸ்டிரீயா என்ற பாக்டீரியா மட்டுமே உள்ளது. எனவே இவை கர்ப்ப காலத்தில் ஆபத்தை விளைவிக்காது.

Related posts

உங்கள் மதிய உணவு ஆரோக்கியமானதுதானா?

nathan

ஆண் மீனைவிட பெண் மீனைத்தான் சாப்பிடவேண்டும். ஏன்.. எப்படி?

nathan

ஆப்பிளை தோலோடு சாப்பிடலாமா? மீறி சாப்பிட்டால் என்ன நடக்கும்? இத படிங்க!

nathan

நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் கற்றாழை சாறு -தெரிஞ்சிக்கங்க…

nathan

30 நாட்கள் இஞ்சியை எடுத்துக்கொண்டால் நடக்கும் அற்புதம்-தெரிஞ்சிக்கங்க…

nathan

சரும பொலிவுக்கு பப்பாளி – ஆரஞ்சு ஜூஸ்

nathan

வெறும் வயிற்றில் காலையில் என்ன சாப்பிடலாம்?

nathan

முளைகட்டிய தானியங்கள் நல்லதா? கெட்டதா? தெரிந்து கொள்ளுங்கள்

nathan

சூப்பரான புடலங்காய் கூட்டு

nathan