33.9 C
Chennai
Thursday, May 15, 2025
NEGYNLV
Other News

சிறுவர்களுக்கு கொரோனா தொற்றைக் கண்டறிவது எப்படி…டொக்டர் விளக்கம்…

சிறுவர்கள் கொவிட் – 19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதைக் கண்டறிவது எப்படி? என்பது குறித்து ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்திய நிபுணர் டொக்டர் ஜி. எஸ். விஜேசூரிய விளக்கம் அளித்துள்ளார்.

குழந்தையின் வழக்கமான நடவடிக்கைகளை தொடர்ந்து அவதானிப்பதன் மூலம் கொவிட் – 19 தொற்று அறிகுறிகளை அடையாளம் காண முடியும் என்று வைத்தியர் தெரிவித்துள்ளார். இதற்கமைவாக, பின்வரும் இயல்கான ஆற்றலில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவர்கள் நடக்கும்போது வழக்கத்தை விட கடினமான சோர்வுடன் காணப்படுகின்றனரா? மிகக் குறைந்த தூரம் நடக்கும்போது நிற்கின்றனரா ? உட்காருகின்றனரா ? சுவாசிக்கும் தன்மை அதிகரிக்கின்றதா? சிறுவர்களின் உதடுகள் கருப்பு நிறமாக மாறுகின்றதா? கண் நிறத்தில் மாற்றம் ஏற்படுகின்றதா? சருமத்தில் மாற்றத்தைக் காணக்கூடியதாகவுள்ளதா ? இத்தகைய அறிகுறிகள் காணப்படும் சிறுவர்களின் ஒக்ஸிஜன் அளவு குறைந்துள்ளதையே எடுத்துக்காட்டும் அறிகுறியாகும் என்று வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.

இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் மத்தியில் இத்தகைய அறிகுறிகளைக் கவனிப்பது மிகவும் கடினம் என்று அவர் மேலும் கூறினார்.

Related posts

180 நாட்களில் 21 கோடி வருவாய் ஈட்டிய காய்கறி விற்கும் இளைஞர்

nathan

கழுதைப் பால் பண்ணை தொடங்கிய முன்னாள் ஐடி ஊழியர்

nathan

வருங்கால கணவரை கதறவிட்ட இந்திரஜா! நடந்தது என்ன?

nathan

தெரிஞ்சிக்கங்க… மே மாதத்தில் பிறந்தவர்களின் உண்மையான குணம் என்ன தெரியுமா?

nathan

நயன்தாராவின் மகன்களா இது! நன்றாக வளர்ந்துவிட்டார்களா..

nathan

உங்க பைக், கார் வெள்ளத்துல சிக்கிடுச்சா?இன்சூரன்ஸ் பெறும் வழிமுறைகள் இதோ!

nathan

ஆசிய விளையாட்டில் இந்தியா 100 பதக்கங்களை கைப்பற்றி சாதனை!

nathan

கேப்டன் விஜயகாந்த் உருவப்படத்திற்கு நடிகை ரோஜா மலர்தூவி மரியாதை

nathan

காதலனை தேடி கோபிசெட்டிபாளையம் வந்த இளம்பெண்

nathan