22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
21 613061a2907d4
அழகு குறிப்புகள்

இளவரசர் ஹரியின் உண்மையான தந்தை யார்?தோழி கூறும் தகவல்

இளவரசி டயானாவுக்கும் இளவரசர் சார்லசுக்கும் இடையில் திருமண வாழ்வில் பிரச்சினைகள் உருவான நிலையில், சார்லஸ் தன் முன்னாள் காதலியான கமீலாவுடனான தொடர்பை மீண்டும் புதுப்பித்துக்கொள்ள, டயானாவும் தனது குதிரைப் பயிற்சியாளரான ஒருவருடன் உறவை ஏற்படுத்திக்கொண்டுள்ளார்.

அவரது பெயர் James Hewitt. டயானாவுக்கு Hewittக்கும் இடையிலான உறவு அவர்களை எவ்வளவு பாதித்ததோ தெரியாது, ஆனால், அதைவிட அதிகமாக இளவரசர் ஹரியை அது பாதித்தது. காரணம் இளவரசர் ஹரியின் தந்தை இளவரசர் சார்லஸ் அல்ல, Hewittதான் என பல செய்திகள் வெளிவரலாயின, ஹரியே தந்தையான பிறகும், இன்னமும் அப்படியான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

தனக்கும் Hewittக்கும் இடையில் தவறான உறவு இருப்பதை டயானாவே 1995ஆம் ஆண்டு உறுதி செய்தார். சார்லஸ், கமீலாவுடன் தவறான உறவு வைத்திருந்ததால் அவரை வெளிப்படையாக அவமதிப்பதற்காக அவர் செய்த செயல், அவரது அன்பு மகனின் வாழ்வில் தீராப்பழியாகிவிடும் என்பதை நினைத்துப்பார்க்க அவர் தவறிவிட்டார்.

 

சார்லஸ், கமீலாவுடன் தவறான உறவு வைத்திருந்தது உண்மைதான். ஆனால், டயானாவும் சாதாரண ஆள் அல்ல என்பதும் ஒரு கசப்பான உண்மைதான். உயிரிழக்கும்போதுகூட அவர் வேறொரு ஆணுடன்தான் இருந்தார் என்பதை உலகமே அறியும்.

உலகுக்கு தன் அப்பாவியான முகத்தையும், புன்னகை புரியும் முகத்தையும் காட்டிய டயானாவுக்கு வேறொரு முகமும் இருந்துள்ளது. அப்படி தனது வாழ்வில் உள்ள இரகசியங்களை டயானா நம்பி பகிர்ந்துகொண்ட ஒரு பெண் சாரா ஃபெர்குசன் (Sarah Ferguson). இந்த சாராதான் இளவரசிகள் யூஜீனி மற்றும் பீட்ரைஸின் தாய்.

தனது அந்தரங்கமான இரகசியங்களை தனது நெருங்கிய தோழியான இந்த சாராவுடன் தான் டயானா பகிர்ந்துகொள்வதுண்டு. ஆனால், என்று டயானா விபத்தொன்றில் அகால மரணம் அடைந்தாரோ, அன்றே அந்த இரகசியங்களை வெளியிடுவதில்லை என சத்தியம் செய்த சாரா, அதற்குப்பின் அவற்றைக் குறித்து ஒரு முறை கூட பேசியதில்லை. ஆனால், அந்த இரகசியங்களில் ஹரியின் தந்தை Hewitt என்ற விடயம் இல்லை என்கிறார் அவர்.

தன்னிடம் டயானா எந்த இரகசியத்தையும் மறைத்ததில்லை என்று கூறும் சாரா, ஹரியின் தந்தை Hewitt அல்ல, சார்லஸ்தான் என்பது மட்டும் உறுதி என்கிறார். ஹரியின் தந்தை Hewitt என்னும் இந்த வதந்தி நீண்ட காலமாக உலவி வருவதாக கூறும் சாரா, தான் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

 

1984ஆம் ஆண்டுதான் டயானா ஹரியை கருவுற்றிருந்தார் என்று கூறும் சாரா, அப்போது அவர் Hewittஐ சந்திக்கவேயில்லை. 1986க்கும் 1991க்கும் இடையில்தான் Hewitt டயானாவுக்கு குதிரைப் பயிற்சி அளித்தார். அப்படி இருக்கும்போது ஹரி எப்படி Hewittஇன் மகனாக ஆக முடியும் என்கிறார் அவர்.

இந்த விடயத்தை டயானாவுடன் தொடர்பிலிருந்த Hewittம் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

பருக்களால் உண்டான தழும்புகள், புள்ளிகள் ஆகியவற்றை மறைக்க உருளைக் கிழங்கு பேஸ் பேக்!….

nathan

உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை ஒருங்கே கொண்ட சிகிச்சைகளில் இந்த எண்ணெய் குளியலுக்கு முக்கிய பங்கு உள்ளது.

sangika

விரைவில் கருவளையத்தை போக்கும் வழிமுறைகளை பார்க்கலாம்.

nathan

மணக்கும் மல்லிகை எண்ணெய்

nathan

அச்சச்சோ சிவப்பழகு க்ரீம்!

nathan

தழும்பை ஒரே வாரத்தில் போக்க இந்த உப்பு மட்டும் போதும்..!

nathan

நடிகை பிரியாமணியை அறைந்தாரா இயக்குனர் பாரதிராஜா!வெளிவந்த ரகசியம்!

nathan

வெளிவந்த தகவல் ! பிக் பாஸ் சீசன் 5-ல் பங்கேற்கும் ஜேர்மன் வாழ் இலங்கை தமிழ்ப் பெண்!

nathan

உங்கள் முகத்திற்கு மிருதுவான மற்றும் பளபளப்பான தோற்றத்தை பெற பாதாம் எண்ணெயை பயன்படுத்தும் 10 வழிகள்!!

nathan