ஒரு பெண்ணுக்கு பிரசவ காலம் என்பது மிகவும் உன்னதமான காலம். இந்த பத்து மாத காலத்தில் நன்றாக சாப்பிட்டு உடம்பை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்றாலும் சில உணவுகளை சாப்பிடமால் இருப்பதே நல்லது. பப்பாளி, அன்னாச்சி போன்ற சில உணவுகளை சாப்பிடக்கூடாது என்று நமக்கு தெரிந்தாலும், ஒரு சிலருக்கு தெரியாத சில உணவுகளும் உள்ளன. அவை என்னவென்று காண்போம்.
மீன் மற்றும் கடல் உயிரினங்கள்
சில வகையான மீன்கள் மற்றும் கடல் உயிரினங்களில் மெர்குரி அதிகமாக உள்ளது. இவை முளைக்கு பாதிப்பை உண்டாக்குகின்றன எனவே இவற்றை தவிர்ப்பது நல்லது.
மிருதுவான சீஸ்
சீஸை மிருவதுவாக்குவதற்கு லிஸ்டிரியா என்னும் பாக்டீரியா பயன்படுத்தப்படுகிறது. இதனால் லிஸ்டிரியோசிஸ் நோய் வருகிறது. மேலும் குறை பிரசவம் ஆவதற்கும் காரணமாகிறது.
பானி பூரி
பானி பூரி மட்டுமின்றி மற்ற எந்த உணவையும் ரோட்டு கடைகளில் சாப்பிடுவதை தவிர்க வேண்டும். அங்கு சாப்பிடுவதால், புட் பாய்சன், வயிற்று உப்புசம் ஆகியவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. மேலும் அவை சுத்தமாக இருப்பது சந்தேகம் தான். நல்ல உணவு விடுதியில் சாப்பிடலாம்.
சமைக்காத முட்டை
சமைக்கப்படாத முட்டையை சாப்பிடுவது அல்லது பாதி சமைக்கப்பட்ட முட்டையை சாப்பிடுவது வயிற்றுப்போக்கு மற்றும் வாந்திக்கு காரணமாக அமையும்.
கழுவாத காய்கறிகள் மற்றும் பழங்கள்
காய்கறிகளில் மருந்துகள் ஏதேனும் தெளிக்கப்பட்டிருக்கலாம். எனவே அவற்றை கழுவி தான் பயன்படுத்த வேண்டும். முட்டைகோசை தவிர்ப்பது நல்லது.
சாலட்
புரூட் சாலட்கள் மற்றும் இறைச்சி போன்றவற்றை கடைகளில் சாப்பிடுவதை விட வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். கடைகளில் பழங்கள், காய்கறிகள் மற்றும் இறைச்சி ஆகியவற்றை பதப்படுத்தாலாம். இதனால் லிஸ்டிரியா பாக்டீரியா அதில் உருவாகிறது.
குளிர்பானங்கள்
கேன்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் குளிர்பானங்கள் மற்றும் அதிக நாட்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதை கர்ப்ப காலத்தில் முழுமையாக தவிர்க வேண்டும்.
கொழுப்பு மிகுந்த உணவுகள்
கொழுப்பு மிகுந்த உணவுகளை உண்பதால் உடல் எடை அதிகரித்துவிடும். பிரசவத்திற்கு பின்னால் உங்களுக்கு அசௌகரியமாக இருக்கும்.